Election bannerElection banner
Published:Updated:

சிவகார்த்திகேயனின் ஆஸ்தான டைரக்டர் படத்தில் விஜய் சேதுபதி!

விஜய் சேதுபதி
விஜய் சேதுபதி

தமிழ் சினிமா உலகில் சிவகார்த்திகேயனுக்கு ஐடென்டியாக அமைந்த முதல்படம், ' வருத்தப்படாத வாலிபர் சங்கம்'. இந்தப் படத்தை இயக்கிய பொன்ராம் மீது 'ராசியான டைரக்டர்' என்கிற சென்டிமென்ட் விழ, சிவாவுக்கு அவர்மீது அலாதியான பிரியம் ஏற்பட்டது.

அடுத்து, சிவா - பொன்ராம் காம்பினேஷனில் வெளிவந்த ' ரஜினி முருகன்' படமும் வசூல் ரீதியாக சக்கைபோடு போட்டது. இறுதியாக, இருவர் கூட்டணியிலும் ரிலீஸான 'சீமராஜா' படத்தின் ரிசல்ட் ஏமாற்றத்தில் முடிந்துவிட்டது. அதன்பிறகு, சிவா- பொன்ராம் இணையும் திரைப்படம் எது என்கிற எதிர்பார்ப்பு இருந்துகொண்டிருக்கிறது. தனுஷ் - சிம்பு போட்டியாளர்களுக்குப் பிறகு, கமர்ஷியல் ஹீரோவான சிவகார்த்திகேயனுக்கும் எதார்த்த நாயகன் விஜய் சேதுபதிக்கும் இடையில் போட்டி நிலவிவருவது கலையுலகம் கண்கூடாகக் காணும் உண்மை.

இயக்குநர் பொன்ராம்
இயக்குநர் பொன்ராம்

ஏற்கெனவே, ஜனநாதன் இயக்கத்தில் 'லாபம்', ஜனா உதவியாளர் இயக்கும் பெயர் வைக்காதபடத்திலும், விஜய்சந்தர் இயக்கும் 'சங்கத்தமிழன்' படத்திலும், முத்தையா முரளிதரன் பயோபிக் என பல படங்களில் நடித்துவருகிறார். தற்போது, சிவகார்த்திகேயனின் ஆஸ்தான இயக்குநரான பொன்ராம் டைரக்‌ஷன் செய்யும் படத்தில், விஜய்சேதுபதி ஹீரோவாக நடிக்கிறார். இந்தப் படத்துக்காக பொன்ராம், சேதுபதி இருவரையும் பெரும்தொகை சம்பளமாகக் கொடுத்து ஒப்பந்தம் செய்திருக்கிறது சன்பிக்சர்ஸ் நிறுவனம்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு