Published:Updated:

டோலிவுட் ஃபேக்நியூஸ்... துல்கரின் அன்பு... பாரதிராஜாவின் தேனி பரபர! சோஷியல் மீடியா ரவுண்டப்

ஸ்ருதி ஹாசன் #சோஷியல் மீடியா ரவுண்டப்!
ஸ்ருதி ஹாசன் #சோஷியல் மீடியா ரவுண்டப்!

லாக்டெளனில் பரபரப்பாக இருக்கும் ஒரே இடம், சோஷியல் மீடியாதான். பிரபலங்கள் அங்கே ஷேர் செய்யும் சுவாரஸ்யங்கள், இங்கே உங்கள் பார்வைக்கு. #சோஷியல் மீடியா ரவுண்டப்!

தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா இளைஞர்களின் மேலாண்மை திறனுக்காகவும் வேலைவாய்ப்புகளுக்காகவும் பயிற்சி அளித்து வருகிறார். இந்த லாக்டெளன் தான் எதிர்ப்பார்க்காதது எனவும், இதனால் இளைஞர்களின் பயிற்சிக்கான நிதி தடைபடுவதாகவும் வருத்தம் தெரிவித்து இளைஞர்களுக்காகவும், கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கும் நிதி அளிக்க விருப்பமுள்ளவர்கள் தனது டிரஸ்ட்டின் வெப்சைட்டில் நிதியளிக்கலாம் எனத் தெரிவித்திருந்தார். இதற்கு பல தரப்பிலிருந்தும் நிதி வந்தது. அதைத் தனது சோஷியல் மீடியா பக்கங்ளிலும் ஸ்க்ரீன் ஷாட்டோடு வெளிப்படையாகவே பகிர்ந்திருந்தார்.

இந்நிலையில், சமீபத்தில் ‘விஜய் தேவரகொண்டா நிதி வாங்கி மோசடி செய்கிறார். தனது சுயலாபத்துக்காக உபயோகிக்கிறார்’ எனப் பத்திரிகை ஒன்று தவறான செய்தியை வெளியிட விஜய் தேவரகொண்டா செம அப்செட். இது குறித்து விளக்கம் அளித்துள்ள அவர், `என்னுடைய செயல்பாடுகளை வெளிப்படையாகவே தெரிவித்துள்ளேன். இது போன்ற கீழ்த்தரமான செய்திகளை வெளியிடும் பத்திரிகைகளை நான் மதிப்பதில்லை. நீங்கள் என்னை குறித்து என்ன வேண்டுமானாலும் தவறான தகவல் பரப்பலாம். ஆனால், நான் சரியான வழியில்தான் சென்றுகொண்டிருக்கிறேன்’ என #KillFakeNews #SpreadPositivity என்ற ஹேஷ்டேக்கில் பதிவிட்டுள்ளார். இந்த ஹேஷ்டேக்கில் சிரஞ்சீவி, ராணா டகுபதி, குஷ்பு எனத் திரையுலக பிரபலங்கள் பலரும் விஜய் தேவரகொண்டாவுக்கு தங்கள் ஆதரவைப் பதிவு செய்து வருகின்றனர்.

View this post on Instagram

SELF ISOLATING SINCE 1986 😁 one of my last shoots before lock down - I do miss working with people and the energy of a movie set and the lovely vibe of a jam room but isolating is something we HAVE TO DO and when the lock down eases it doesn’t mean you go out and throw a party and squish each other. PLEASE STAY HOME as much as you can. We are up against something unseen and it’s something we haven’t understood yet. So we must not behave as Though we are invincible or can somehow negotiate with a virus !! This time can be used to talk with yourself and ask yourself the questions you’ve been avoiding and maybe find a way to find some new answers ! ALSO a time to have gratitude for what you do have , your food your friends your family and your comforts .Sending everyone lots of love and tonnes of good joo joo 🌤

A post shared by @ shrutzhaasan on

கொரோனாவால் பல தொழில்கள் கடந்த ஒரு மாதமாக இயங்காமல் முடங்கி இருக்கின்றன. இந்நிலையில் பல தொழிலாளர்கள் வருவாய் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு பலரும் தங்களால் இயன்ற அளவு உதவி செய்து வரும் சூழலில் நடிகர் விஜய்சேதுபதி, நேற்றுப் போட்ட ஒரு ட்வீட் வைரலாகி இருக்கிறது. அதில், `பசி என்று ஒரு நோய் இருக்கிறது. அதற்கு ஒரு தடுப்பூசி கண்டுபிடிச்சா நல்லாருக்கும்’ என எழுதியிருக்கிறார்.

Trisha
Trisha

சினிமா ஷூட்டிங் ரத்து செய்யப்பட்டு கிட்டத்தட்ட ஒரு மாதத்துக்கும் மேலாகிவிட்ட நிலையில், பிரபலங்கள் அனைவரும் தங்கள் குடும்பத்துடன் நேரம் செலவிட்டு வருகின்றனர். இந்த நேரத்தில் அவர்கள் குடும்பத்துடன் வெளியிடும் கேண்டிட் புகைப்படங்கள்தான் சோஷியல் மீடியாவின் வைரல் கன்டன்ட்.

View this post on Instagram

Happiest birthday darling Marie. You’ve got every one of us acting your age while you insist, “Im a big girl now!” Maybe you’re right. You’re fast growing up, speaking in full sentences now. 3 years old you’re a big girl now. Twirling in your princess dresses. Creating your own games now. Telling us stories, you’re big girl now. Walking on your own. Running now. Learning how to jump, you’re a big girl now. Slow down darling Marie, be a baby still. Like the day we saw you for the first time. Held you and heard your cries for the first time. The day they thronged the hallways, to meet an angel for the first time. Be that baby girl still, we havnt had enough. Though forever more you’re our baby. Even when the world says, she’s a big girl now. Don’t rush, darling Marie, stay our baby girl still. #pappasattemptatapoem #youhavethateffectonus #happymaryamday #myangelbaby #cantbelieveit #youarethreeyearsold #loveyoutothemoonandback #ourbabygirl

A post shared by Dulquer Salmaan (@dqsalmaan) on

அந்த வகையில், தன் மகளின் பிறந்தநாளுக்காக, புகைப்படம் ஒன்றை வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்துகளைப் பகிர்ந்துள்ளார் துல்கர். தன் மகள் மரியம் அமீராவின் மூன்றாவது பிறந்தநாளில், ''பிறந்தநாள் வாழ்த்துகள் டார்லிங். இப்போது மூன்று வயதில் பெரிய பெண்ணாக வளர்ந்துவிட்டாய். நீயே கதைகள் சொல்கிறாய், புதுப்புது விளையாட்டுகளை உருவாக்குகிறாய். ஆனால், நீ இப்படி வேகமாக வளராதே. எனக்கான சிறு பெண்ணாகவே இரு'' என மகள் மீதான தன் அன்பை வெளிப்படுத்தியுள்ளார் துல்கர்.

Madhavan with his son
Madhavan with his son
சிவகார்த்திகேயன் தன் மகளுடன்
சிவகார்த்திகேயன் தன் மகளுடன்

`சிவாஜி’, ‘அழகிய தமிழ்மகன்' கந்தசாமி' உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை ஷ்ரேயா. கடைசியாகத் தமிழில் `அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தில் நடித்தார். தற்போது இவரது நடிப்பில் `நரகாசுரன்’ படம் வெளிவரவிருக்கிறது. 2018-ம் ஆண்டு தனது ரஷ்ய நண்பரான ஆண்ட்ரியை மணம் முடித்தார் ஷ்ரேயா.

இந்த லாக்டெளன் நாள்களில் கொரோனா விழிப்புணர்வு குறித்து இன்ஸ்டா லைவில் மருத்துவர்களுடன் உரையாடுவது, சந்தேகங்களுக்கு விளக்கம் பெறுவது எனப் பிஸியாக இருக்கிறார். அது மட்டுமல்லாமல், தன் கணவருடன் சமையல் செய்வது, இருவரும் ஒன்றாக வேலை செய்வது என ஜாலியான ப்ராங்க் வீடியோக்களையும் பகிர்ந்து வருகிறார்.

சமீபத்தில் இயக்குநர் பாரதிராஜா தேனியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார் என்ற செய்தி பரபரப்பாகப் பேசப்பட்டு வந்தது. இந்த நிலையில், அதற்கான விளக்கத்தை வீடியோவாக வெளியிட்டுள்ளார் பாரதிராஜா.

தேனியில் வசிக்கும் தன் சகோதரியின் உடல்நிலை காரணமாக அவரைக் காண்பதற்காக முறையான அனுமதி பெற்றே பல மாவட்டங்களைக் கடந்து தான் வந்ததாகவும், அதனால் மக்களின் நலன் கருதியே தாங்கள் தனிமையில் இருப்பதாகவும் அந்த வீடியோவில் தெளிவுபடுத்தியுள்ளார்.

குஷ்பூ தன் அம்மா மற்றும் மகளுடன்
குஷ்பூ தன் அம்மா மற்றும் மகளுடன்
அடுத்த கட்டுரைக்கு