Published:Updated:

`என் மாஸ் என்னான்னு தெரியாதுல்ல..!' - விஜய் சேதுபதியின் சங்கத் தமிழன் டிரெய்லர்

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் சங்கத்தமிழன் படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

விஜய் சேதுபதி தற்போது சங்கத்தமிழன் என்ற படித்தில் நடித்து வருகிறார். இந்தப்படத்தை விஜய் சந்தர் இயக்கியுள்ளார். இந்தப்படத்தை விஜய் சந்தர் மற்றும் பாரதி ரெட்டி இணைந்து தயாரித்துள்ளனர். முன்னதாக விக்ரம் நடிப்பில் வெளியான ஸ்கெட்ச் படத்தை விஜய் சந்தர் இயக்கிருந்தார். `சங்கத்தமிழன்’ படம் அக்டோபர் 4-ம் தேதி திரைக்கு வருவதாக படக்குழு அறிவித்துள்ளது. விஜய் சேதுபதி இந்தப்படத்தில் இரட்டை வேடத்தில் நடிப்பதாகக் கூறப்படுகிறது. நிவேதா பெத்து ராஜ், ராஷி கண்ணா, நாசர், சூரி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்த படத்தின் டீசரும், `கமலா கலசா’ என்ற ஒரு பாடலும் ஏற்கெனவே வெளியான நிலையில் படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.