Published:Updated:

வேட்டி காஸ்ட்யூம்ஸ் காட்டியபோது விஜய்யின் ரியாக்ஷன்..? காஸ்ட்யூமர் ஷேரிங்ஸ்

' ஒரு தயக்கத்தோடதான் விஜய் சார்கிட்ட வேட்டியைக் காட்டினேன்'' - அனுபவம் பகிரும் 'பிகில்' காஸ்ட்யூம் டிசைனர்!

வேட்டி காஸ்ட்யூம்ஸ் காட்டியபோது விஜய்யின் ரியாக்ஷன்..? காஸ்ட்யூமர் ஷேரிங்ஸ்

' ஒரு தயக்கத்தோடதான் விஜய் சார்கிட்ட வேட்டியைக் காட்டினேன்'' - அனுபவம் பகிரும் 'பிகில்' காஸ்ட்யூம் டிசைனர்!

Published:Updated:

'' `பிகில்' விஜய் சார் கூட எனக்கு அஞ்சாவது படம். அட்லீயோடு மூணாவது படம். சென்னையில இந்தத் தீபாவளிக்கு பிகில் வேட்டிதான் டிரெண்டாமே... செம ஹேப்பி...'' மீண்டும் ஒருமுறை விஜய் மேஜிக் வொர்க் அவுட் ஆன உற்சாகத்துடன் பேச ஆரம்பிக்கிறார் கோமல் ஷஹானி. 'பிகில்' படத்தின் காஸ்ட்யூம் டிசைனர்களில் ஒருவர். படத்தில் விஜய்யின் இரண்டு கெட்டப்புகளுக்கும் டிசைன் செய்திருக்கிறார்.

கோமல் ஷஹானி
கோமல் ஷஹானி

''அட்லீ என்கிட்ட கதையைச் சொல்லி, ரெண்டு கெட்டப்புகளுக்குமான தேவையை விளக்கினார். இதுக்கு முன்னாடி விஜய் சாருக்கு 'ஜில்லா', 'துப்பாக்கி', 'தெறி', 'மெர்சல்'னு நாலு படங்களுக்கு காஸ்ட்யூம்ஸ் டிசைன் பண்ணியிருக்கேன். அந்தச் சாயல் இல்லாம புது ஃபீல் கொடுக்கணும்னு நிறைய ரிசர்ச் பண்ணினேன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ராயப்பன் கேரக்டருக்கு வேட்டி, சட்டைனு முடிவானது. எக்கச்சக்க லுக் டெஸ்ட்... ஏகப்பட்ட டிசைன்ஸ்னு நிறைய டிரை பண்ணிப் பார்த்தோம். வெள்ளையிலேருந்து லைட் கலர்ஸ் வரைக்கும் வேற வேற கலர் வேட்டி, டபுள் ஃபிளாப் ஷர்ட், கறுப்பு கலர் மோதிரம்னு நிறைய டிசைன்ஸ் காட்டினேன். எல்லாமே விஜய் சாருக்குப் பிடிச்சிருந்தாலும், கடைசியில அந்தப் பாட்டில் கிரீன் மற்றும் கறுப்பும் பீஜ் கலரும் சேர்ந்த அந்த வேட்டியை ஓகே பண்ணினார். முந்தைய படங்களைப் போலவே இந்தப் படத்துலயும் அவருக்கு என் டிசைன்ஸ் பிடிச்சிருச்சு. அப்பா விஜய்யின் வேட்டி சட்டை ஒரு பக்கம் டிரெண்டாயிட்டடிருக்கும்போதே, மகன் விஜய்யின் ஜெர்சியும் பாப்புலராயிட்டிருக்கு. இதுல நான் பெருமைப்பட ஒண்ணுமில்லை.

பிகில் வேட்டி, ஜெர்ஸி
பிகில் வேட்டி, ஜெர்ஸி

விஜய் சார் மாதிரி ஸ்டைலிஷான ஹீரோக்களுக்கு வொர்க் பண்றது, எங்களைப் போன்ற டிசைனர்ஸுக்கு ரொம்ப ஈஸி. எல்லா காஸ்ட்யூம்ஸிலும் செமயா இருப்பாங்க...'' – விஜய் மேஜிக்கிலிருந்து வெளியே வராத கோமல், பாலிவுட்டிலிருந்து கோலிவுட்டுக்கு வந்திருக்கிறார். பாலிவுட் இயக்குநர் ஆஷிஷ் ஆர், மோகனின் மனைவி.

பாலிவுட்டில் தீபிகா படுகோன், ஐஸ்வர்யா ராய், நேஹா துபியா, ப்ரீத்தி ஜிந்தா, அக்ஷய் குமார், ப்ரியங்கா சோப்ரா, காஜல் அகர்வால் எனப் பலருக்கும் காஸ்ட்யூம் டிசைன் செய்த அனுபவத்தோடு கோலிவுட்டுக்கு வந்திருக்கிறார் கோமல்.

விஜய்யின் வேட்டி, சட்டை ஒரு பக்கம் டிரெண்டாயிட்டடிருக்கும்போதே மகன் விஜய்யின் ஜெர்சியும் பாப்புலராயிட்டிருக்கு.
கோமல் ஷஹானி

''தமிழ்ப் படங்களில் வொர்க் பண்றது ரொம்பப் பிடிக்குது. இங்கே எல்லாமே பக்காவா பிளான்படி நடக்குது. தமிழ்ப் படங்களும் தமிழ்நாடும் ரொம்பப் பிடிச்சுப் போனதால கூடிய சீக்கிரம் சென்னையில என்னுடைய ஃபிளாக்ஷிப் ஸ்டோர் ஆரம்பிக்கப் போறேன்...'' – சீக்கிரமே சென்னைவாசியாகும் திட்டமும் சேர்த்துச் சொல்கிறார் கோமல்.

கோலிவுட்டில் டிசைனர்ஸுக்குப் பஞ்சமே இல்லை. கடும்போட்டிகளுக்கிடையில் தொடர்ந்து நம்பர் ஒன் நட்சத்திரங்களுடன் பயணிப்பது இவருக்கு மட்டும் எப்படி சாத்தியமாகிறது?

''கலர் கலரா டிசைன் பண்றதில்லை காஸ்ட்யூம் டிசைனரின் வேலை. கேரக்டரைப் படிக்கணும். கதையைப் புரிஞ்சுக்கணும். இந்த ரெண்டும் தெரிஞ்சாதான் காஸ்ட்யூமைப் பத்தி யோசிக்கவே முடியும். 24 மணி நேரமும் அலர்ட்டா இருக்கணும். நாம பார்க்கற எந்தக் காட்சியிலேருந்தும் ஒரு பொறி பறக்கலாம். அது ஐடியாவைக் கொடுக்கலாம். எல்லாத்தையும்விட அவசியம் ஹார்டு வொர்க். அது என்னிக்கும் கைவிடாது...'' சிம்பிள் சீக்ரெட் பகிர்கிறார்.

''தமிழ் சினிமா எனக்கு சீக்கிரமே பெரிய அங்கீகாரத்தையும் அடையாளத்தையும் கொடுத்திருக்கு. அடுத்து ஷங்கர் சார், மணிரத்னம் சார், ரஜினி சார், தனுஷ்... இவங்ககூடவெல்லாம் ஒரு படம் பண்ணணும்னு ஆசை. ஐம் வெயிட்டிங்...''

பிகில்
பிகில்
பெருங்கனவுடன் காத்திருப்பவர், அடுத்து அஜய் ஞானமுத்து - விக்ரம் இணையும் விக்ரம் 58 படத்தில் பிசி.