Published:Updated:

கோவை பெண்ணுடன் நிச்சயதார்த்தம்! - விஜயகாந்த் மகனுக்கு விரைவில் திருமணம்

விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன்
விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன்

தே.மு.தி.க நிறுவனத் தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரனுக்கு திருமண நிச்சயதார்த்தம் முடிந்திருக்கிறது.

சினிமாவிலிருந்து அரசியலுக்கு வந்து, எதிர்க்கட்சி அளவுக்கு உயர்ந்தவர் விஜயகாந்த். கேப்டன் என்று அவரது தொண்டர்களால் அழைக்கப்படும் இவர், கடந்த சில வருடங்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டுவருகிறார்.

பிரேம லதா
பிரேம லதா

இவருக்கு சண்முக பாண்டியன் மற்றும் விஜய பிரபாகரன் என இரண்டு மகன்கள் இருக்கின்றனர். திரைப்படங்களில் அவர்கள் நடிப்பதுடன், கட்சிக் கூட்டங்களிலும் அவ்வப்போது கலந்துகொள்வதுண்டு.

விஜயகாந்த் வடிவேலுவை பத்தி நிறைய விசாரிப்பார்!

இந்த நிலையில், விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரனுக்கு திருமண நிச்சயதார்த்தம் முடிந்திருக்கிறது. கோவை பெரியநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த ஸ்டாம்ப்வெண்டர் இளங்கோவின் மகளுடன் அவருக்கு நிச்சயதார்த்தம் நடந்தது. அந்தப் புகைப்படங்கள் தற்போது வெளியாகியிருக்கிறது. நிச்சயதார்த்த கோலத்தில் விஜயபிரபாகரன் இருப்பது போன்ற புகைப்படங்கள் வெளியாகியிருக்கிறது.

சுதீஷ், பிரேமலதா
சுதீஷ், பிரேமலதா

இந்த நிகழ்ச்சியில், நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே கலந்துகொண்டிருக்கின்றனர். விஜயகாந்த் குடும்பத்தினர், மிகவும் எளிமையாக இந்த நிகழ்ச்சியை நடத்தியதாகச் சொல்கிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு