Published:Updated:

‘தயவுசெய்து காதல் கதை சொல்லுங்கப்பா!’

விஜய் ஆண்டனி
பிரீமியம் ஸ்டோரி
விஜய் ஆண்டனி

ரெண்டு சீன் பார்க்கலாம்னு உட்கார்ந்தேன். அப்படியே முடியுற வரை என்னை அந்தப் படம் உட்கார வெச்சிடுச்சு. உடனே அவருக்கு போன் பண்ணி வாழ்த்துகள் சொன்னேன்.

‘தயவுசெய்து காதல் கதை சொல்லுங்கப்பா!’

ரெண்டு சீன் பார்க்கலாம்னு உட்கார்ந்தேன். அப்படியே முடியுற வரை என்னை அந்தப் படம் உட்கார வெச்சிடுச்சு. உடனே அவருக்கு போன் பண்ணி வாழ்த்துகள் சொன்னேன்.

Published:Updated:
விஜய் ஆண்டனி
பிரீமியம் ஸ்டோரி
விஜய் ஆண்டனி
’கோடியில் ஒருவன்’, ‘அக்னி சிறகுகள்’, ‘தமிழரசன்’, ‘காக்கி’, ‘பிச்சைக்காரன் 2’, சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் ஒரு படம், பாலாஜி குமார் இயக்கத்தில் ஒரு படம், விஜய் மில்டன் இயக்கத்தில் ஒரு படம் என விஜய் ஆண்டனியின் கைவசம் அத்தனை படங்கள். அத்துடன் இசையமைப்பது, எடிட்டிங், தயாரிப்பது என பலப்பல பணிகள்.
 ‘தயவுசெய்து காதல் கதை சொல்லுங்கப்பா!’

‘கோடியில் ஒருவன்’ படத்தை தேர்ந்தெடுக்க என்ன காரணம் ?

“தங்கச்சி வீட்டுக்குப் போயிருந்தபோது டிவியில ஆனந்த கிருஷ்ணனுடைய ‘மெட்ரோ’ ஓடிக்கிட்டிருந்தது. ரெண்டு சீன் பார்க்கலாம்னு உட்கார்ந்தேன். அப்படியே முடியுற வரை என்னை அந்தப் படம் உட்கார வெச்சிடுச்சு. உடனே அவருக்கு போன் பண்ணி வாழ்த்துகள் சொன்னேன். இந்த மாதிரி ப்ளாக்பஸ்டர் ஆகாத நல்ல படங்களை இயக்கிய புது இயக்குநர்களுக்குத் திறமை இருந்தாலும் பொருளாதாரா ரீதியா பெரிய கலெக்‌ஷன் வந்தால் மட்டும்தான் அவங்களை இண்டஸ்ட்ரி தூக்கி மேல வைக்கும். அப்புறம், அவருடைய கல்யாண பத்திரிகை கொடுக்க வந்தார். அப்போ சந்திச்சோம். பெரிய பழக்கமெல்லாம் இல்லை. திடீர்னு ஒரு நாள் போன் பண்ணி, ‘ஒரு லைன் இருக்கு’னு சொன்னார். கேட்டதும் பிடிச்சிடுச்சு. உடனே ஓகே சொல்லிட்டேன்.”

 ‘தயவுசெய்து காதல் கதை சொல்லுங்கப்பா!’

‘நான்’, ‘எமன்’னு ஜீவா ஷங்கருடன் ரெண்டு படங்கள் வொர்க் பண்ணீங்க. இப்போ ‘கோடியில் ஒருவன்’, ‘பிச்சைக்காரன் 2’னு அடுத்தடுத்து ஆனந்த கிருஷ்ணன் கூட வொர்க் பண்றீங்க. இவர்கிட்ட அப்படி என்ன ஸ்பெஷல் ?

“ ‘சலீம்’ பட இயக்குநர் நிர்மல் குமாருடனும் ஒரு படம் வொர்க் பண்ணப்போறேன். ‘பிச்சைக்காரன்’ படத்துக்கு பிறகு, சசி சாரும் ஒரு கதை வெச்சிருக்கேன்னு சொல்லிருக்கார். ‘இந்தியா பாகிஸ்தான்’ இயக்குநர் ஆனந்த் கூடவும் ஒரு படம் பண்ண பேசிட்டு இருக்கோம். பழகிட்டா அவங்க குடும்பத்துல ஒருத்தனாகிடுவேன். ஆனா, கதை ரொம்ப சரியா இருக்கணும். அது ஓடுது, ஓடலைங்கிறது அடுத்த விஷயம்.”

டீசர்ல டியூஷன் மாஸ்டர், ஐஏஎஸ் தேர்வுக்கு படிக்கிற இளைஞர்னு உங்களுடைய கேரக்டர் பத்தின வசனங்கள் வருது. திடீர்னு சட்டசபையில ஆக்ரோஷமா பேசுறீங்க. ‘கோடியில் ஒருவன்’ல உங்களுக்கு என்னதான் கேரக்டர்?

“உங்கள்ல ஒருத்தன்தான். சாதாரண சாமானியன். அவனுக்கு ஒரு பிரச்னை வருது. தெரிஞ்சோ தெரியாமலோ அந்த ஏரியாவுல இருக்கிற தாதா ஒருத்தன் எதிரியாகிடுறான். அவனை எதிர்த்தாக வேண்டிய சூழல் உருவாகிடுது. இவன்கிட்ட பகைச்சதுனால இவனைவிட பெரிய தலை ஒருத்தன் இந்த சாமானியனுக்கு தொந்தரவு கொடுக்கிறான். வாழுறதுக்காக அவனையும் எதிர்க்க வேண்டிய சூழல். பொதுவா, எதிரி பலமா இருக்கும்போது, நம்மளும் நம்மளை பலமாக்கிக்க போராடுவோம். அப்படி படத்துல எனக்கு நிறைய எதிரிகள் இருக்காங்க. அவங்களை சமாளிக்க நான் நிறைய போராட வேண்டிருக்கு. அது கடைசியா எங்கே போய் நிறுத்ததுங் கிறதுதான் படம்.”

 ‘தயவுசெய்து காதல் கதை சொல்லுங்கப்பா!’

டிரெய்லர்ல அரசியல் வசனங்களை ரொம்ப ஆக்ரோஷமாகவும் அழுத்தமாகவும் பேசியிருக்கீங்க. நம்ம ஊர்ல நடக்கிற அரசியலை கவனிக்கிறதுண்டா ?

“ஆனந்துடைய கதாநாயகன் இப்படிதான் பேச வேண்டியதா இருந்தது. அந்தக் கேரக்டருக்கு தேவைப்பட்டா இன்னும் அதிகமா கூட பேசுவேன். ஆனா நிஜத்தில் அரசியலை அந்தளவுக்கு கவனிக்கிறதில்லை!”

ஆஃப் ஸ்கிரீன்ல ஹீரோயின்கள்கிட்ட விஜய் ஆண்டனி எப்படி ?

“நானும் ஹீரோயின்கள் கூட ரொமான்ஸ் பண்ணனும், லவ் படங்கள்ல நடிக்கணும்னுதான் ஆசைப்படுறேன். ஆனா எனக்கு கதை சொல்லும் போதெல்லாம் ‘இதுதான் சார் உங்க பிரச்னை. இதை நீங்க எப்படி சமாளிக்கிறீங்க ங்கிறதுதான் படம்’னு சொல்லிடுறாங்க. அந்தப் பிரச்னைகளை சமாளிப்பேனா... இல்லை, லவ் பண்ணுவேனா சொல்லுங்க. முதல் படத்துல இருந்து இப்போ வரை நான் லவ் பண்றதுக்கான ஸ்பேஸ் குறைவா இருக்கு. இந்த பேட்டி மூலமா இயக்குநர்களுக்கு சொல்றது என்னன்னா, நான் லவ் பண்ற மாதிரி கதைகள் இருந்தா எடுத்துட்டு வாங்க. சிவகார்த்திகேயன் மாதிரி ஜாலியான படங்கள் பண்ணணும்னு நினைக்கிறேன்.”

