Published:Updated:

"அப்போ ரொம்ப கெத்தா இருந்தது, இப்போ..." - அனுபவம் பகிரும் விஜய்சேதுபதி

எல்லா நேரமும் வீட்டுல சினிமாவைப் பத்திதான் பேசுவோம். ஒரு மகளா அவருடைய 60 வருஷப் பயணத்தைப் பார்த்து சந்தோஷப்படுறேன்

விஜய்சேதுபதி
விஜய்சேதுபதி

"ஹீரோ, வில்லன்னு வெவ்வேறு கேரக்டர்ல நடிக்கிறீங்க... எதை நோக்கியது உங்கள் பயணம்?''

"இப்ப வரைக்குமே எனக்கு சினிமா புரியலை. கொஞ்சம் குழப்பமாதான் இருக்கு. தொடர்ந்து ஒரே மாதிரி போயிட்டிருக்கிறதால சில சமயம் போர் அடிக்கிற மாதிரி இருக்கு. வேற ஏதாவது புதுசா பண்ணலாம்னு தோணுது. அதுக்கான முயற்சிகள் இப்போ போயிட்டிருக்கு. வேலையை வேற விதமா அப்ரோச் பண்ண ட்ரை பண்ணிட்டிருக்கேன். எப்படி இருக்கும்னு தெரியலை. எனக்கு 40 வயசு ஆகுது. இப்போதான் ஒரு நிதானத்தை அடைஞ்சிருக்கேன்.'' முழுமையான பேட்டிக்கு க்ளிக் செய்க... http://bit.ly/34gCHrd

"லாபம் படத்துடைய முதல் நாள் உங்களுடைய சொந்த ஊரான ராஜபாளையத்துலதான் ஆரம்பிச்சது. எப்படி இருந்தது அந்த ஃபீல்?''

விஜய்சேதுபதி
விஜய்சேதுபதி

"என்னுடைய சொந்த ஊர்ங்கிறதால ராஜபாளையம் எப்பவும் ஸ்பெஷல்தான். நான் 5-வது வரைக்கும் அங்கதான் படிச்சேன். என்னுடைய திருமணத்துக்குப் பிறகு அதிகம் போக முடியாத சூழல். என்னுடைய சொந்தக்காரங்க அங்கதான் இருக்காங்க. சின்ன வயசுல ஆடிப் பாடிட்டிருந்த இடத்தை மறுபடியும் பார்க்கும்போது ஒருவித நெகிழ்ச்சியாகிடுச்சு. முன்னாடி காலி இடங்கள் நிறைய இருக்கும். இப்போ வீடுகள் நிறைய வந்து ஏரியாவே நெருக்கமாகிடுச்சு. இப்போ அதே ஊர்ல ஷூட்டிங்னு போகும்போது சுகமா இருக்கு. முதல் முறை சில படங்கள்ல நடிச்சிட்டு, பொண்டாட்டியை சொந்தக் கார்ல கூட்டிட்டுப் போகும்போது என்னுடைய படப் பாடலைப் போட்டாங்க. ரொம்ப கெத்தா இருந்தது. இப்போ ரியாலிட்டிக்குள்ள வந்துட்டேன். எல்லாமே வாழ்க்கையுடைய அங்கம்தானே!''

"கமல் திரைத்துறையில கால் பதிச்சு 60 வருடங்கள் ஆகிடுச்சு. ஒரு மகளா இதை எப்படிப் பார்க்கிறாங்க?''

ஸ்ருதி: "சின்ன வயசுல இருந்தே அப்பாவும் சினிமாவும் எனக்கு ஒண்ணுதான். சினிமாவைத் தொழிலா பார்க்காம இப்போ வரைக்கும் கலையா பார்க்கிறார். சினிமாமீது அலாதியான பிரியமும் அவருக்கு இருக்கு. எல்லா நேரமும் வீட்டுல சினிமாவைப் பத்திதான் பேசுவோம். ஒரு மகளா அவருடைய 60 வருஷப் பயணத்தைப் பார்த்து சந்தோஷப்படுறேன்.''

விஜய்சேதுபதி
விஜய்சேதுபதி

- 'க்ளாரா... க்ளாரா...' என ஒலிக்கும் இமானின் பாடல், சுற்றியெங்கும் சீரியல் லைட்டுகள், ஏராளமான ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டுகள்... நடுவில் விஜய்சேதுபதி - ஸ்ருதி ஹாசன். சூப்பர் டான்ஸ் மொமன்ட்ஸ் முடிந்ததும் விஜய்சேதுபதி - ஷ்ருதியிடம் பேசினோம். அந்தப் பேட்டியை ஆனந்த விகடன் இதழில் முழுமையாக வாசிக்க > "இப்ப வரைக்குமே எனக்கு சினிமா புரியலை!" - விஜய் சேதுபதி https://cinema.vikatan.com/tamil-cinema/exclusive-interview-with-vijay-sethupathi-and-shruti-haasan

| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் கட்டுரைகள் > ரூ.200 மதிப்பிலான ஒரு மாத பேக் உங்களுக்காக ரூ.99 மட்டுமே> சப்ஸ்க்ரைப் செய்ய> http://bit.ly/2MuIi5Z |