Published:Updated:

விஜய் சேதுபதி டெம்ப்ளேட்டில் இன்னொரு விஜய் சேதுபதி படம்! 'துக்ளக் தர்பார்' ப்ளஸ், மைனஸ் ரிப்போர்ட்

துக்ளக் தர்பார்

'நீயே தடை, நீயே விடை!' இந்த வரிகளைக் கொஞ்சம் சீரியஸான கதையாக மாற்றினால் அதுவே 'துக்ளக் தர்பார்'. சன் டிவியில் நேரடியாக வெளியான படம், தற்போது நெட்ஃபிளிக்ஸில் வெளியாகியிருக்கிறது.

விஜய் சேதுபதி டெம்ப்ளேட்டில் இன்னொரு விஜய் சேதுபதி படம்! 'துக்ளக் தர்பார்' ப்ளஸ், மைனஸ் ரிப்போர்ட்

'நீயே தடை, நீயே விடை!' இந்த வரிகளைக் கொஞ்சம் சீரியஸான கதையாக மாற்றினால் அதுவே 'துக்ளக் தர்பார்'. சன் டிவியில் நேரடியாக வெளியான படம், தற்போது நெட்ஃபிளிக்ஸில் வெளியாகியிருக்கிறது.

Published:Updated:
துக்ளக் தர்பார்
எளிய மக்கள் வாழும் ஜே.கே.நகர் பகுதி அரசியல்வாதி ராயப்பன் (பார்த்திபன்). மக்களை சுரண்டி சுரண்டி தடதடவென பெரும் பதவிகளுக்கு உயர்கிறார். இந்த அபார வளர்ச்சியைக் கண்ணெதிரே பார்த்து வளரும் சிங்கம் என்கிற சிங்காரவேலன் (விஜய் சேதுபதி) அதே வழியில் உச்சம் தொடக் கனவு காண்கிறான். அதற்காக எதுவும் செய்யத் தயாராகிறான். இறுதியில் தான் கண்ட அரசியல் கனவு கைகூடும் நேரத்தில் தனக்குள் இருந்தே ஒரு வில்லன் பிறந்தால் என்ன ஆகும் என்பதுதான் 'துக்ளக் தர்பார்' படத்தின் கதை.

அந்நியன் ரக ஸ்ப்ளிட் பர்சனாலிட்டி கான்செப்ட்டை பெயர் எதுவும் சொல்லாமல், அரசியல் களத்தில் புகுத்தி, ஒருவனுக்குள்ளேயே இருக்கும் இரு வேறு கதாபாத்திரங்களை ஆடுபுலி ஆட்டம் வைத்திருக்கிறார் அறிமுக இயக்குநர் டெல்லி பிரசாத் தீனதயாளன்.

நடிகனாக சிக்ஸர் அடிக்க எக்கச்சக்க வாய்ப்புகள்; இருந்தும் கண்ணாடியில் தன்னிடமே சண்டையிட்டுக் கொள்ளும் ஒரு காட்சி தவிர்த்து மற்ற காட்சிகளில் விஜய் சேதுபதி பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. வழக்கமான விஜய் சேதுபதி டெம்ப்ளேட்டிலேயே வந்துபோகிறார்.

துக்ளக் தர்பார்
துக்ளக் தர்பார்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பார்த்திபனின் டிரேட்மார்க் நக்கல் நையாண்டி வசனங்கள் படத்தின் பெரிய ப்ளஸ். இன்கம்டேக்ஸ் ஆபீஸில் இவருக்கும் விஜய் சேதுபதிக்கும் நடக்கும் உரையாடல் ஜாலி கேலி அலப்பறை. அதேபோல், பார்த்திபன் இறுதிக் காட்சிகளில் தரும் முகபாவனைகளும், சத்யராஜுடனான பேச்சுவார்த்தைகளும் செம.

விஜய் சேதுபதியின் நண்பனாகக் குறும்படங்களிலிருந்து கூடவே அவருடன் பயணிக்கும் கருணாகரன். பல படங்களுக்குப் பிறகு, இந்தப் படத்தில் அவருக்கு நிறையக் காட்சிகள் ஒதுக்கியிருக்கிறார்கள். அவரும் சிறப்பாகவே செய்திருக்கிறார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

படத்தின் கதாநாயகி ராஷி கண்ணா. சேட்டு வீட்டுப் பெண்ணாக வருகிறார், காதலில் விழுகிறார். பின்பு ரெஸ்ட் எடுத்துவிட்டு இறுதிக்காட்சிகளில் அட்டெண்டன்ஸ் போடுகிறார். ஒரு காதல் பாட்டும் உண்டு. மஞ்சிமா மோகன் தங்கையாக வருகிறார். சற்றே அழுத்தமான வேடம். ஆனால், அதற்குரிய காட்சிகள் ஏனோ 'மூக்குத்தி' அளவுக்கு சிறியதாகவே இருக்கிறது. மங்களமாக பக்ஸ். அவர் கதாபாத்திரத்தின் பெயரே பெரிய க்ளூ என்றாலும், காட்சிகளோடு முடித்திருக்க வேண்டியதற்குப் பாடல் வரிகள் எல்லாம் எழுதி, காமெடியை அதற்குள்ளா அடக்குவது?!

துக்ளக் தர்பார்
துக்ளக் தர்பார்

கோவிந்த் வசந்தாவி பாடல்கள் பெரிதாக ஈர்க்கவில்லை. அறிவு பாடிய 'அண்ணாத்த சேதி' பாடல் மட்டும் முறுக்கேற்றுகிறது.

பாலாஜி தரணிதரனின் அசிஸ்டென்ட் என்பதாலேயே, கதை பாலாஜி தரணிதரனின் சுவாரஸ்ய ஒன்லைன் வரிசையில் சட்டென வந்து அமர்கிறது. ஒருவனுக்கு அவனே ஆப்பு வைத்தால் என்ன ஆகும் என்கிற ஒன்லைன் முதல் பாதியை மின்னல் வேகத்தில் இயக்குகிறது. ஆனால், வழக்கமான காட்சிகளை வைத்தே முழு கதையையும் சொல்லியது ஏமாற்றம்.

வெகுஜன சினிமாவுக்கான பக்கா கான்செப்ட்டை வைத்துக்கொண்டும், ஏதேனும் பிரச்னை என்றால் உடனே வேண்டியவர்களைக் கடத்தி வைத்து மிரட்டுவது, பணத்தை ஒளித்து வைத்து கண்ணாமூச்சி ஆடுவது, வருமானவரித்துறைக்கு போன் செய்து ஆப்பு வைப்பது என எல்லாமே பலமுறை பார்த்த காட்சிகளை வைத்து திரைக்கதையை உருவாக்கியிருப்பது, We want more emotions எனச் சொல்ல வைக்கிறது.

துக்ளக் தர்பார்
துக்ளக் தர்பார்
திரைக்கதையில் இன்னும் மெனக்கெட்டிருந்தால் கமர்ஷியல் காமெடி படைப்பாக தடம் பதித்திருக்கும் 'துக்ளக் தர்பார்'.