Published:Updated:

`இசைக்கலைஞர்; 20 நாள்கள் முதல் ஷெட்யூல்!' - விஜய் சேதுபதியின் அடுத்தபட அப்டேட்

படத்தின் முதல் ஷெட்யூல் 20 நாள்கள் நடைபெற இருக்கிறது. இந்தப் படங்களைத் தவிர அமீர் கான் நடிக்கும் `ஃபாரஸ்டு கம்ப்' படத்தின் பாலிவுட் ரீமேக், `ஆவ்' படத்தின் இரண்டாம் பாகம் என அடுத்தடுத்து படங்கள் லிஸ்ட்டில் இருக்கின்றன.

Vijay Sethupathi
Vijay Sethupathi

விஜய் சேதுபதி தற்போது பல படங்களில் பிஸி. விஜய் சந்தர் இயக்கிய `சங்கத் தமிழன்' கூடிய விரைவில் வரவிருக்கிறது. தவிர, எஸ்.பி.ஜனநாதனின் `லாபம்', `காக்கா முட்டை' மணிகண்டன் இயக்கிய `கடைசி விவசாயி', சீனு ராமசாமி இயக்கிய `மாமனிதன்' என கோலிவுட் படங்கள் ஒரு பக்கம், முதன்முறையாக வில்லனாக நடிக்கும் தெலுங்கு படமான `உப்பென்னா', சீரஞ்சீவி நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியிருக்கும் `சைரா நரசிம்மா ரெட்டி' என டோலிவுட் ஒரு பக்கமென பல படங்களில் நடித்திருக்கிறார், நடித்துக்கொண்டும் இருக்கிறார்.

விஜய் சேதுபதி
விஜய் சேதுபதி

இந்தப் படங்களின் வேலைகள் ஒரு பக்கம் பரபரப்பாய் போய்க்கொண்டிருந்தாலும் தன்னுடைய அடுத்த படத்துக்கான ஷூட்டிங்கில் தற்போது பிஸியாக நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. அறிமுக இயக்குநரான வெங்கட கிருஷ்ண ரோகந்த் இயக்கும் படத்தின் படப்பிடிப்பானது, தற்போது கொடைக்கானலில் நடந்து வருகிறது.

எஸ்.பி. ஜனநாதனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர் ரோகந்த். சந்திரா ஆர்ட்ஸ் பேனரல் பிரமாண்டமாக உருவாகும் இப்படத்தில், இசைக்கலைஞராக நடிக்கிறார் விஜய் சேதுபதி. மேலும், `தடையற தாக்க', `தடம்', `மீகாமன்' போன்ற படங்களை இயக்கிய மகிழ் திருமேனி, இப்படத்தின் மூலம் வில்லனாக நடித்து, நடிகராகவும் தமிழ் சினிமாவில் அறிமுகமாகவிருக்கிறார்.

விஜய், கார்த்தி, விஜய் சேதுபதி - தீபாவளியை நோக்கி முன்னணி நடிகர்கள்!

இது தவிர, இலங்கை கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப் படத்திலும் நடிக்கவிருக்கிறார். தீபாவளி சமயத்தில் வெளியாகவிருக்கும் `சங்கத் தமிழன்' படத்தின் டப்பிங்கை சமீபத்தில்தான் முடித்துக்கொடுத்தார். அதை முடித்த கையோடு தற்போது கொடைக்கானல் கிளம்பிவிட்டார். படத்தின் முதல் ஷெட்யூல் 20 நாள்கள் நடைபெற இருக்கிறது. இந்தப் படங்களைத் தவிர அமீர் கான் நடிக்கும் `ஃபாரஸ்டு கம்ப்' படத்தின் பாலிவுட் ரீமேக், `ஆவ்' படத்தின் இரண்டாம் பாகம் என அடுத்தடுத்து படங்கள் அவர் வசம் இருக்கின்றன.

முத்தையா முரளிதரன் பயோபிக்கில் இருந்து விலகினாரா விஜய் சேதுபதி! - பின்னணி என்ன?