Published:Updated:

விஜய் 64 : உறுதியானது 'தளபதி' - 'மக்கள் செல்வன்' காம்போ!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கும் விஜய்யுடன் விஜய் சேதுபதி நடிப்பது உறுதியாகியுள்ளது.

விஜய் சேதுபதி
விஜய் சேதுபதி

'தெறி', 'மெர்சல்' ஆகிய படங்களைத் தொடர்ந்து ஹாட்ரிக் வெற்றி அடிக்க காத்திருக்கிறது விஜய் - அட்லி காம்போ. ஏஜிஎஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிப்பில் விஜய், நயன்தாரா, விவேக், யோகிபாபு எனப் பலர் நடித்துள்ள 'பிகில்' திரைப்படம் வரும் தீபாவளியை முன்னிட்டு திரைக்கு வரக் காத்திருக்கிறது. மிகுந்த எதிர்பார்ப்புடைய 'பிகில்' படத்திற்குப் போட்டியாக களமிறங்குகிறது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவான 'கைதி'.

விஜய் சேதுபதி
விஜய் சேதுபதி

இந்தப் படம் வெளியாகும் முன்னரே விஜய்யை வைத்து லோகேஷ் இயக்கவிருக்கும் அடுத்தப் படத்திற்கான ஆரம்பக்கட்ட பணிகள் சமீபத்தில் தொடங்கியுள்ளது. இந்தப் படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கான தேர்வு நடைபெற்று வந்த நிலையில், 'பேட்ட' படத்தில் நடித்த மலையாள நடிகை மாளவிகா மோகனன் நடிக்கிறார் எனத் தகவல் வெளியானது.

தவிர, விஜய்க்கு வில்லனாக நடிக்க விஜய் சேதுபதியிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வந்தன. இந்நிலையில், அதனை உறுதிப்படுத்தியுள்ளது, படக்குழு. அக்டோபர் மாதம் ஆரம்பிக்க இருக்கும் இந்தப் படத்தை ஏப்ரல், 2020-ல் வெளியிடத் திட்டமிட்டுள்ளனர். தவிர, அனிருத் இசை, சத்யம் சூரியன் ஒளிப்பதிவு, ஃபிலோமின் ராஜ் படத்தொகுப்பு என டெக்னிக்கல் டீமும் தயாராக உள்ளது.

சூப்பர் ஸ்டார் - மக்கள் செல்வன் கூட்டணியை பார்த்த அனைவரும் தளபதி - மக்கள் செல்வன் காம்போவை திரையில் பார்க்க வெறித்தன வெயிட்டிங்!