Published:Updated:

`Beast' அப்டேட்ஸ்: `புட்டபொம்மா' மாஸ்டருடன் விஜய் - பூஜா ஹெக்டே டான்ஸ்... அடுத்து எங்கே ஷூட்?

பாடலுக்காக மும்பையில் இருந்து ஸ்பெஷல் லைட்கள் வரவழைக்கப்பட்டுள்ளனவாம். இதனைத் தொடர்ந்து ஒருசில நாட்கள் பிரேக் விட்டுவிட்டு அடுத்த ஷெட்யூல் மகாபலிபுரத்துக்கு நகர்கிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

விஜய்யின் 65-வது படமான 'பீஸ்ட்'டின் ஷூட்டிங் சென்னையில் பூஜா ஹெக்டே டான்ஸுடன் தொடங்கியிருக்கிறது. கடந்த ஜூலை 1-ம் தேதி 'கோகுலம்' ஸ்டூடியோவில் விஜய் - பூஜா ஹெக்டே காம்பினேஷனின் பாடல் ஷூட்டுடன் தொடங்கி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
beast spot
beast spot

தெலுங்கில் 'அலவைகுந்தபுரம்' படத்தில் செம ஹிட் பாடலான 'புட்டபொம்ம்மா'விற்கு நடனம் அமைத்த ஜானி மாஸ்டர், 'பீஸ்ட்'டிற்கும் நடன இயக்கம் செய்து வருகிறார். முதல் நாள் ஷூட்டில் அவருக்கு விஜய்யும் யூனிட்டும் சேர்ந்து பொக்கே கொடுத்து வரவேற்றிருக்கிறார்கள். விஜய் - பூஜா ஹெக்டேவின் டூயட் ஒரு வாரத்திற்கு மேலாக ஷூட் செய்யப்பட்டு வருகிறது. மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்து வருகிறார். பாடலுக்காக மும்பையில் இருந்து ஸ்பெஷல் லைட்கள் வரவழைக்கப்பட்டுள்ளனவாம். இதனைத் தொடர்ந்து ஒருசில நாட்கள் பிரேக் விட்டுவிட்டு அடுத்த ஷெட்யூல் மகாபலிபுரத்துக்கு நகர்ந்திருக்கிறது.

pooja
pooja

இப்போது பாடல் ஷூட் நடந்து வரும் கோகுலம் ஸ்டூடியோவில்தான் விஜய்யின் 'மெர்சல்' படத்தின் ஷூட்டும் நடந்தது. இங்கேதான் அஜித்தின் 'வலிமை', 'இந்தியன்-2' படத்தின் ஷூட்களையும் செட் போட்டு எடுத்துள்ளனர். அதிலும் 'வலிமை'க்காக போலீஸ் ஸ்டேஷன், ட்ரெயின் சீக்குவென்ஸ்கள் அங்கு படமாக்கப்பட்டன. ட்ரெயின் செட் போட்ட இடத்தில்தான் 'பீஸ்ட்'கான பாடல் ஷூட் அரங்கம் அமைக்கப்பட்டிருப்பதாகச் சொல்கிறார்கள்.

'பீஸ்ட்'டின் பாடலை முடித்துவிட்டு வடபழனி ஏரியாவில் உள்ள தாமிரா ஸ்டூடியோவில் அடுத்தடுத்த சீக்குவென்ஸ்கள் படமாக்கப்பட இருக்கின்றன. அங்கு ஷாப்பிங் மால் செட் அமைக்கப்பட்டு வருகிறது.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு