Published:Updated:

`உனக்கு மட்டும்தான் சொல்றேன்!' - முதல்பட இயக்குநருக்கு விஜய் தேவரகொண்டா கொடுத்த இன்பஅதிர்ச்சி

Vijay Devarakonda with tharun Basker
Vijay Devarakonda with tharun Basker

விஜய் தேவரகொண்டாவின் புதிய தயாரிப்பு நிறுவனம் குறித்து ஏற்கெனவே பல இணையதளங்கள் கிசுகிசுத்துக்கொண்டிருந்தன. தற்போது இந்த வீடியோ மூலம் அதை அவரே அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளார்.

``உனக்கு மட்டும்தான் சொல்றேன்" என கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த இயக்குநர் தருண் பாஸ்கரை போனில் அழைத்து ஒரு செய்தியைச் சொன்ன விஜய் தேவரகொண்டாவின் வீடியோ, இரண்டு நாள்களாக செம வைரல். அப்படி தருணிடம் என்னதான் கூறினார், விஜய்?

Movie Title
Movie Title

விஜய் தேவரகொண்டாவின் புதிய தயாரிப்பு நிறுவனம் குறித்து ஏற்கெனவே பல இணையதளங்கள் கிசுகிசுத்துக் கொண்டிருந்தன. தற்போது இந்த வீடியோ மூலம் அவரே இதை அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளார். 'கிங் ஆஃப் தி ஹில்' எனத் தன் தயாரிப்பு நிறுவனத்துக்குப் பெயர் சூட்டியுள்ள விஜய், அதன் முதல் படத்தைத் தருணை ஹீரோவாக வைத்து தயாரிக்கவிருக்கிறார் என்றும் இந்த வீடியோ மூலம் தெரிகிறது.

காமெடியாக உருவாக்கப்பட்டுள்ள இந்த வீடியோவில், கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கும் தருணுக்கு போன் செய்து, தான் ஒரு தெலுங்குப் படத்துக்கான ஸ்கிரிப்டைக் கேட்டதாகவும், கேட்டு குலுங்கிக் குலுங்கிச் சிரித்ததாகவும் சொல்கிறார். மேலும், அந்தப் படத்தைத் தானே தயாரிக்கப்போவதாகவும், அதில் தருண்தான் ஹீரோவாக நடிக்கவேண்டும் என்றும் கூறுகிறார் விஜய் தேவரகொண்டா.

இதைக் கேட்டதும் முதலில் ஷாக்காகும் தருண், பின்னர் "படத்தின் டைட்டில் என்ன?" எனக் கேட்கிறார், அதற்கு "மீக்கு மாத்ரமே செப்தா" (உனக்கு மட்டும்தான் சொல்றேன்) என்கிறார் விஜய் தேவரகொண்டா. தருண்தான் விஜய் தேவரகொண்டாவை முதன்முதலாக ஹீரோவாக வைத்து `பெல்லி சூப்புலு' என்ற படத்தை இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு