Published:Updated:

‘ஒரிஜினலா கட்டி ஊர் மக்களுக்கு கொடுத்திருங்க’ன்னு சொன்னார்!- விஜய் சேதுபதியால் நெகிழும் தயாரிப்பாளர்

‘லாபம்’ படத்தின் படப்பிடிப்புக்காகக் கட்டப்பட்ட ஒரு கட்டடத்தை, அந்த ஊர் விவசாயிகளுக்கு இலவசமாகக் கொடுத்திருக்கிறார்கள் என செய்தி வந்ததும், இந்தப் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான ஆறுமுகக்குமாரிடம் பேசினோம்.

Laabam movie team
Laabam movie team

‘புறம்போக்கு என்கிற பொதுவுடைமை’ படத்துக்குப் பிறகு, இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் ‘லாபம்’ படத்தில் நடித்துவருகிறார், விஜய் சேதுபதி. இதில் ஸ்ருதி ஹாசன், தன்ஷிகா, ஜெகபதி பாபு, கலையரசன் எனப் பலர் நடிக்கிறார்கள். இந்தப் படத்தை விஜய் சேதுபதியோடு இணைந்து ‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ பட இயக்குநர் ஆறுமுகக்குமாரும் தயாரிக்கிறார்.

Laabam movie team
Laabam movie team

‘லாபம்’ படத்தின் படப்பிடிப்புக்காகக் கட்டப்பட்ட ஒரு கட்டடத்தை, அந்த ஊர் விவசாயிகளுக்கு இலவசமாகக் கொடுத்திருக்கிறார்கள் என செய்தி வந்ததும், இந்தப் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான ஆறுமுகக்குமாரிடம் பேசினோம். ‘‘ ‘லாபம்’ படத்துக்காக விவசாயிகள் சங்கக் கட்டடம் தேவைப்பட்டுச்சு. முதலில் இதை செட் போடலாம்னு யோசிச்சோம். செட் போடுவதற்கு 15 லட்சம் செலவாகும்னு சொன்னாங்க. ஆனால், ‘இதை ஒரிஜினல் கட்டடமாகவே கட்டி, ஊர் மக்களுக்கு கொடுத்திருங்க’ன்னு விஜய்சேதுபதி சொல்லிட்டார். அதனால், 3000 சதுரடியில் 40 லட்சம் செலவில் அந்தக் கட்டடத்தைக் கட்டினோம். அந்தக் கட்டடத்தில் எடுக்கவேண்டிய போர்ஷன் முடிந்த பிறகு, அதை அந்த ஊர் மக்களுக்கே கொடுத்துவிட்டோம். அந்த ஊர் விவசாயிகளுக்குக் கொடுத்ததா நியூஸ் வருது. ஆனால், நாங்கள் குன்றத்தூர் மக்களுக்காக அந்தக் கட்டடத்தைக் கொடுத்திருக்கோம். ஊருக்கு நடுவேதான் அந்தக் கட்டடத்தைக் கட்டியிருக்கோம். நிச்சயம், அந்த ஊர் மக்களுக்கு அது பயன்தரும் வகையில் இருக்கும்’’ என்றார், ஆறுமுகக்குமார்.

"விஜய் சேதுபதி நன்கொடை, தலைவர் மீது ஊழல் புகார்!"- சின்னத்திரை நடிகர்சங்கத்தைக் கலங்கடிக்கும் கடிதம்