Published:Updated:

`ஆவ்' படத்தின் சீக்குவெல்; ஹைதராபாத்தில் `பிஸி' ஷூட்டிங்கில் விஜய் சேதுபதி!

கடந்த வருடம் பிரஷாந்த் வர்மா இயக்கத்தில் வெளியான தெலுங்குப் படம், `ஆவ்'. காஜல் அகர்வால், ரெஜினா கஸண்ட்ரா, நித்யா மேனன், ஈஷா ரெப்பா, பிரியதர்ஷி புலிகொண்டா எனப் பலர் இப்படத்தில் நடித்திருந்தனர். இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் தற்போது சீக்குவெலாகத் தயாராக இருக்கிறது.

விஜய் சேதுபதி - காஜல் அகர்வால்
விஜய் சேதுபதி - காஜல் அகர்வால் ( ஆவ் )

2018-ல் வெளியான `ஆவ்' படத்துக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது. இதைத் தொடர்ந்து படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராக இருக்கிறது. முதல் பாகத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த காஜல் அகர்வால், இரண்டாம் பாகத்திலும் நடிக்க இருக்கிறார். மேலும், `சைரா நரசிம்மா ரெட்டி', டைட்டில் வைக்கப்படாத படத்தில் கதாநாயகியின் அப்பாவாக என தெலுங்குப் படங்களிலும் நடிக்கத் தொடங்கிவிட்டார், விஜய் சேதுபதி. சீக்குவெலாக தயாராக இருக்கும் `ஆவ் 2' படத்தில் தற்போது விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. முதல் பாகத்தை இயக்கிய பிரஷாந்த் வர்மா, இதன் இரண்டாம் பாகத்தை இயக்குகிறார்.

விஜய் சேதுபதி
விஜய் சேதுபதி

`மாமனிதன்', `சங்கத் தமிழன்', `லாபம்', `கடைசி விவசாயி', முத்தையா முரளிதரனின் பயோபிக் என தமிழில் செம பிஸியாக நடித்துவரும் விஜய் சேதுபதி, மற்ற மொழிப் படங்களிலும் கவனம் செலுத்திவருகிறார். இதைத் தவிர ஒரு தெலுங்குப் படத்தில் நெகடிவ் ரோலிலும் நடித்துவருகிறார். ஒரு தெலுங்குப் படத்தின் ஷூட்டிங்காக ஒரு வாரம் ஹைதராபாத் சென்றுள்ளார், விஜய் சேதுபதி. அங்கு இவர் நடித்துவரும் படங்களின் வேலைகளும் பரபரப்பாக போய்க்கொண்டிருக்கிறது. த்ரில்லர் ஜானரைக் கொண்டு தயாராக இருக்கும் `ஆவ் 2' படத்தை தமிழ், தெலுங்குப் என பைலிங்குவலாக தயாராவது குறிப்பிடத்தக்கது.