Published:Updated:

விஜய் மட்டும்தான் Entry Tax கட்டவில்லையா… ரோல்ஸ் ராய்ஸ் விவகாரத்தில் நடந்தது என்ன?

சென்னை உயர்நீதிமன்றத்தின் கடும் கோபத்துக்கு ஆளாகியிருக்கிறார் நடிகர் விஜய். 2012-ல் தான் வாங்கிய ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரி விலக்கு கேட்டு விஜய் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த வழக்குதான் நீதிமன்ற கண்டிப்புக்குக் காரணம்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

2012-ல் தொடர்ந்திருந்த வழக்குக்குக் கிட்டத்தட்ட 9 ஆண்டுகளுக்குப்பிறகு இப்போது தீர்ப்பு வெளியாகியிருக்கிறது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் இவ்வழக்கில் தீர்ப்பளித்திருக்கிறார்.

அத்தீர்ப்பில், ‘’சமூக நீதிக்குப் பாடுபடுவதாகச் சொல்லும் நடிகர்கள் வரி ஏய்ப்பு செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. நடிகர்கள் உண்மையான ஹீரோக்களாக இருக்க வேண்டும். ரீல் ஹீரோக்களாக இருக்கக் கூடாது. வரி என்பது நன்கொடையல்ல; கட்டாய பங்களிப்பு. நடிகர்களுக்கு வானத்தில் இருந்து பணம் வரவில்லை. ஏழைமக்களிடம் இருந்துதான் அவர்களுக்கு பணம் கிடைக்கிறது" எனக் கடுமைகாட்டியிருப்பதோடு ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்திருக்கிறார்.

‘‘இந்த அபராதத் தொகையை இரண்டு வாரங்களுக்குள் முதல்வரின் நிவாரண நிதியாகச் செலுத்திட வேண்டும்’’ என்றும் சொல்லியிருக்கிறார் நீதிபதி.

Rolls-Royce Ghost
Rolls-Royce Ghost
உண்மையில் விஜய் முறையாக வரி கட்டவில்லையா, கார்களுக்கான நுழைவு வரி என்றால் என்ன, அதை ஏன் அவர் கட்டமறுத்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்?!

நடிகர் விஜய் ஒரு கார் பிரியர். புது மாடல் கார்கள் வந்தால் அதை உடனடியாக வாங்கிப் பயன்படுத்தும் ஆர்வம் கொண்டவர். நிஸான் கார்கள் இந்தியாவில் விற்பனைக்கு வராதபோதே அதை வாங்கியவர் விஜய். மாருதி ஸ்விஃப்ட்டில் தொடங்கி டொயோட்டா இனோவா க்ரிஸ்ட்டா, ஆடி A8, மினிகூப்பர், ரேஞ்ச்ரோவர் இவோக், பிஎம்டபிள்யூ X6, 7 சீரிஸ், ஃபோர்டு மஸ்டாங், பென்ஸ் GLA என்று ஏகப்பட்ட கார் கலெக்ஷன் வைத்திருக்கிறார் விஜய்.

விஜய்யின் ரோல்ஸ்ராய்ஸ்
விஜய்யின் ரோல்ஸ்ராய்ஸ்

அப்படித்தான் 2012–ல் ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனத்தின் ‘கோஸ்ட்’ எனும் சொகுசு காரையும் வாங்கினார் விஜய். ரோல்ஸ்ராய்ஸ் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த நிறுவனம். ஆனால், இப்போது ஜெர்மனியின் பிஎம்டபிள்யூ குழுமத்தின் அங்கமாக இருக்கிறது. அதனால், இந்தியாவில் பிஎம்டபிள்யூ நிறுவனம் தனது டீலர்ஷிப்புகள் மூலம்தான் ரோல்ஸ் ராய்ஸ் கார்களை விற்பனை செய்து வருகிறது.

சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள டீலர்ஷிப்பில்தான் விஜய்யும் இந்த ரோல்ஸ்ராய்ஸ் காரை வாங்கியிருக்கிறார். நேரடியாக வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்து அவர் இந்த காரை வாங்கவில்லை. டீலர்ஷிப்பில் கார் வாங்கும்போதே அதற்கான இறக்குமதி வரி உள்பட எல்லா வரிகளும் கட்டப்பட்டிருக்கின்றன. ஆனால், முழுமையான நுழைவு வரியைத் தவிர?!

Pic: Car Wale
Pic: Car Wale

நுழைவு வரியில் என்ன சிக்கல்?

