Published:Updated:

வில்லன் விஜய் சேதுபதியின் லேடிகேடி ஷிவானி... டிவி நடிகர்கள் சங்கமிக்கும் கமல்ஹாசனின் `விக்ரம்'!

விஜய் சேதுபதி, ஷிவானி
விஜய் சேதுபதி, ஷிவானி

'மாஸ்டர்' படத்தில் ஏராளமான யூடியூபர்களை களமிறக்கிய லோகேஷ் கனகராஜ், 'விக்ரம்' படத்தில் டிவி நடிகர்கள் பலரையும் நடிக்கவைத்திருக்கிறார்.

கமல்ஹாசன் நடிக்கும் 'விக்ரம்' படத்தின் படப்பிடிப்பு புயல்வேகத்தில் நடந்துகொண்டிருக்கிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கும் இப்படத்தில் கமல்ஹாசனோடு விஜய் சேதுபதி மற்றும் ஃபகத் ஃபாசில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

'மாஸ்டர்' படத்தில் ஏராளமான யூடியூபர்களை களமிறக்கிய லோகேஷ் கனகராஜ் 'விக்ரம்' படத்தில் டிவி நடிகர்கள் பலரையும் நடிக்கவைத்திருக்கிறார். அதில் மிக முக்கியமாக 'விக்ரம்' படத்தில் வில்லனாக நடிக்கும் விஜய் சேதுபதியின் மனைவியாக ஷிவானி நடிக்கிறார்.

விக்ரம்
விக்ரம்
Fast & Furious - 9 | வானத்தில் பறக்கும் கார்களும், வின் டீசல் vs ஜான் சீனா சாகசங்களும்!

விஜய் சேதுபதி - ஷிவானி சம்பந்தப்பட்ட காட்சிகள் கடந்தவாரம் படமாக்கப்பட்டிருக்கின்றன. படத்தின் கதைப்படி காரைக்குடியைச் சேர்ந்த தம்பதிகளாக விஜய் சேதுபதியும் - ஷிவானியும் நடித்திருக்கிறார்கள். படத்தில் பல நெருக்கமான காதல் காட்சிகள் உண்டாம்.

ஷிவானி தவிர 'மைனா' நந்தினியும், டிவி நிகழ்ச்சித் தொகுப்பாளர் மகேஸ்வரியும் 'விக்ரம்' படத்தில் நடிக்கிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு