Published:Updated:

நயன்தாராவுடன் திருமணம் எப்போது? - விக்னேஷ் சிவன் சொல்லும் ரகசியம்

விஜய் சேதுபதி, நயன்தாரா
பிரீமியம் ஸ்டோரி
விஜய் சேதுபதி, நயன்தாரா

இன்னும் சொன்னால் டைட்டிலிலேயே அதோட கதை இருக்கு. ஒருத்தருக்கு இரண்டு பேர் மேல காதல் சாத்தியமா... அப்படியிருக்கிற காதலின் அடுத்த கட்டம் என்ன

நயன்தாராவுடன் திருமணம் எப்போது? - விக்னேஷ் சிவன் சொல்லும் ரகசியம்

இன்னும் சொன்னால் டைட்டிலிலேயே அதோட கதை இருக்கு. ஒருத்தருக்கு இரண்டு பேர் மேல காதல் சாத்தியமா... அப்படியிருக்கிற காதலின் அடுத்த கட்டம் என்ன

Published:Updated:
விஜய் சேதுபதி, நயன்தாரா
பிரீமியம் ஸ்டோரி
விஜய் சேதுபதி, நயன்தாரா

“முதல் படம் பண்ணிட்டு அடுத்த படத்துக்குக் கஷ்டப்பட்டபோது தனுஷ் சார் மனசு வந்து கொடுத்த வாய்ப்புதான் ‘நானும் ரவுடிதான்.’ அதற்குப் பிறகு நாலைந்து வருஷங்களா ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’தான் மனசுக்குள்ளே இருந்துகிட்டே இருந்தது. சதா அதை மெருகேத்திக்கிட்டே இருந்தேன். இப்ப அது படமாகியிருக்கு. விஜய் சேதுபதி, நயன்தாராவுடன் இன்னொரு ஹீரோயின் கதைக்குத் தேவைப்பட்டாங்க. அதுக்கான ஆள் சரியாக அமையாமல் அதற்கு மேலே போக முடியாமல் இருந்த போதுதான் சமந்தா உள்ளே வந்தாங்க.விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா இந்த மூன்று பேர் கெமிஸ்ட்ரிதான் முக்கியம். படம் அதிலேயே 50% நல்லா வந்த மாதிரி ஆகிடுச்சு. ரசிகர்களுக்கு இந்தப் படத்தின்மீது அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது தெரியுது. ஒரே வித்தியாசம் என்னன்னா நீங்க உங்களுக்குப் பிடிச்ச படத்தைப் பார்க்க, அது எப்போ வரும்னு எதிர்பார்ப்போடு காத்திருப்பீங்க. நான் என்னன்னா, எல்லோரும் விரும்புகிற அந்தப் படத்தை நல்லபடியாகக் கொடுக்க முயற்சிகள் செய்துகிட்டிருக்கேன்.’’ காத்திருக்கிற உதவி இயக்குநர்களிடம் ‘தேர்ட்டி மினிட்ஸ்’ என்று சொல்லி அனுப்பிவிட்டு கடிகாரப் புன்னகையுடன் பேச ஆரம்பிக்கிறார் இயக்குநர் விக்னேஷ் சிவன். நயன்தாரா மட்டுமன்றி நம்மாலும் விரும்பப்படுகிற இயக்குநர்.

நயன்தாராவுடன் திருமணம் எப்போது? - விக்னேஷ் சிவன் சொல்லும் ரகசியம்

“ `காத்து வாக்குல இரண்டு காதல்’ தலைப்பே பல விஷயங்களைச் சொல்லுதே?’’