தற்போது நடைமுறையில் இருக்கும் GST அப்போது இல்லை. அப்போது நடைமுறையில் இருந்த VAT வரிகள் இறக்குமதி கார்களுக்குப் பொருந்தாது. இறக்குமதி கார்களைப் பொருத்தவரை 137 சதவிகித வரி விதிப்பு நடைமுறையில் இருக்கிறது.

Ghost
Ghost

விஜய் வாங்கியிருக்கும் ரோல்ஸ்ராய்ஸ் கோஸ்ட் காரின் இங்கிலாந்து விலை 2.25 கோடி ரூபாய். இதற்கு இந்தியாவில் இறக்குமதி வரி 137 சதவிகிதம் சேர்த்தால் கிட்டத்தட்ட 5.25 கோடி ரூபாய். இதுபோக, செஸ், இன்ஷூரன்ஸ், ரிஜிஸ்ட்ரேஷன், சாலை வரி எனக் கூட்டிப் பெருக்கிப் பார்த்தால் மொத்தமாக இந்தக் காரின் சென்னை ஆன் ரோடு விலை ரூ.6.5 கோடியைத் தொடும். இதில் நுழைவு வரி என்பது மாநிலங்களுக்கு இடையே காரை மாற்றி ரிஜிஸ்ட்ரேஷன் செய்யும்போது விதிக்கப்படுவது. அதாவது டெல்லியில் வாங்கிய காரை தமிழ்நாட்டில் ரெஜிஸ்ட்ரேஷன் செய்யவேண்டுமானால் நுழைவு வரி கட்ட வேண்டும். இந்த நுழைவு வரி வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்து வாங்கும் கார்களுக்கும் விதிக்கப்பட்டது. ஆனால், இறக்குமதி வரி கட்டி வாங்கும் கார்களுக்கு இந்த நுழைவு வரி பொருந்தாது என்பது சொகுசு கார் வாடிக்கையாளர்களின் வாதம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

`வலிமை' அஜித்துக்கு 800 சிசி பைக், வில்லனுக்கோ 1300 சிசி பைக்! ஏன் இந்த `பவர்' வித்தியாசம்?
அதனால் இறக்குமதி செய்து கார் வாங்கியதும் நுழைவு வரி தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வது 2000-ம்களில் இருந்தே வழக்கமாக இருந்தது. விஜய் மட்டுமல்ல 2010-ல் இருந்து ரோல்ஸ் ராய்ஸ் கார்களை இந்தியாவில் வாங்கியவர்கள் பலருமே நீதிமன்றத்தில் கார் வாங்கியதும் ‘நுழைவு வரியை இவ்வளவு கட்டமுடியாது’ என வழக்குத்தொடுப்பது ஒரு நடைமுறையாகவே இருந்து வந்திருக்கிறது.

‘’நுழைவு வரி கட்டினால்தான் ரெஜிஸ்ட்ரேஷன் செய்ய முடியும் என்பதால் இப்படி ஒரு வழக்கை தொடுப்பார்கள். நீதிமன்றம் அப்போதைக்கு குறைந்தபட்ச வரியைக் கட்டச்சொல்லி, கார்களைப் பதிவு செய்ய அனுமதியளிக்கும். வழக்குத் தொடர்ந்து நடக்கும். இப்போது அந்த வழக்கில்தான் தீர்ப்பு வெளியாகியிருக்கிறது.

Ghost
Ghost

சொகுசு கார் நிறுவனங்கள் சார்பில் யாரும் வாதாடாததால் அரசுக்கு ஆதரவாக தீர்ப்பு வந்திருக்கிறது. அப்போது கார் வாங்கிய பலருக்கும் இப்போதைய நீதிமன்ற உத்தரவுப்படி மீதித்தொகையைக் கட்டச்சொல்லி நோட்டீஸ் அனுப்பப்பட்டு வருகிறது. அதில் ஒருவர்தான் விஜய். அப்போதே விஜய் முழு நுழைவு வரியையும் கட்டியிருக்கலாம். ஆனால், அப்போது எல்லா வாடிக்கையாளர்களும் கட்டாமல் இருந்ததோடு, தீர்ப்பு வந்ததும் என்ன வரியோ அதைக் கட்டலாம் என்றும் காத்திருந்தார்கள். அரசாங்கைத்தை ஏமாற்றவேண்டும் என்பது யாருடைய நோக்கமும் அல்ல’’ என்கிறார்கள் ரோல்ஸ்ராய்ஸ் விவகாரம் அறிந்தவர்கள்.

விஜய் ரோல்ஸ் ராய்ஸ் விவகாரத்தில் உங்கள் கருத்து என்ன?!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு