Published:Updated:

பாலிவுட் ஹீரோவுடன் இணையும் விஜய் சேதுபதி!

அமீர் கான் நடிக்கும் `லால் சிங் சத்தா' படத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார் எனத் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

விஜய் சேதுபதி
விஜய் சேதுபதி

தெலுங்கு, மலையாளத்தைத் தொடர்ந்து இந்தியில் காலடி எடுத்துவைக்கிறார், விஜய் சேதுபதி. அண்மையில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகிவரும் `சங்கத்தமிழன்' படத்தின் ஷூட்டிங் பொள்ளாச்சியில் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது அங்கே நடிகர் அமீர் கான் வந்திருந்தார். அதைத் தொடர்ந்து தற்போது, அமீர் நடிக்கும் `லால் சிங் சத்தா'வில் விஜய் சேதுபதி நடிக்கிறார் எனத் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

டாம் ஹேங்க்ஸ், அமீர்கான்
டாம் ஹேங்க்ஸ், அமீர்கான்

டாம் ஹேங்க்ஸ் நடித்த ஹாலிவுட் படமான `ஃபாரஸ்டு கம்ப்' படத்தின் இந்தி ரீமேக்கான இந்தப் படத்தை அத்வைத் சந்தன் இயக்குகிறார். இதில் விஜய் சேதுபதி என்ன கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது குறித்து எந்தத் தகவலும் வெளியாகவில்லை.

ஏற்கெனவே `விக்ரம் வேதா' படத்தின் இந்தி ரீமேக்கில் விஜய் சேதுபதி தமிழில் நடித்த வேதா கதாபாத்திரத்தில் நடிக்கிறார் அமீர் கான். தமிழ் வெர்ஷனை இயக்கிய புஷ்கர் காயத்திரியே பாலிவுட்டிலும் இயக்குகின்றனர்.

Vijay Sethupathi at Indian Film Festival Melbourne
Vijay Sethupathi at Indian Film Festival Melbourne

`சூப்பர் டீலக்ஸ்' படத்துக்காக மெல்பேர்ன் நகரில் நடைபெறும் இந்தியத் திரைப்பட விழாவில் சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்றார் விஜய் சேதுபதி. இதற்காக ஆஸ்திரேலியாவுக்கும் சென்றிருந்தார்.