Published:Updated:

CAA, ஐ.டி ரெய்டு, `விஜய் 65'... `மாஸ்டர்' இசை வெளியீட்டு விழாவின் ஸ்கெட்ச்!

`மாஸ்டர்' இசை வெளியீட்டு விழா
`மாஸ்டர்' இசை வெளியீட்டு விழா

மார்ச் 15-ம் தேதி நடக்கும் `மாஸ்டர்’ இசை வெளியீட்டு விழாவில் என்னென்ன விஷயங்கள் நடக்கப்போகின்றன என்பதன் ப்ளூ ப்ரின்ட்டை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.

`பிகில்’ படத்திற்குப் பிறகு தனது உறவினர் சேவியர் பிரிட்டோவின் தயாரிப்பில் நடிப்பதை உறுதிசெய்த விஜய், பல இயக்குநர்களிடம் கதைகேட்டுக் கடைசியாக `கைதி’ படத்தின் சில காட்சிகளைப் பார்த்த பிறகு, லோகேஷ் கனகராஜ்தான் தனது அடுத்த படத்தின் இயக்குநர் என முடிவு செய்தார். அதை உறுதிப்படுத்தி அதிகாரபூர்வ அறிவிப்பு சமீபத்தில்தான் வந்ததுபோல் இருக்கிறது. ஆனால், அதற்குள் இசை வெளியீட்டு விழா வரைக்கும் வந்துவிட்டார்கள். பொதுவாகவே விஜய் படங்களின் ரிலீஸ் மட்டுமல்லாது, இசை வெளியீட்டு விழா, டீசர் - டிரெய்லர் ரிலீஸும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். அப்படி மார்ச் 15-ம் தேதி நடக்கும் `மாஸ்டர்’ இசை வெளியீட்டு விழாவில் என்னென்ன விஷயங்கள் நடக்கப்போகிறது என்பதன் ப்ளூ ப்ரின்ட்டை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.

மாஸ்டர்
மாஸ்டர்

`மாஸ்டர்’ படம் ஆரம்பிக்கும் போதே ரிலீஸ் மாதத்தை முடிவு செய்துவிட்டதால், இசை வெளியீட்டு விழா நடத்தாமல் சீக்கிரமாக வேலைகளை முடிக்க வேண்டும் என நினைத்திருக்கிறார்கள். ஆனால், தற்போது இசை வெளியீட்டு விழா நடப்பதற்கு, சமீபத்தில் நடந்த ஐடி ரெய்டும் ஒரு காரணமாக இருக்கலாம் எனப் பேசப்பட்டு வருகிறது.

பெரும்பாலான விஜய் படங்களின் இசை வெளியீட்டு விழா சென்னையில்தான் மிகப் பிரமாண்டமாக நடக்கும். ஆனால், சில முறை இந்த நிகழ்ச்சியை வெளியூர்களிலும் நடத்தியிருக்கிறார்கள். `வேலாயுதம்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவை மதுரையிலும், `நண்பன்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவை கோயம்புத்தூரிலும் நடத்தியதைப் போல், `மாஸ்டர்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவையும் கோயம்புத்தூரில் ஒரு கல்லூரியில் நடத்த திட்டமிட்டிருக்கிறார்கள். ஆனால், `பிகில்’ படத்தின் இசை வெளியீட்டு விழா தாம்பரம் சாய்ராம் கல்லூரில் நடந்தபோது, அரங்கத்தின் இருக்கை எண்ணிக்கையைவிட ரசிகர்களின் வருகை அதிகமானதால், அவர்களை அப்புறப்படுத்த காவல்துறையினர் தடியடி நடத்தினர். அந்தப் பிரச்னையின் விளைவாக இனிமேல் சினிமா நிகழ்ச்சிகளுக்குக் கல்லூரி வளாகத்தைக் கொடுக்கக்கூடாது என முடிவு செய்திருக்கிறார்கள். அதனால், கோயம்புத்தூர் கல்லூரியில் இந்த விழாவை நடத்த முடியாததால், சென்னை லீலா பேலஸ் ஹோட்டலில் `மாஸ்டர்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவை நடத்தவிருக்கிறார்கள். `கத்தி’ படத்தின் இசை வெளியீட்டு விழாவும் இந்த ஹோட்டலில்தான் நடந்தது.

மாஸ்டர்
மாஸ்டர்
`` `மாஸ்டர்' ஸ்பாட்ல விஜய் சார் ஆல்வேஸ் ஹாப்பிதான்!'' - ரமேஷ் திலக்

கடந்த சில படங்களின் இசை வெளியீட்டு விழாவை தனது ரசிகர்களின் முன்னிலையில் நடத்திவந்த விஜய், `மாஸ்டர்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவைப் படக்குழுவினரோடு மட்டுமே நடத்தவிருக்கிறார். இந்த விழாவிற்கு ரசிகர்கள் யாரும் அழைக்கப்படவில்லை என்பது ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்தாலும், இந்த விழா சன் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பாகும் என்ற அறிவிப்பு, பலருக்கும் ஆறுதலாக இருந்திருக்கும்.

விஜய் படங்களின் இசை வெளியீட்டு விழாவில் எப்போதும் `குட்டிக்கதை’ மறக்காமல் இடம்பிடித்துவிடும். ஆனால், `மாஸ்டர்’ படத்தின் சிங்கிள் ட்ராக்கிலேயே ரசிகர்களுக்குக் `குட்டிக்கதை’யைச் சொல்லிவிட்ட விஜய், இந்த விழாவில் என்ன பேசுவார் என்பதே பலரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. சமீபத்தில் நடத்த ஐ.டி ரெய்டு பற்றி இதுவரைக்கும் பேசாத விஜய், இசை வெளியீட்டு விழாவில் அதைப் பற்றிப் பேச வாய்ப்பு இருக்கிறது என்று சொல்கிறார்கள். அதுமட்டுமல்லாமல், தனது படங்களின் இசை வெளியீட்டு விழாவில் சமூகத்தில் நடக்கும் பிரச்னைகளைப் பற்றியும் பேசத் தவறாத விஜய், தற்போது இந்தியா முழுக்க நடந்துவரும் CAA போராட்டங்களைப் பற்றியும் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாஸ்டர் 1st Look
மாஸ்டர் 1st Look
விஜய்க்கு டிப்ரஷன்?! - `மாஸ்டர்' போஸ்டர்கள் சொல்லும் சீக்ரெட்ஸ் என்ன?

`மாஸ்டர்’ படத்திற்குப் பிறகு விஜய் நடிக்கப்போகும் படத்தை யார் இயக்குகிறார் என்பது இப்போது வரைக்கும் பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது. சுதா கொங்காராதான் விஜய்யின் அடுத்த படத்தை இயக்குகிறார் எனத் தகவல்கள் வந்தாலும், தற்போது ஏ.ஆர்.முருகதாஸிடமும் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பதாலும்,`மாஸ்டர்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சன் டிவியில் நேரடி ஒளிபரப்பப்படுவதாலும், விஜய்யின் அடுத்த படத்தின் அறிவிப்பு இந்த நிகழ்ச்சியில் நடக்க வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு