சினிமா
Published:Updated:

விஜயகாந்த்... விஜய் ஆண்டனி... சரத்குமார் - இது ‘வேற மாதிரி’ காம்போ!

விஜய் ஆண்டனி - மேகா ஆகாஷ்
பிரீமியம் ஸ்டோரி
News
விஜய் ஆண்டனி - மேகா ஆகாஷ்

இறுக்கமும் கோபமுமான மனுஷனாக வர்றார். இத்தனை ஆண்டுக்கால அனுபவத்தில் அவரால் நிறைய மாற்றங்களை நடிப்பில் கொண்டு வர முடிஞ்சது.

‘`நானும் விஜய் ஆண்டனியும் 15 வருஷங்களாக நல்ல பிரெண்ட்ஸ். எப்படியாவது ஹீரோ ஆயிடலாம்னு அவரும், முதல் படம் தோல்வியடைஞ்சு ரெண்டாவது படம் பண்ண நானும் அலைஞ்சிட்டு இருந்த சமயம். என்னுடைய ‘கோலி சோடா’வை அவர் தயாரிச்சு, நான் டைரக்ட் பண்ணணும், அதற்கு ஒரு நிறுவனம் ஆரம்பிக்கணும்னு கனவில் இருந்தோம். முடியாமல் போய் அவரவர் தனித்தனியே திரிஞ்சு வெளியே தெரிஞ்சதெல்லாம் வேற கதை. இப்போ சமீபத்தில் சந்தித்ததும் இந்த `மழை பிடிக்காத மனித’னைச் சொன்னேன். அவருக்கு ரொம்பவும் பிடிச்சது. அவருக்கான சரியான பேக்கேஜ். பட்டுத்தெறிக்கிற ஆக்‌ஷன், வேறுபட்ட கதைன்னு அவருக்கு ஏத்த படம்தான்” உற்சாகமாகப் பேசுகிறார், ஒளிப்பதிவாளர் - இயக்குநர் விஜய் மில்டன்.

`` `மழை பிடிக்காத மனிதன்' படத்தின் பெயரே கவனம் ஈர்க்குதே?’’

“மனசுக்கு நெருக்கமான இந்தக் கதையோட சில காலம் அலைஞ்சுக்கிட்டே இருந்தேன். நீங்க விவசாயியா, மண்பாண்டம் செய்கிறவரா, உங்கள் வியாபாரம் குடை விற்பதா, உப்பு விற்பதா என்பதைப் பொறுத்துதான் உங்களுக்கு மழை பிடிக்குமா, பிடிக்காதா என்பது தெரியும். ஆனால் மழைக்கு இது எதுவுமே தெரியாது. அது பாட்டுக்கு அதன் போக்கிலேயேதான் இருக்கு. மழை பிடிக்காதவர்களும் இருப்பார்களா என்ற திடுக்கிடல் இதில் இருக்கு. எல்லோருக்கும் பிடிக்கும் ஒரு விஷயம், ஒருத்தனுக்குப் பிடிக்காமல் ஆகியிருக்குன்னா... அவனுக்கு என்னவெல்லாம் நடந்திருக்கு, இந்த மழை கொண்டு வந்து சேர்க்கும் ஞாபகங்கள் என்னன்னு நிறைய கேள்விகள் இதன் பின்னாடி இருக்கு. ஒவ்வொரு ஹீரோவுக்கும் படத்தில் பேக் ஸ்டோரி இருக்கும். ஆனால் இதில் ஹீரோவுக்கு ப்ளாஷ்பேக் வராது. ஆனால் படம் முடியும்போது ஒரு தெளிவு கிடைத்திருக்கும். இப்படிப்பட்டவனாக இருந்ததனால்தான் மழை பிடிக்காமப் போயிருக்குன்னு தெரிஞ்சிருக்கும்.”

விஜயகாந்த்... விஜய் ஆண்டனி... சரத்குமார் - இது ‘வேற மாதிரி’ காம்போ!
விஜயகாந்த்... விஜய் ஆண்டனி... சரத்குமார் - இது ‘வேற மாதிரி’ காம்போ!
விஜயகாந்த்... விஜய் ஆண்டனி... சரத்குமார் - இது ‘வேற மாதிரி’ காம்போ!

``ஆக்‌ஷனும் நிறைய இருக்கும்போல் இருக்கே?’’

“நிறைய இருக்கு. ஆனால் தேவையில்லாமல் இல்லை. காரண காரியத்தோடு இருக்கு. எல்லோரும் தாங்கள் சேர்த்திருக்கிற அனுபவத்தை வச்சுதான் ஒரு முயற்சியில் இறங்குகிறோம். வழக்கமாகச் செய்கிற அனுபவத்தை உடைச்சிட்டு வேற ஒரு புது ஸ்கிரிப்டைக் கொண்டு வந்திருக்கேன். காலையில் நாம் எழுந்திருக்க ஒரு காரணம் வேணும். சேவல் கூவிடுச்சு, சூரியன் உதிச்சிடுச்சுன்னு யாரும் எழுந்திருக்கிறதில்லை. நாம் தினம் ஒரு காரியமாற்ற சில விஷயங்கள் நம்மைத் துரத்திக்கிட்டே இருக்கணும். அப்படி எதுவுமே இல்லாமல் அவனுக்குத் தெரியாத ஒரு இடத்திற்கு வந்து ஹீரோ இறங்குகிறான். அங்கே அவனை யாருக்கும் தெரியாது. அவனுக்கும் யாரையும் தெரியாது. இந்த இடத்தில் வாழ்க்கையைத் தொடங்குகிறது எவ்வளவு கடினமாக இருக்கும். ஆனாலும் அவனுக்கு ஒரு நாய்க்குட்டி, நண்பன், அவன் அம்மா, இன்னொரு பொண்ணுன்னு அடுத்தடுத்து கிடைச்சிட்டே இருக்காங்க. சொல்லப்போனால் காசு பணம் எல்லாம் இரண்டாம்பட்சம்தானே. ‘சாப்பிட்டியா’ன்னு கேட்கிற ஒரு வார்த்தைதானே நமக்குத் தேவைப்படுது. அப்படி தேவைப்பட்டவனாக அந்த இடத்தில் இருக்கிறான் என் ஹீரோ. எதுவும் இல்லாத ஒருத்தனை, எல்லாம் இருக்கிறவன் எதுவும் செய்யலாம் என்று நினைக்கிறபோது ஆரம்பிக்குது பிரச்னைகள். நிச்சயம் படம் புதுசா இருக்கும்.”

``விஜய் ஆண்டனி எப்படி நடிச்சிருக்கார்?’’

“இறுக்கமும் கோபமுமான மனுஷனாக வர்றார். இத்தனை ஆண்டுக்கால அனுபவத்தில் அவரால் நிறைய மாற்றங்களை நடிப்பில் கொண்டு வர முடிஞ்சது. எனக்குப் பதினைஞ்சு வருஷத்துக்கு முன்னாடி அறிமுகமான ஆண்டனி நிச்சயம் அவரில்லை. ‘மழை பிடிக்காத மனிதன்’ ஆக்‌ஷனும் அதிகம் சேர்ந்த படம்தான். ஒரு மனிதனின் மனசைத் தோண்டினால் அதில் சந்தோஷமும் துக்கமும் கொப்பளிக்கலாம். ஆனால் சில சமயங்களில் திராவகம் ஓடும் சூழ்நிலைகளும் இருக்கு. அப்படிப்பட்ட எல்லா இடங்களிலும் அருமையாக நடிச்சிருக்கார் ஆண்டனி. அவர் அமைதியா வந்து நிற்பார். இறங்கிட்டார்னா கொடுக்கிற எக்ஸ்பிரஷன்ஸ் அள்ளும். எல்லாத்துக்கும் மேலே அவர் என் மேல வைத்த நம்பிக்கையும் அசாத்தியமானது.”

விஜயகாந்த்... விஜய் ஆண்டனி... சரத்குமார் - இது ‘வேற மாதிரி’ காம்போ!
விஜயகாந்த்... விஜய் ஆண்டனி... சரத்குமார் - இது ‘வேற மாதிரி’ காம்போ!
விஜயகாந்த்... விஜய் ஆண்டனி... சரத்குமார் - இது ‘வேற மாதிரி’ காம்போ!

``மேகா ஆகாஷ் எப்படி... இன்னும் பெரிய இடத்துக்கு அவங்க வந்திருக்கணும்?’’

“ஆமாம். இதில் அவங்களுக்கு ரொம்ப நல்ல ரோல். உடனே சம்மதிச்சு பிரியத்தோடு நடிச்சுக் கொடுத்தாங்க. கதை மேலே அவங்களுக்கு நம்பிக்கை. இதுவே எளிய மனிதர்களின் கதைதான். நாம் தேடிக்கிற வாழ்க்கை, வந்து சேர்கிற காதல், செய்த தப்பு, அதனால் கிடைக்கிற வேதனைன்னு நம்ம உலகம் எல்லாமே அப்படித்தான் இருக்கு. அப்படிப் புரட்டிப் போட்ட வாழ்க்கையில் பொருந்துகிற மாதிரி கேரக்டரில் வர்றாங்க. தங்கச்சியா நடிச்சிருக்கிற பிரணதி, அம்மாவாக வருகிற சரண்யா என அனைவருக்கும் நல்ல பெயர் கிடைக்கும். பெரும் பொருட்செலவில் தயாரித்த தனஞ்செயன், கமல் போரா, பிரதீப் இவர்களுக்கு நான் கடமைப்பட்டிருக்கேன்.”

``சரத்குமாரையும் கொண்டுவந்து நிறுத்திட்டீங்களே?’’

‘`வந்து நின்னாலே கம்பீரம், ஆளுமை வேணுங்கிற மாதிரி ஒரு முக்கியமான கேரக்டர் இருந்தது. அப்படி யோசித்ததில் சரத் சார்தான் ஞாபகத்திற்கு வந்தார். ‘சூரியவம்சம்’ போதெல்லாம் அவர்கூட நல்ல பழக்கம். எங்கே கண்டாலும் தோளைத் தட்டிக்கொடுத்து விசாரிப்பார். அவர்கிட்ட போய் சொன்னதும் ‘மில்டன் கூப்பிட்டால் என்னால் முடியாதுன்னு சொல்ல முடியாது’ன்னு வந்திட்டார். பிரமாதமா வந்திடுச்சு. டாலி தனஞ்செயா கன்னடத்தில் இப்போ டாப் ரேஞ்சில் இருக்கார். நான்னா அவருக்கு ரொம்ப இஷ்டம். அவரைக் கூப்பிட்டுப் பார்ப்போம்னு நினைச்சுக் கேட்டேன். ‘வந்திடறேன் மில்டன்'னு சொல்லி அன்பைக் காட்டிட்டார். பிரித்வி அம்பார்னு புதுப்பையன். அவரையும் சேர்த்து செம காம்பினேஷனில் மொத்தமே அழகாக மாறிவிட்டது.”

விஜயகாந்த்... விஜய் ஆண்டனி... சரத்குமார் - இது ‘வேற மாதிரி’ காம்போ!
விஜயகாந்த்... விஜய் ஆண்டனி... சரத்குமார் - இது ‘வேற மாதிரி’ காம்போ!
விஜயகாந்த்... விஜய் ஆண்டனி... சரத்குமார் - இது ‘வேற மாதிரி’ காம்போ!
விஜயகாந்த்... விஜய் ஆண்டனி... சரத்குமார் - இது ‘வேற மாதிரி’ காம்போ!

``விஜயகாந்த் இருக்காருன்னு பேச்சு வந்ததே!’’

