Published:Updated:

நயன்தாரா: `என் தங்கமே! இன்னும் சில மணிநேரங்களில்'- திருமணத்திற்கு முன்பு விக்னேஷ் நெகிழ்ச்சிப் பதிவு

நயன்தாரா - விக்னேஷ் சிவன்

"இன்றைக்கு ஜூன் 9. அப்புறம் நயனுடன் திருமணம். கடவுளுக்கு, பிரபஞ்சத்துக்கு, என் வாழ்வில் சந்தித்த ஒவ்வொரு மனிதர்களுக்கும் நன்றி" - விக்னேஷ் சிவன்

Published:Updated:

நயன்தாரா: `என் தங்கமே! இன்னும் சில மணிநேரங்களில்'- திருமணத்திற்கு முன்பு விக்னேஷ் நெகிழ்ச்சிப் பதிவு

"இன்றைக்கு ஜூன் 9. அப்புறம் நயனுடன் திருமணம். கடவுளுக்கு, பிரபஞ்சத்துக்கு, என் வாழ்வில் சந்தித்த ஒவ்வொரு மனிதர்களுக்கும் நன்றி" - விக்னேஷ் சிவன்

நயன்தாரா - விக்னேஷ் சிவன்

விக்னேஷ் சிவன் - நயன்தாரா திருமணம்தான் இன்றைக்கு விசேஷம். திருமணம் கோலாகலமாக நடக்கவிருக்கிறது. அதற்கான ஏற்பாடுகள் சென்னை மாகாபாலிபுரத்தில் உள்ள Sheraton Grand -ல் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கின்றன. நட்சத்திர ஜோடிகளின் திருமணத்தில் பல பிரபலங்கள் கலந்துகொள்கிறார்கள்.

நயன்தாராவைக் கரம் பிடிக்கவிருக்கும் நம்ம மாப்பிள்ளை விக்னேஷ் சிவன், இன்ஸ்டாவில் இன்னும் கொஞ்ச நேரத்தில் தனது மனைவியாகப் போகிறவருக்கு பதிவு ஒன்றைப் பகிர்ந்திருக்கிறார்.

அதில், "இன்றைக்கு ஜூன் 9. இந்த நாள் நயன் உடையது. (9, நயன் மேட்ச்சிங்!) கடவுளுக்கு, பிரபஞ்சத்துக்கு, என் வாழ்வில் சந்தித்த ஒவ்வொரு மனிதர்களுக்கும் நன்றி. அனைத்து நல்ல உள்ளங்களும் நல்ல தருணங்களும் எதிர்பாராது நடந்த நல்ல நிகழ்வுகளும் ஆசிர்வாதமும் ஒவ்வொரு படப்பிடிப்பு நாளும் ஒவ்வொரு வேண்டுதலும் என் வாழ்வை அழகாக மாற்றியுள்ளன. இவற்றுக்கு கடமைப்பட்டிருக்கிறேன்."

மேலும், "இப்போது இவை எல்லாவற்றையும் என் வாழ்வின் காதலுக்கு அர்ப்பணிக்கிறேன். என் தங்கமே! இன்னும் சில மணிநேரங்களில் திருமண நடைமேடையில் உன்னைக் காண ஆவலோடு இருக்கிறேன். நல்லவை நிகழக் கடவுளை வேண்டிக்கொள்கிறேன். அதிகாரபூர்வமாக நம் குடும்பத்தினர், நண்பர்கள் முன்னிலையில் வாழ்வின் புதிய அத்தியாயத்தைத் தொடங்க காத்திருக்கிறேன்" என எக்ஸைட்மென்ட்டோடு பகிர்ந்திருக்கிறார் இயக்குநர். ரசிகர்கள் தங்கள் அன்பை எமோஜிகளாகவும் ரியாக்ஷன்களாகவும் பகிர்ந்து வருகிறார்கள்.