சினிமா
Published:Updated:

ஷாப்பிங்மாலைக் கைப்பற்றும் தீவிரவாதிகள்... காப்பாற்றும் விஜய்! - ‘பீஸ்ட்’ எக்ஸ்க்ளூசிவ்

விஜய்
பிரீமியம் ஸ்டோரி
News
விஜய்

படங்கள்: கிரண்சா

வேற லெவல் வெரைட்டியாக ரெடியாகிக் கொண்டிருக்கிறது விஜய்யின் ‘பீஸ்ட்'. ஊரக உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் பெற்ற வெற்றி தந்த உற்சாகத்தில் பொங்கலுக்கு ‘பீஸ்ட்’ படத்தை எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருக்கிறார்கள் விஜய் ரசிகர்கள். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘பீஸ்ட்’டில் என்னென்ன ஸ்பெஷல்?

* 'பீஸ்ட்' முழுக்க முழுக்க ஒரு மாலில் நடக்கும் கதை. பிரமாண்ட மால் ஒன்றை டெரரிஸ்ட்கள் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துவிடுகின்றனர். அவர்களின் சதியை விஜய் முறியடித்து, அங்கு மாட்டிக் கொண்ட மக்களையும் அவர் காப்பாற்றுகிறார்.. இதுதான் பீஸ்ட்டின் கதை என்கிறது விஜய் வட்டாரம். ‘இது தங்கக்கடத்தல் தொடர்பான கதை’ என்றும் தகவல்.

ஷாப்பிங்மாலைக் கைப்பற்றும் தீவிரவாதிகள்... காப்பாற்றும் விஜய்! - ‘பீஸ்ட்’ எக்ஸ்க்ளூசிவ்
ஷாப்பிங்மாலைக் கைப்பற்றும் தீவிரவாதிகள்... காப்பாற்றும் விஜய்! - ‘பீஸ்ட்’ எக்ஸ்க்ளூசிவ்

* படத்தில் விஜய், பூஜா ஹெக்டே தவிர, செல்வராகவன், யோகிபாபு, விடிவி கணேஷ், கவின், ஜான் விஜய், ஷைன் டாம் சாக்கோ, அபர்ணா தாஸ், அங்குர் அஜித் விகல், லில்லிபுட் ஃபரூக்கி, ரெடின் கிங்க்ஸி, சுஜாதா பாபு, காயத்ரி ஷான், பிஜோர்ன், ஸ்ம்ருதி என நட்சத்திரப் பட்டாளமே அதிகம் இருக்கிறது. கேரளாவில் விஜய்க்கு பெரிய மார்க்கெட் இருப்பதால், மலையாள நடிகர்களையும் இதில் நடிக்கவைத்துள்ளனர். விஜய்யின் அம்மாவாக சன் நியூஸ் செய்தியாளரான சுஜாதா பாபு, விஜய்யின் தங்கையாக அபர்ணா தாஸ் நடித்துள்ளனர்.

* படத்தில் மூன்று வில்லன்கள் என்கிறார்கள். செல்வராகவன் மெயின் வில்லனாக நடிக்கிறாராம். அவரது முக்கால்வாசி போர்ஷன் முழுவதும் ஷூட் செய்யப்பட்டுவிட்டது. அதனை முடித்துக் கொடுத்த பின்பே, தனுஷை வைத்து இயக்கும் படத்துக்கு அவர் கிளம்பிப் போயிருக்கிறார்.

* கலை இயக்குநர் கிரணின் கலை வண்ணத்தில் லீலா பேலஸ் ஓட்டல் அருகே, பிரமாண்ட ஷாப்பிங் மால் செட் போட்டுள்ளனர். வடபழனியில் உள்ள ஃபோரம் மாலை அச்சு அசலாக அப்படியே செட் போட்டுள்ளார். அதில் சில போர்ஷனைகளை ஷூட் செய்த பின், டெல்லி ஷெட்யூலிலும் ஷாப்பிங் மால் ஒன்றில் ஆக்‌ஷன், ரொமான்ஸ் சீக்குவென்ஸ்களை படமாக்கியுள்ளனர்.

* ஈவிபி ஷெட்யூல், டெல்லி ஷெட்யூலுக்குப் பின், மீண்டும் கோகுலம் ஸ்டூடியோஸில் அடுத்து ஒரு செட் அமைத்து வருகின்றனர். அங்கே பத்து நாட்கள் ஷெட்யூலுக்குப் பின் மீண்டும் ஜார்ஜியா செல்கிறது டீம்.

* 'கே.ஜி.எப்' ஃபைட் மாஸ்டர்கள் அன்பறிவ், ஆக்‌ஷனைக் கவனிக்கிறார்கள். க்ளைமாக்ஸ் போர்ஷனுக்காக ஜார்ஜியா பறக்கவிருக்கும் படக்குழுவினர், அங்கே பிரமாண்ட சண்டைக்காட்சிகளை ஷூட் செய்யவுள்ளனர். 'புட்ட பொம்மா' நடன இயக்குநர் ஜானி, இந்தப் படத்தின் மூலம் தமிழிலும் கால்பதிக்கிறார்.

* ஒளிப்பதிவு மனோஜ் பரமஹம்சா. நெல்சனுடன் முதன்முறையாக இணைகிறார். ஆனால், விஜய்யுடன் அவருக்கு இது இரண்டாவது படம். ஷங்கரின் ‘நண்பனி’ல் மனோஜ்தான் கேமராமேன்.

ஷாப்பிங்மாலைக் கைப்பற்றும் தீவிரவாதிகள்... காப்பாற்றும் விஜய்! - ‘பீஸ்ட்’ எக்ஸ்க்ளூசிவ்
ஷாப்பிங்மாலைக் கைப்பற்றும் தீவிரவாதிகள்... காப்பாற்றும் விஜய்! - ‘பீஸ்ட்’ எக்ஸ்க்ளூசிவ்

* அனிருத் அனைத்துப் பாடல்களையும் கம்போஸ் செய்து கொடுத்துவிட்டார். விஜய்- பூஜா ஹெக்டே கூட்டணியில் இரண்டு டூயட்கள் படமாக்கிவிட்டனர். அடுத்து ஒரு டூயட் பேலன்ஸ். சிவகார்த்திகேயனையும் விஜய்யையும் இணைத்து வைத்திருக்கிறார் நெல்சன். சிவா எழுதிய பாடலை விஜய் பாடியிருக்கிறார் என்கிறது அனிருத் வட்டாரம்.

* ஷாப்பிங் மாலில் ஷூட் செய்யப்பட்ட போது ப்ளூ கலர் சட்டை மற்றும் வெள்ளை சட்டையில் ரத்தக்காயம் போஸ்கள் வெளியே கசிந்ததில் டென்ஷனாகிவிட்டதாம் பீஸ்ட் படக்குழு. விளைவு, அடுத்த ஷெட்யூல்களில் கெடுபிடிகளை மூன்று மடங்கு கூட்டியிருக்கிறது.

* இந்த தீபாவளிக்கு ‘பீஸ்ட்'டில் இருந்து சிங்கிள் ஒன்றை வெளியிட திட்டமிட்டு இருந்தனர். ஆனால், அந்த ஐடியாவை இப்போதைக்கு ஒத்தி வைத்துவிட்டதாகத் தகவல்.