“விஜயகாந்தை மறுபடியும் திரையில் பார்க்க உங்களுக்கெல்லாம் எப்படி ஆர்வம் இருக்கோ அதுமாதிரி எனக்கும் இருக்கு. அதற்காகவே இந்த முயற்சி. இதுவரைக்கும் அவருக்கான இடம் படத்தில் இருக்கு. முக்கியமான எல்லாரையும் ஒரு குரலும், பளிச்னு ஒரு கேரக்டரும் நிர்வகிக்கும். அந்த இடத்தில் சிறிய, மறக்க முடியாத கேரக்டரில் விஜயகாந்த் இருப்பார். கதையை அவர்கிட்டே சொல்லியாச்சு. அவருக்கு என் மேல் நிறைய அன்பு உண்டு. ‘வாங்க மில்டன்’னு சொல்ற வார்த்தையிலேயே அன்பைக் கொட்டுவார். அவரது உடல்நலன் நல்ல நிலைமைக்கு முன்னேறிக்கிட்டு வருது. நாங்கள் டையூ - டாமனில் க்ளைமாக்ஸ் முடிச்சிட்டு வந்ததும் அவர் தயாராக இருப்பார் என்று நம்புறோம். ரெண்டு நாளில் அவருக்கு சிரமம் வராமல் படப்பிடிப்பை முடித்துவிட ரெடியாகிறோம். காலம் கனியட்டும்.”

விஜயகாந்த்... விஜய் ஆண்டனி... சரத்குமார் - இது ‘வேற மாதிரி’ காம்போ!
விஜயகாந்த்... விஜய் ஆண்டனி... சரத்குமார் - இது ‘வேற மாதிரி’ காம்போ!

``35 வருட அனுபவம். இந்த சினிமா கற்றுத்தந்த படிப்பினை என்ன?’’

“ஒரு டைரக்டர், இங்கே நான் வந்தபோது ‘இந்த சினிமாவில் எல்லாம் கிடைக்கும். ஆனால் சினிமாவுக்கு நீதான் பயன்படணுமே தவிர அதை உனக்குப் பயன்படுத்திக்கூடாது’ன்னு சொன்னார். அதை இதுநாள் வரைக்கும் பின்பற்றிக்கிட்டு இருக்கேன். திரும்பிப் பார்க்கும்போது, சினிமாவில் சொத்தெல்லாம் பெரிதாக எதுவும் சேர்க்கவில்லை. ஆனால் ஒரு எடிட்டிங் ரூம், டப்பிங் ஸ்டூடியோ, சின்னதா ஒரு தயாரிப்பு நிறுவனம், இரண்டு கேமரா, பெட்டி முழுக்க ஸ்கிரிப்ட்னு நாளைக்கு நினைச்சாலும் படம் ஆரம்பிக்கிறதுக்கான எல்லா விஷயமும் இருக்கு - பணத்தைத் தவிர. அதற்காக நான் எப்பவும் வேலையைத் தொடங்காமல் இருந்ததே கிடையாது. 87-ல் என் அப்பா விஜயராஜிடம் அசிஸ்டன்ட் டைரக்டராக வேலை பார்த்தேன். இந்த சினிமா அப்பாவோட ஏக்கம். அவரோட நிறைவேறாத கனவு. அவரோட தொடர்ச்சியா இருக்கிறது மட்டுமே எனக்குப் பெருமை. 96-ல் என் ஒளிப்பதிவில் முதல் படம். 32 படங்கள் ஒளிப்பதிவாளராக, 7 படங்கள் இயக்குநராகவும் முடிச்சாச்சு. வெற்றி தோல்வியைத் தாண்டி இந்தப் பயணத்தை அனுபவிச்சிருக்கேன். காலையில் ஷூட்டிங் போய் கொஞ்சமும் ஆர்வம் குறையாமல் வேலை பார்க்கிறேன். வேலையைத் திருப்தியாக நிறைவாக முடித்து வீட்டிற்கு சந்தோஷமாகத் திரும்பியிருக்கிறேன்.”