 ‘தயவுசெய்து காதல் கதை சொல்லுங்கப்பா!’

நீங்க நடிச்ச சில படங்களை நீங்களே எடிட்டிங் பண்றீங்க?

“ ‘கோடியில் ஒருவன்’ படத்துல நான் நடிச்ச கேரக்டருக்கு குழப்பம் அதிகம். இவன் பிரச்னைகள் பெருசு; சந்திக்கிற விஷயங்கள் பெருசுங்கிறதனால எடிட் பண்றதுக்கு வாழ்க்கையுடைய வலியும் நிறைய அனுபவங்களும் வேணும். எடிட்டிங்கிறது கதை சொல்லல்தான். எல்லா எடிட்டர்களும் ஒரே நேரத்துல பல படங்களுக்கு வொர்க் பண்ணிட்டு ரொம்ப பிஸியா இருப்பாங்க. நம்ம ஒரே படம்னு கண்ணும் கருத்துமா வேலை செய்வோம். இந்த சப்ஜெக்ட்டை ரொம்ப சரியா கையாளணும்னு நினைச்சு எடிட் பண்ணேன். இதுக்கு பிறகு, ‘பிச்சைக்காரன் 2’ படத்துக்குதான் எடிட் பண்றேன். வெறெந்த படங்களுக்கும் பண்ணலை.

நேரம் இல்லாததனால சில படங்களுக்கு இசையமைக்க முடியலைனு வருத்தப்பட்டதுண்டா?

“எனக்கு மியூசிக் மேல அவ்வளவு பெரிய பேஷனெல்லாம் இல்லை. உங்ககிட்ட ஒரு வேலையைக் கொடுத்தா, நல்ல பண்ணணும்னு நினைப்பீங்க. அதை விட்டுட்டு, தூக்கம் வராமல் விடிய விடிய வேலை செய்யணும்னு நினைப்பீங்களா? இல்லைதானே!? அப்படிதான் எனக்கும். எனக்கு மியூசிக் பண்றது ஒரு வேலை. இந்த வேலையை ரொம்ப சின்ஸியரா செய்வேன். அதுக்குனு ‘கடல் அலையை கேட்டா இசை வருது, காத்துடைய சத்தத்தை கேட்டா இசை வருது, எதைக் கேட்டாலும் இசையா இருக்கு...’ இந்த மாதிரி சீன்லாம் இல்லை”

நீங்க நடிக்கிற கேரக்டருக்கு ஏதாவது ஹோம் வொர்க் பண்ணுவீங்களா?

“அதெல்லாம் ஒன்னும் கிடையாதுங்க. ‘அக்னி சிறகுகள்’ படத்துக்காக குதிரை ஓட்டணும்னு சொன்னாங்க. பயிற்சி எடுத்துக்கிட்டேன், அவ்ளோதான். ‘நிறைய படங்கள் பாருங்க. அல் பசீனோ நடிப்பை கவனிங்க’ன்னு நிறைய பேர் சொல்றாங்க. இதுவரை அப்படி பண்ணதில்லை. இனிமே பண்ணணும். மியூசிக்தான் கத்துக்கலை; நடிப்பையாவது ஒழுங்கா கத்துக்கலாம்னு இருக்கேன்.”

 ‘தயவுசெய்து காதல் கதை சொல்லுங்கப்பா!’
 ‘தயவுசெய்து காதல் கதை சொல்லுங்கப்பா!’
 ‘தயவுசெய்து காதல் கதை சொல்லுங்கப்பா!’

மியூசிக் கத்துக்காமலா அவ்வளவு ஹிட் கொடுத்திருக்கீங்க?

“மியூசிக் டைரக்டர் வேற. மியூசிஸியன் வேற. இயக்குநர் மணிரத்னம் சாருக்கு நடிக்கத் தெரியணுங்கிற அவசியம் இல்லை. நடிக்கிறவங்களை இயக்கத் தெரிஞ்சா போதும். நான் இசைக்கலைஞர்களையும் பாடகர்களையும் இயக்கத் தெரிஞ்சதனால மியூசிக் டைரக்டராகிட்டேன். எனக்கு பியானோ, கிட்டார்னு எதுவும் வாசிக்க தெரியாது. ஆனா, மியூசிக் டைரக்ட் பண்ண தெரியும். வொர்க் பண்ணும்போது இந்தப் பாடல் ஹிட்டுனு தெரிஞ்சிடும். நீங்க என்ஜாய் பண்ணின அளவுக்கு கூட என் பாடலை நான் என்ஜாய் பண்ணது கிடையாது. ‘நான்’ படத்துக்கு முன்னாடி வரை, ஒரு இன்ட்ரோ சாங் வேணும், ஒரு குத்துப் பாடல் வேணும், ஒரு மெலடி வேணும்னு இயக்குநர்கள் கேட்கிறதை மட்டும் கொடுக்கிற ஆளாதான் இருந்தேன். ‘நான்’ படத்துல இருந்துதான், இந்தக் கதைக்கு இந்த மாதிரி பாடல்கள் வேணும்னு வேலை செய்ய ஆரம்பிச்சேன்”

உங்களுடைய ‘தமிழரசன்’ படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார். எவ்வளவு சந்தோஷம்?

“பக்திப் பாடல்கள் ரெக்கார்ட் பண்ற ஸ்டூடியோவுல சவுண்ட் இன்ஜீனியரா வேலைக்கு சேர்ந்தேன். அப்போ மத்த ஸ்டூடியோஸ் எப்படியிருக்கு, எப்படி இயங்குதுனு தெரிஞ்சுக்க நினைச்சு, எல்லா இசையமைப்பாளர்களுடனும் பழக ஆசைப்பட்டேன். மியூசிக் தெரிஞ்சா கூட அவங்கக்கூட பழக வாய்ப்பு கிடைக்கும். எனக்கு அதுவும் தெரியாது. அதனால, கோரஸ் பாடலாம்னு முடிவு பண்ணி நிறைய ஸ்டூடியோக்களுக்கு வாய்ப்பு கேட்டு அலைஞ்சிருக்கேன். ராஜா சார் ஸ்டூடியோலயும் கோரஸ் பாட வாய்ப்பு கேட்டிருக்கேன். ஆனா, எங்கேயும் வாய்ப்பு கிடைக்கலை. இப்போ நான் நடிக்கிற படத்துக்கு ராஜா சார் இசையமைக்கிறார்னு நினைக்கிறப்போ எனக்குள்ள இருக்கிற சந்தோஷத்துக்கு அளவேயில்லை. என் நம்பிக்கைதான் இவ்வளவு தூரம் கூட்டிட்டு வந்திருக்குனு நினைக்கிறேன்.”

 ‘தயவுசெய்து காதல் கதை சொல்லுங்கப்பா!’
 ‘தயவுசெய்து காதல் கதை சொல்லுங்கப்பா!’
 ‘தயவுசெய்து காதல் கதை சொல்லுங்கப்பா!’

நீங்க நடிச்ச படங்களைப் பார்க்கும்போது என்ன தோணும்?

“அஜினமோட்டோவுக்கு டேஸ்ட் கிடையாது. ஆனா, எதுக்குப் பயன்படுத்தினாலும் அந்த உணவோட ஒட்டிக்கும். அது மாதிரிதான் நானும். என் பர்ஃபாமென்ஸ் எப்போவும் பெருசாகவும் இருக்காது; சின்னதாகவும் இருக்காது. தப்பாவும் சொல்ல முடியாது; நல்லாவும் சொல்ல முடியாது. ‘ஏதோ பண்றான்டா இவன்’னுதான் ஆடியன்ஸுக்கு தெரியும். அப்படிதான் எனக்கும் தெரியும்.”

எந்த கிசுகிசுவி்லும் உங்க பெயர் இருக்கிறதில்லையே?

“நான் குடிப்பேன், சிகரெட் பிடிப்பேன். எல்லோரும் மாதிரி நார்மலான மனுஷன்தான். ஏன் எந்தக் கிசுகிசுவிலும் மாட்ட மாட்டேங்கிறேன்னு தெரியலை. தெளிவா இருக்கேன்னு நினைக்கிறேன்.”