Published:Updated:

4 கதாநாயகிகளுடன் `வேர்ல்டு ஃபேமஸ் லவ்வர்' விஜய் தேவரகொண்டா! - செப் 20-ல் ஃபர்ஸ்ட் லுக்

விஜய் தேவரகொண்டா
விஜய் தேவரகொண்டா ( வேர்ல்டு ஃபேமஸ் லவ்வர் )

தேவரகொண்டா நடிப்பில் சமீபத்தில் வெளியான `டியர் காம்ரேட்' படத்துக்குப் போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. இந்த நிலையில், ஐஷ்வர்யா ராஜேஷ், ராஷி கண்ணா, கேத்ரின் தெரசா, பிரேஸில் மாடலான இஸபெல் ஆகிய நான்கு கதாநாயகிகளுடன் களமிறங்கியிருக்கிறார். 

`டாக்ஸிவாலா', `டியர் காம்ரேட்' படத்தைத் தொடர்ந்து விஜய் தேவரகொண்டா நான்கு கதாநாயகிகளுடன் படம் ஒன்றில் நடிப்பதாகத் தகவல் வெளியானது. ஐஷ்வர்யா ராஜேஷ், ராஷி கண்ணா, கேத்ரின் தெரசா, இஸபெல் லெய்ட் ஆகிய நால்வரும் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து நடிக்கின்றனர். இப்படத்தின் டைட்டில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

வேர்ல்டு ஃபேமஸ் லவ்வர்
வேர்ல்டு ஃபேமஸ் லவ்வர்
விஜய் தேவரகொண்டா

தமிழில் பல்வேறு படங்களில் நடித்துவந்த ஐஷ்வர்யா ராஜேஷ் `கனா'வின் தெலுங்கு ரீமேக்கான கௌசல்யா கிருஷ்ணமூர்த்தி படத்தின் மூலம் டோலிவுட்டுக்கு அறிமுகமானார். இதையடுத்து, இவர் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து நடிக்கும் படத்துக்கு`வேர்ல்டு ஃபேமஸ் லவ்வர்' (World Famous Lover) என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. தேவரகொண்டா நடிப்பில் சமீபத்தில் வெளியான டியர் காம்ரேட் படத்துக்குப் போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. இந்தநிலையில், ஐஷ்வர்யா ராஜேஷ், ராஷி கண்ணா, கேத்ரின் தெரசா, பிரேஸில் மாடலான இஸபெல் ஆகிய நான்கு கதாநாயகிகளுடன் களமிறங்கியிருக்கிறார். 

`ஓனமலு', `மல்லி மல்லி இதி ராணி ரோஜு', `ஒங்கரால ராம்பாபு' ஆகிய படங்களை இயக்கிய கிராந்தி மாதவ் இப்படத்தை இயக்குகிறார். மலையாளம், தெலுங்கு, தமிழ் எனப் பல்வேறு மொழிகளில் இசையமைக்கும் கோபி சுந்தர் இப்படத்துக்கு இசையமைக்கிறார். ரொமான்டிக் என்டர்டெயினர் ஜானரில் உருவாக இருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு, இன்று தொடங்கியது. கிரியேட்டிவ் கமர்ஷியல்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், வரும் செப்டம்பர் 20-ம் தேதி வெளியாகும் எனத் தெரிவித்துள்ளது, படக்குழு.  

அடுத்த கட்டுரைக்கு