Published:Updated:

விஜய் சேதுபதியின் `சிறப்பு'... அஜித்துக்காக விக்னேஷ் சிவனின் மேஷப்... பிரகாஷ் ராஜின் தனித்தீவு!

Ajith
Ajith ( AJITH KUMAR )

2020 லாக்டெளனில் பரபரப்பாக இருக்கும் ஒரே இடம், சோஷியல் மீடியாதான். பிரபலங்கள் அங்கே ஷேர் செய்யும் சுவாரஸ்யங்கள் இங்கே உங்கள் பார்வைக்கு.

சில மாதங்களுக்கு முன்பு நடந்த திரைப்பட விருது வழங்கும் விழாவில், ‘கோயில்களைப் போலவே, மருத்துவமனைகளையும் பள்ளிக்கூடங்களையும் பராமரியுங்கள்’ என நடிகை ஜோதிகா பேசியது சர்ச்சைக்குள்ளானது.

இந்நிலையில், ஜோதிகா தரப்பிலிருந்து ‘நாங்கள் சொன்ன பேச்சில் உறுதியாகவே இருக்கிறோம். சரியாகப் புரிந்துகொண்டு ஆதரவு அளித்தவர்களுக்கு நன்றி’ என நேற்று மாலை அறிக்கை ஒன்றை நடிகர் சூர்யா வெளியிட்டார். இதற்கு சோஷியல் மீடியாவில் பயங்கர ஆதரவு கூடி, இந்த் லெட்டர் ட்ரெண்டிங் ஆனதோடு, விஜய்சேதுபதி, பி.சி ஸ்ரீராம் உள்ளிட்ட பல பிரபலங்களும் ஆதரவு தெரிவித்துவருகின்றனர்.

வருடாவருடம் மே1 அன்று, நடிகர் அஜித்தின் பிறந்தநாள் சமூக வலைதளங்களில் பொதுவான டிபி வைப்பது, ட்ரெண்டிங்கில் அஜித்தை வைத்திருப்பது என சமூக வலைதளங்களில் அவரது ரசிகர்கள் ஒரு திருவிழா போலவே கொண்டாடிவருவர். இந்நிலையில், இந்த கொரோனா சூழலால் ரசிகர்கள் யாரும் தனது பிறந்தநாளை முன்னிட்டு எந்த சிறப்பு ஏற்பாடும் செய்ய வேண்டாம் என அஜித் தரப்பிலிருந்து வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

ஆனாலும், அஜித் மீது கொண்ட அன்பு காரணமாக, ஒரு வாரத்துக்கு முன்னதாகவே அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் சிறப்பு செய்ய ஆரம்பித்துவிட்டனர். அருண்விஜய், சாந்தனு, யுவன்ஷங்கர் ராஜா எனப் பல பிரபலங்களும் அஜித் பிறந்தநாளுக்கான பொதுவான டிபி-யை வெளியிட்டனர். இதைத்தொடர்ந்து, அஜித் பிறந்தநாளுக்கான ஸ்பெஷல் மேஷப் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார், இயக்குநர் விக்னேஷ்சிவன். ’Never Ever Giveup!’ என்ற கேப்ஷனுடன் கொரோனாவுக்கு எதிராக நாமும் இதுபோல் பாசிட்டிவ்வாகப் போராடுவோம் என்ற செய்தியுடன் இதைப் பகிர்ந்துள்ளார்.

இன்று, உலக நடனதினம் கொண்டாடப்பட்டுவருகிறது. இதற்காகப் பல முன்னணி நடனக்கலைஞர்களுடன் இணைந்து தனது டான்ஸ் அகாடமி மூலம் ஆன்லைனில் இரண்டு நாள்களுக்கு டான்ஸ் ஃபெஸ்டிவலை முன்னெடுக்க உள்ளார், பாலிவுட் நடிகை மாதுரி தீட்சித்.

இதற்கான அறிவிப்பை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள மாதுரி, ’உலக நடன தினத்தை முன்னிட்டு ஆன்லைன் மூலம் முன்னணி நடனக்கலைஞர்களுடன் இரண்டு நாள்களுக்கு நடைபெறவிருக்கும் இந்த டான்ஸ் திருவிழா, ரசிகர்களுக்கு நிச்சயம் கற்றுக்கொள்ளும் சிறந்த அனுபவமாக இருக்கும்’ எனப் பதிவிட்டுள்ளார்.

குவாரன்டீன் நாள்களை பெங்களூரு அருகேயுள்ள தனது பண்ணை இல்லத்தில், தனது மகனுடன் மகிழ்ச்சியாகக் கழித்துவருகிறார் நடிகர் பிரகாஷ்ராஜ். பண்ணை இல்லம், கிட்டத்தட்ட தனித்தீவு போல் இருக்கிறது. காய்கறிகள் அறுவடை, கோழி, கன்றுக்குட்டிகளைப் பராமரிப்பது என அங்கே பிஸியாக இருக்கிறார்.

‘குடும்பத்துடனும் இயற்கையுடனும் இருக்க சரியான நேரம் இது. இந்த லாக்டெளன் சூழலில் வாழ்வின் சிறந்த நினைவுகளை உருவாக்குவோம்’ என தினமும் பண்ணை வீட்டில் தனது குடும்பத்துடன் இருக்கும் அழகான புகைப்படங்களைப் பகிர்ந்து வருகிறார் பிரகாஷ்ராஜ்

அடுத்த கட்டுரைக்கு