Published:Updated:

மல்லுவுட் என்ட்ரி... விஜய் சேதுபதிக்குப் பதில் கமிட்டான விஜய் ஆண்டனி!

vijay antony
vijay antony

`காக்கி', `அக்னி சிறகுகள்', `தமிழரசன்' போன்ற படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் விஜய் ஆண்டனி. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான `கொலைகாரன்' ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இதையடுத்து தற்போது மலையாள படம் ஒன்றில் கமிட்டாகியுள்ளார். 

இசையமைப்பாளராகக் கலக்கி வந்த விஜய் ஆண்டனி, `நான்' படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகித் தொடந்து நடித்து வருகிறார். தற்போது மூன்று படங்களில் பயங்கர பிஸியாக நடித்துக்கொண்டிருக்கிறார். தமிழைத் தொடர்ந்து தற்போது விபின் எனும் மலையாள இயக்குநர் இயக்கவிருக்கும் படம் ஒன்றிலும் கமிட்டாகியுள்ளார் விஜய் ஆண்டனி.

இப்படத்தின் மூலம் மல்லுவுட்டிலும் களமிறங்க இருக்கிறார். மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான மம்மூட்டிதான் இப்படத்தின் கதாநாயகன். இவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் ஆண்டனி நடிப்பார் எனத் தகவல்கள் வெளியாகி வருகிறது.

vijay antony
vijay antony

விஜய் ஆண்டனிக்கு முன் விஜய் சேதுபதிதான் இப்படத்தில் நடிப்பதாக இருந்தது. தமிழில் பல படங்கள், தெலுங்கில் சில படங்கள் என பிஸியாக நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. இந்தப் படங்களுக்காக விஜய் சேதுபதி கால்ஷீட் ஒதுக்கிக் கொடுத்திருப்பதால் இந்தப் படத்திலிருந்து இவர் விலகுவதாக தகவல்கள் வெளியாகிவருகிறது.

தற்போது படத்தின் ப்ரீ புரொடக்‌ஷனுக்கான வேலைகள் பரபரப்பாகப் போய்க்கொண்டிருக்கிறது. இதன் பணிகள் முடிந்த பின்னர், இந்த வருடத்தின் இறுதியில் படத்தின் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளது, படக்குழு. மேலும், அதிகாரபூர்வ அறிவிப்பும் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த கட்டுரைக்கு