டாப் கியரில் போய்கொண்டிருக்கிறது விஜய்யின் 'பீஸ்ட்' பட வேலைகள். அதன் படப்பிடிப்பு முடியும் முன்பே, அடுத்த படத்தை உறுதி செய்துவிட்டார் விஜய். அடுத்தாண்டு பிப்ரவரியில் அதன் ஷூட்டிங் துவங்கி, ஒரே மூச்சில் நடக்கிறது.
விஜய்யின் 'பீஸ்ட்'டை நெல்சன் தீலீப்குமார் இயக்கி வருகிறார். இதனை அடுத்து நாகார்ஜூன், கார்த்தி இணைந்து நடித்த 'தோழா'வை இயக்கிய வம்சி பைடிபள்ளியின் இயக்கத்தில் விஜய் நடிக்கிறார். தெலுங்கு, தமிழில் வெளியாகும் இப்படத்தை தில் ராஜூ, சிரிஷ் இருவரும் தயாரிக்கின்றனர்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
ஒன்பது நாள்கள் நடைபெறும் தசரா பூஜையின் ஒரு நாளில், 'விஜய் 66' பட பூஜையும் நடக்கிறது. அன்று சம்பிரதாயமாக ஒரு ஷாட்டும் எடுக்கத் திட்டமிட்டுள்ளனர். சென்னை, மற்றும் ஐதராபாத் தவிர, வெளிநாட்டிலும் படமாக்க உள்ளனர். இந்தாண்டு நவம்பருக்குள் 'பீஸ்ட்'டை முழுவதும் முடித்து கொடுத்துவிடும் விஜய், பிப்ரவரியில் இதன் ஷூட்டிங்கிள் பங்கேற்கிறார்.
'தோழா'வை அடுத்து மகேஷ் பாபுவை வைத்து 'மஹரிஷி'யை இயக்கியிருந்தார் வம்சி. அதன் ஹீரோயின் பூஜா ஹெக்டே. 'பீஸ்ட்'டிலும் பூஜாதான். எனவே, இந்தப் படத்தில் விஜய்யுடன் பூஜா மீண்டும் இணைய வாய்ப்பிருக்கிறது என்ற தகவலும் தெலுங்கு வட்டாரத்தில் பரவி உள்ளது.