Published:Updated:

 'மெர்சல்'விட இரு மடங்கு பணம் கேட்கும் 'விஜய் 63' திரைப்படம்

எம்.குணா

விஜய் படத்தின் ஆடியோ ரைட்ஸ்

'விஜய் 63'
'விஜய் 63'

ஏற்கெனவே அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வெளிவந்த 'மெர்சல்' திரைப்படம் பெரிதாக பேசப்பட்டது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவான ' ஆளப்போறான் தமிழன்...' பாடலை மட்டுமே உலகம் முழுக்க கோடிக்கணக்கான பேர் பார்த்து மகிழ்ந்தனர்.

மெர்சல்
மெர்சல்

'மெர்சல்'பட பாடல்கள் அனைத்துமே தமிழ்ரசிகர்களால் ரசிக்கப்பட்டது. விஜய் ஹீரோ, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பாளர் என்பதால் இரண்டரை கோடி ரூபாய் கொடுத்து 'மெர்சல்' படத்தின் ஆடியோ உரிமையை சோனி மியூசிக் வாங்கியது. அடுத்து விஜய், ஏ.ஆர்.ரஹ்மான், அட்லி கூட்டணியில் உருவாகி வருகிறது 'விஜய் 63' திரைப்படம். இந்த படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பதற்காக ஐந்துகோடி சம்பளம் பேசப்பட்டு இருக்கிறது.

அட்லி இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பே இன்னும் முழுமையாக முடிவடையவில்லை அதற்குள் ஆடியோ உரிமையை விற்கும் வேலையில் ஜரூராக இறங்கிவிட்டனர். முன்பு 'மெர்சல்' படத்தை இரண்டரை கோடிக்கு கொடுத்தனர்.

இப்போது 'விஜய் - 63' படத்தைத் தயாரிக்கும் தரப்பு ஐந்துவிரலைக் காட்ட அரண்டுபோய் கிடக்கிறது ஆடியோ நிறுவனங்கள். ' விஜய் -63' படத்துக்கான ஆடியோ ரைட்ஸை விற்று அந்த பணத்தை அப்படியே ஏ.ஆர்.ரஹ்மானுக்கு சம்பளமாக கொடுத்துவிடத் தீர்மானித்து இருக்கிறார்களாம்.

எம்.குணா