Published:Updated:

முத்தையா முரளிதரனாக விஜய் சேதுபதி?- பரபரக்கும் பயோகிராஃபி!

கண்டியில் பிறந்த தமிழரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது.

விஜய் சேதுபதி- முத்தையா முரளிதரன்
விஜய் சேதுபதி- முத்தையா முரளிதரன்

`800' எனத் தலைப்பிடப்பட்டிருக்கும் முத்தையா முரளிதரனின் பயோகிராஃபி திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் விஜய் சேதுபதி. 1972-ம் ஆண்டு கண்டியில் பிறந்த தமிழரான முத்தையா முரளிதரன் இலங்கை அணிக்காக 1992 முதல் 2011-ம் ஆண்டு வரை 133 டெஸ்ட் போட்டிகள், 350 ஒருநாள் போட்டிகள், 12 டி20 ஆட்டங்களில் விளையாடியவர். டெஸ்ட் போட்டிகளில் மட்டும் 800 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்திருக்கிறார் முரளிதரன். அதனடிப்படையில் படத்துக்கு `800' என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள்.

முரளிதரன்
முரளிதரன்

1996-ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இலங்கை அணியிலும் முரளிதரன் இடம் பெற்றிருந்தார். சர்வதேச கிரிக்கெட்டில் இலங்கை அணி எழுச்சிபெற முக்கிய காரணமாக இருந்தவர் முரளிதரன்.

`800' படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாராக இருக்கிறதாம். இலங்கை, இந்தியா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. டிசம்பர் மாதத்தில் படப்பிடிப்பு தொடங்குகிறது. படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.

விஜய் சேதுபதி
விஜய் சேதுபதி

இதுதொடர்பாக விஜய் சேதுபதியின் மேலாளரிடம் பேசியபோது, ``பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருப்பது உண்மைதான். அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாக 10 நாள்கள் ஆகலாம்'' என்றார்.