Published:Updated:

பாலிவுட்டில் ரீமேக்காகும் விஜய் தேவரகொண்டாவின் அடுத்த படம்!

'அர்ஜுன் ரெட்டி' படத்தைத் தொடர்ந்து, விஜய் தேவரகொண்டா நடித்த மற்றொரு படமும் இந்தியில் ரீமேக்காக இருக்கிறது.

'கீத கோவிந்தம்'
'கீத கோவிந்தம்'

இன்று, விஜய் தேவரகொண்டாவுக்கு இந்தளவுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் என்றால், அதற்கு முக்கியக் காரணம், 'அர்ஜுன் ரெட்டி'. இதில் வரும் அர்ஜுன் - ப்ரீத்தி காம்போவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். பிளாக்பஸ்டர் வெற்றிபெற்ற இந்தப் படம், தமிழில் 'ஆதித்யா வர்மா' என்றும், இந்தியில் 'கபீர் சிங்' என்றும் ரீமேக் ஆனது. இவர் நடித்த கேரக்டரில் ஷாகித் கபூர் நடித்திருந்தார். அந்தப் படத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்தப் படத்தைத் தொடர்ந்து, விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தனா ஆகியோர் நடித்த 'கீத கோவிந்தம்' படத்தையும் பாலிவுட்டில் ரீமேக் செய்யவிருக்கிறார்கள். இந்தப் படத்தில் இடம்பெற்ற 'இன்கேம் இன்கேம் காவலே...' பாடலுக்கு இணைய உலகில் ஏகபோக ரெஸ்பான்ஸ்.

பாலிவுட்டில் ரீமேக்காகும் விஜய் தேவரகொண்டாவின் அடுத்த படம்!

இதன் இந்தி வெர்ஷனை ரோஹித் ஷெட்டி இயக்கவிருக்கிறார். தெலுங்கில் ஹிட்டான 'டெம்பர்' படத்தை 'சிம்பா' என்ற பெயரில் இந்தியில் இயக்கியிருந்ததும், அதில் ரன்வீர் சிங் நடித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. தற்போது, அக்‌ஷய் குமாரை வைத்து 'சூர்யவன்ஷி' என்ற படத்தை இயக்கிவருகிறார்.

இவை தவிர, விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா நடித்திருந்த மற்றொரு படமான 'டியர் காம்ரேட்' படத்தின் ரீமேக் உரிமை கரண் ஜோஹரிடம் உள்ளது.