“இன்னும் சொன்னால் டைட்டிலிலேயே அதோட கதை இருக்கு. ஒருத்தருக்கு இரண்டு பேர் மேல காதல் சாத்தியமா... அப்படியிருக்கிற காதலின் அடுத்த கட்டம் என்ன? வெறும் காதலோடு அது நின்றுவிடுமா, அல்லது அடுத்த கட்டத்திற்குப் போகுமா! அப்படி ஒரே சமயத்தில் இரண்டு பேர் மேலே காதல் வந்தால் என்ன நடக்கும், அது எதில் போய் முடியும்னு போகும் படம். படம் பார்க்கிற நேரமெல்லாம் என்கேஜ் பண்ணணும். சீரியஸாக அமைந்துவிடக்கூடாது. கொஞ்சம் வேடிக்கையும் வேணும். சிக்கலான கதைதான். நடைமுறையில் முடியாது. அதைத் தாண்டி, திரையில் இரண்டரை மணி நேரமும் பார்க்க வைக்கணும். அப்படி ஒரு நிலை. இப்ப நான் பார்க்கும்போது மக்களைப் பார்க்க வச்சிடுவேன்னு தோணுது. நான் சொன்னால் போதாது, ஜனங்களும் சொல்லணும். பார்க்கலாம்.”

நயன்தாராவுடன் திருமணம் எப்போது? - விக்னேஷ் சிவன் சொல்லும் ரகசியம்

``விஜய் சேதுபதி இந்த ரெண்டு காதலில் வந்த பின்னாடி என்ன நடந்தது?’’

“உண்மையில் அவரைத் தவிர யாரையும் நினைச்சுப் பார்க்கவே முடியலை. இந்த கேரக்டருக்கு ஒரு இன்னசென்ஸ் தேவை. நடிகர் என்பதைவிடவும் அதைப் புரிஞ்சுக்கிட்டு செய்யணும். எதுவும் தப்பாகிவிடக்கூடாது. ரெண்டு பேரையும் லவ் பண்றது தப்பாகாத மாதிரி பாவனையில் கொண்டு வரணும். ரொம்ப கஷ்டமான மீட்டரில் செய்யணும். ஒரு கேரக்டரில் உட்காரும்போது அவருக்கென்று ஒரு பாணி வைத்திருப்பார். அதுக்கு முன்னே பின்னே அருமையாக நகர்ந்து போவார். இதுவரைக்கும் தொட முடியாத இடத்தை அவர் தொட்டுக்கிட்டு வர்றது நான் சொல்லித்தான் தெரிகிற விஷயமில்லை. பொதுவாக பெரிய குடும்பப் படங்களுக்கு, டார்க் கலர் படங்களுக்குத்தான் நடிப்பு வேணுமுன்னு ஆகிப்போச்சு. ஆனால் இந்த மாதிரி படங்களை உருவாக்கிறதிலேயும் ஒரு சிரமம் இருக்கு. அவருக்கான தனித்தன்மையான ஆக்டிங்தான் அவர் பலம். இதில் அவர்கிட்ட நான் எதிர்பார்க்காத ஏதாவது ஒண்ணு வந்துக்கிட்டே இருந்தது. சேது சார் சூப்பர்!”

விக்னேஷ் சிவன் - நயன்தாரா
விக்னேஷ் சிவன் - நயன்தாரா

``எப்படிப்பட்ட படமா இருக்கும் இந்தக் காதல்..?’’

“இந்தக் கதைக்கு ரெஃபரன்ஸ் கிடையாது. எடுத்துப் பார்க்காதவரை எப்படி வரும்னு தெரியாத நிலைமை இருந்தது. ஃபேன்டசி வகையான ஐடியா. இரண்டு பெண்களை ஒரு ஆண் காதலிக்கிறான்னு சொல்லும்போது ஏற்படும் கற்பனையான வக்கிரத்தைத் தவிர்க்கும்படி இருக்கணும். கதை சொல்றதில் சுவாரஸ்யம் வேணும். இப்படி பல சிக்கல்களைச் சமாளிச்சு உருவாக்கியிருக்கோம். எந்தக் கேரக்டரையும் பயப்படாமல் தேர்ந்தெடுத்து நடிக்க முடிகிற சேதுபதியின் துணிச்சலும் ஆர்வமும் இதில் பெருமளவு பயன்பட்டு இருக்கு.”

நயன்தாராவுடன் திருமணம் எப்போது? - விக்னேஷ் சிவன் சொல்லும் ரகசியம்

``நயன்தாரா மறுபடியும் சேதுபதியோடு நடிச்சிருக்காங்க... இந்த காம்பினேஷன் எப்படி வந்திருக்கு?’’

‘`பிரமாதமா வந்திருக்கு. ஒவ்வொரு சீனையும் அவங்க நூறு தடவை கேட்டிருப்பாங்க. வீட்டில் இருக்கும்போது, வெளியே போகும்போது, ஒரு அசிஸ்டன்ட் டைரக்டர் மாதிரி அவங்களோடு விவாதிப்பது வழக்கம். பாட்டு, கதை, சீன் எழுதினால், ஏதாவது புதுசா யோசித்தால் முதலில் அதை பௌன்ஸ் பண்ணுகிற சுவர் அவர்தான். பாவம் அந்தப் பொண்ணு. நான் சொல்றதையெல்லாம் கேட்டுகிட்டே இருக்கணும். இந்தக் காட்சி ஆரம்பத்தில் எப்படியிருந்தது, இதற்குப் பதிலா என்ன மாற்று இருந்தது, கடைசியில் என்னவாகத் திரையில் வந்தது வரைக்கும் அவங்களுக்குத் தெரியும். சமயங்களில் எனக்கே அவங்களைப் பார்த்தா பாவமாக இருக்கும். நான் ஷூட்டிங்கில் சீனைச் சொல்லக்கூடத் தேவையில்லை. அதுதான்... அந்த சீன்தான்னு சொன்னாலே போதும், டயலாக்கைப் பேச ஆரம்பிச்சிடுவாங்க. பல வருஷமா அவங்க என்கிட்டே கேட்டு வளர்ந்த கதை இது. என்ன ஆச்சரியம்னா ஷூட்டிங் ஸ்பாட்ல அவங்க இப்பதான் கேட்ட மாதிரி ரசிச்சுப் பண்ணுவாங்க. Highly professional. அந்த சீனே ப்ரெஷ் ஆகிடும்.’’

நயன்தாராவுடன் திருமணம் எப்போது? - விக்னேஷ் சிவன் சொல்லும் ரகசியம்

``சமந்தா எப்படி?’’

“அந்த லுக், நடிப்பு, எது வேணுமோ அதை அளவாக நடிப்பில் தருவதில் சமந்தாவைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். பாருங்க... இப்ப இந்தி, தெலுங்கு, தமிழ்னு போகிற இடங்களில் எல்லாம் டாப் இடத்தில் இருக்காங்க. இதில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா மூணு பேருக்கும் சரிக்கு சமமான கேரக்டர். இந்த மூணு பேர் காம்பினேஷனே உங்களுக்கு ரொம்பப் பிடிக்கும். கலா மாஸ்டர், பிரபு சார், மாறன், டோனின்னு நிறைய பேர் நடிச்சிருக்காங்க.”

நயன்தாராவுடன் திருமணம் எப்போது? - விக்னேஷ் சிவன் சொல்லும் ரகசியம்

``மியூசிக்னா உங்களுக்கு ஸ்பெஷலா தருவாரே அனிருத்...’’

“இந்தப் படத்தில் இயக்குநருக்கு எவ்வளவு தூரம் இடமிருக்கோ அந்த அளவுக்கு அனிருத்துக்கும் இருக்கு. ஏழெட்டுப் பாடல்களுக்கு மேல இருக்கு. எல்லாப் பாடல்களும் நல்லாருக்கும். அவர் எல்லோருக்கும் சமமாகத்தான் மியூசிக் பண்றார். ஆனால் எனக்குன்னு வரும்போது கொஞ்சம் கூடவே மெனக்கெடுவார்னு சொல்வாங்க.”

நயன்தாராவுடன் திருமணம் எப்போது? - விக்னேஷ் சிவன் சொல்லும் ரகசியம்

`` ‘கூழாங்கல்’, ‘ராக்கி’ன்னு வித்தியாசமான படங்களை வாங்குகிற தயாரிப்பாளராகவும் நீங்களும் நயனும் ஆகியிருக்கீங்க...’’

‘`நானும் வெறும் ஆளாக இருந்து சினிமாவுக்கு வந்தவன்தான். சினிமாவின் கஷ்டம் புரியும். நானும், நயனும் சேர்ந்து விவாதித்து முடிவுகளை எடுத்துப் படம் வாங்குகிறோம். எனக்கு தனுஷோ சிம்புவோ படம் தரலைன்னா நான் இங்கே இல்லை. இங்கே உழைப்பை விட வெற்றி பேசப்படுது. ஒரு வாய்ப்பும் அதன் வழியாக வெற்றியும் கிடைச்சால் வாழ்க்கையே மாறுது. சினிமாவில் சம்பாதிச்சதை சினிமாவுக்கே திருப்பிக் கொடுக்கணும்னு நினைக்கிறோம். இந்த மாதிரி புதுவகையான படங்களையெல்லாம் பார்த்தே ஆகணும் என்பதைவிட இதை மிஸ் பண்ணி விடக்கூடாது என்பதுதான் நோக்கம். ‘ராக்கி’யில் வன்முறை அதிகம்தான். ஆனால் அதை எடுத்த விதமும், அந்த ஸ்டைலும் புதுசு. ‘கூழாங்கல்’ ஆஸ்கர் வரைக்கும் போய் அங்கே செலக்ட் ஆகாமல் போனது வருத்தம்தான். ஆனால் ஆஸ்கர் பட்டியலில் இருந்தது எங்க ரெண்டு பேருக்கும் காலத்திற்கும் பெருமை.’’

நயன்தாராவுடன் திருமணம் எப்போது? - விக்னேஷ் சிவன் சொல்லும் ரகசியம்

``பாட்டு எழுத ஆர்வமா இருக்கீங்களே?’’

“எழுதுறதுதான் ரொம்ப இஷ்டம். பாட்டு கேட்டே வளர்ந்தவங்கதானே நாம். ரொம்ப ஆழமான வார்த்தைகள் எல்லாம் இல்லாம மக்கள் சாதாரணமாக புழங்குகிற வார்த்தைகளையே உபயோகிக்கிறேன். எங்க அம்மா, தங்கச்சியே ‘உனக்குப் பாட்டெல்லாம் எழுதத் தெரியுதா’ன்னு கிண்டல் பண்ணுவாங்க. ‘விக்ரம் வேதா’ படத்தில்கூட ‘கறுப்பு வெள்ளை’ன்னு சீரியஸ் ஆக ஒரு பாட்டு எழுதினேன். எல்லோரும் ரசிச்சாங்களே!”

``எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் பதில், நயன்தாராவுடன் எப்போது திருமணம்?’’

“ஒண்ணா உட்கார்ந்து படங்களில் வேலை செய்கிறோம். படங்கள் எடுத்து ரிலீஸ் பண்றோம். எந்த விஷயத்தை எப்ப சொல்லணுமோ அப்பப்ப சொல்லுவோம். ஏதாவது நல்ல விஷயம் நடந்தால் அதைக் கண்டிப்பா சொல்றோம். அதான் எங்கே போனாலும் ட்விட்டரில் ஷேர் பண்ணிக்கிட்டே இருக்கோமே, நாங்க எப்பவும் ரகசியமா இல்லையே! கல்யாணம் செய்யத்தான் வேணும். நடக்கும்போது சொல்றோம்.”