Published:Updated:

''ஹீரோ சூரி படத்தில் நான் நடிப்பதில் சந்தோஷம்''... இளையராஜா ஸ்டுடியோவில் விஜய்சேதுபதி!

'இளையராஜா' என்ற பெயர் தங்கவார்த்தைகளில் மின்னத்தொடங்கியிருப்பதை கோடம்பாக்கமே அண்ணாந்து பார்க்கத்தொடங்கியிருக்கிறது.

பிரசாத்தில் இசையரசு நடத்திய இளையராஜா புத்தம் புதிய ''ILAYARAAJA' ஸ்டுடியோவுக்கு மாறியிருக்கிறார். சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள எம்.எம்.ஸ்டுடியோவை விலைக்கு வாங்கி, அங்கே புதிதாய் தனது ஸ்டியோவைக் கட்டியிருக்கிறார் ராஜா. 'இளையராஜா' என்ற பெயர் தங்கவார்த்தைகளில் மின்னத்தொடங்கியிருப்பதை கோடம்பாக்கமே அண்ணாந்து பார்க்கத்தொடங்கியிருக்கிறது.

நண்பர்களுக்கு முக்கியமான திரைக்கலைஞர்களுக்கு சொல்லிச் செய்யவேண்டிய பிரமாண்ட நிகழ்வைத் தனது மைத்துனர் சசியின் மறைவினால் அமைதியாக நடத்தியிருக்கிறார் இளையராஜா.

எப்போதும்போல காலையிலேயே தனது புதிய ஸ்டுடியோவுக்கு வந்துவிட்டார் ராஜா. கொஞ்சநேரத்தில் இயக்குநர் பாரதிராஜாவும் வந்து வாழ்த்திவிட்டுப்போனார். இயக்குநர் வெற்றிமாறன் கதையின் தன்மையைச் சொல்லி, அதைக்கேட்டு கம்போஸிங்கைத்தொடங்கினார் ராஜா. இரண்டு பாடல்களின் கம்போசிஷன் நடந்தது.

``பிரசாத் ஸ்டுடியோவில் இருந்து வெளியில் வந்தப்பிறகு எனக்கு ரெகார்டிங் தியேட்டர் தேவைப்பட்டதால் இதை ரெனோவேட் செய்து தொடங்கியிருக்கிறேன். இனி என்னுடைய பணிகள் எல்லாம் இங்கேதான் நடக்கும்'' என்றார் இளையராஜா.

விஜய் சேதுபதி
விஜய் சேதுபதி

திறப்பு விழாவுக்கு வந்திருந்த நடிகர் விஜய்சேதுபதி ``ராஜா சாரின் ரசிகன் நான். அவருடைய ஸ்டுடியோ திறப்பு விழாவுக்கு நான் வருவேன்னு நினைச்சிக் கூடப்பார்க்கல. அதுவும் சூரி ஹீரோவா நடிக்கிற படத்துல நானும் நடிக்கிறேன்றதுல எனக்கு ரொம்ப சந்தோஷம். இது என் வாழ்க்கையில முக்கியமான நாள். இங்க வந்ததை ரொம்ப சந்தோஷமா, பெருமையா நினைக்கிறேன்'' என்றார்.

``இளையராஜா சார் பாடல்களைத்தான் நான் அடிக்கடி கேட்பேன். அந்தமாதிரி பாடல்களைத் தொடர்ந்து கேட்கணும்னு ஆசை. அவர் இங்க எப்படி வொர்க் பண்றார்னு பார்க்க எனக்கு ஆசையா இருக்கு'' என்றார் இயக்குநர் வெற்றிமாறன்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு