Published:Updated:

விஜய் சேதுபதி - சிவகார்த்திகேயன் தலைமையில்… களை கட்டிய சூரி வீட்டுக் கல்யாணம்!

விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், சூரி
விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், சூரி

சூரியின் குடும்பம் கூட்டுக் குடும்பமாக ஒற்றுமையாக இருந்து வருவதால், வீட்டில் எந்த விசேஷம் என்றாலும் நடிகர் சூரி முன் நின்று நடத்தி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர் சூரியின் குடும்பத்தில் விசேஷம். அவரது அண்ணன் மகள் திருமணம் இன்று காலை மதுரை புறநகரிலுள்ள வேலம்மாள் பள்ளி வளாகத்தில் நடக்க, ஏராளமான சினிமாப் பிரபலங்கள் மதுரையில் குவிந்துள்ளனர்.

சூரியின் அண்ணன் மகள் சுஷ்மிதா. இவருக்கும் ராம் பிரசாத் என்பவருக்கும்தான் திருமணம் நடந்துள்ளது. சூரியின் குடும்பம் கூட்டுக் குடும்பமாக ஒற்றுமையாக இருந்து வருவதால், வீட்டில் எந்த விசேஷம் என்றாலும் நடிகர் சூரி முன் நின்று நடத்தி வருகிறார். அதேபோலவே அண்ணன் மகள் திருமணத்துக்கான மொத்த ஏற்பாட்டையுமே சூரிதான் கவனித்திருக்கிறார்.

சூரி
சூரி

காலை நடந்த திருமணத்தில் நடிகர்கள் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், கருணாஸ், விமல், ‘குக்கு வித் கோமாளி’ புகழ், தங்கதுரை, ராமர், சாலமன் பாப்பையா, நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் என ஏராளமானோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு