Published:Updated:

அட... `மாஸ்டர்' படத்தின் குட்டிக் கதை இதுதானா? #Master #Vijay

மாஸ்டர்
மாஸ்டர்

`மாஸ்டர்’ படப்பிடிப்பின் தற்போதைய நிலையுடன், படத்தைப் பற்றி வெளிவராத தகவல்களின் தொகுப்பே இந்தக் கட்டுரை.

கல்லூரியில் பேராசிரியராக இருக்கும் ஹீரோ, தனது தொடர் குடிப்பழக்கத்தால் அந்த வேலையிலிருந்து மாற்றப்பட்டு, சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் பணியமர்த்தப்படுகிறார். அங்கு சிறுவர்களை வைத்து நடத்துப்படும் போதைப் பொருள் மாஃபியாவைப் பற்றித் தெரியவர, அந்த வேலையைச் செய்யும் வில்லனைத் தேடிப்பிடித்து அழிக்கிறார்.

oru kutti katha
oru kutti katha

இதுவே `மாஸ்டர்' படத்தின் கதை எனச் சொல்லப்படுகிறது. இதில் கல்லூரிப் பேராசிரியர் மற்றும் சிறைக் காவலராக நடித்திருக்கிறார், விஜய். போதைப் பொருள் மாஃபியாவின் தலைவராக விஜய் சேதுபதியும் அவருக்கு வலது கையாக அர்ஜுன் தாஸும் நடித்திருக்கிறார்கள்.

`மாஸ்டர்’ படத்தின் ஷூட்டிங் ஆரம்பித்ததிலிருந்தே லைவ் லொகேஷன்களில் படப்பிடிப்பை நடத்தி வந்தனர். சென்னையில் ஒரு மாற்றுத்திறனாளிகளுக்கான பள்ளியிலும் டெல்லி கல்லூரியிலும் ஷிமோகா சிறையிலும் நெய்வேலி நிலக்கரி சுரங்கத்திலும் படப்பிடிப்பை முடித்துவிட்டு, மீண்டும் சென்னையில் படப்பிடிப்பை நடத்தத் திட்டமிட்டிருக்கிறார்கள். சென்னையில் நடைபெற இருக்கும் படப்பிடிப்போடு, மொத்தப் படத்தின் ஷூட்டிங்கும் முடிவடைகிறதாம். லோகேஷ் கனகராஜின் முந்தைய படங்களில் டெக்னிக்கல் வொர்க் எல்லாமே நேர்த்தியாக இருக்கும். அந்தளவிற்கு போஸ்ட் புரொடக்‌ஷனில் அதிக கவனம் எடுத்துக்கொள்வார். அதனால், சீக்கிரம் படப்பிடிப்பை முடித்துவிட்டு, போஸ்ட் புரொடக்‌ஷனை ஆரம்பித்து, ஏப்ரல் 9-ம் தேதி படத்தை ரிலீஸ் செய்யத் திட்டமிட்டிருக்கிறார்கள்.

vijay and vijay sethupathi
vijay and vijay sethupathi

`மாஸ்டர்' படத்தின் மூன்றாவது லுக்காக வெளியான விஜய்யும், விஜய் சேதுபதியும் ஆக்ரோஷமாகக் கத்திக்கொள்ளும் சண்டைக்காட்சியும், தற்போது நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் எடுக்கப்பட்டிருக்கும் க்ளைமாக்ஸ் சண்டைக்காட்சியும் படத்தின் மிக முக்கியமான காட்சிகளாம். இந்த இரண்டு சண்டைக்காட்சிகளின் படப்பிடிப்பும் முடிந்திருக்கும் நிலையில், இதன் அவுட்புட்டைப் பார்த்த படக்குழுவிற்கு மிகுந்த திருப்தியாம்.

`ஒரு குட்டிக் கதை’ பாடல்தான், `மாஸ்டர்’ படத்தின் ஓப்பனிங் பாடலாக இருக்குமாம். இதன் படப்பிடிப்பு ஷிமோகா சிறையில் எடுக்கப்பட்டிருக்கிறது. `பிகில்’ படத்தின் `வெறித்தனம்’ பாடலைப் போல, `மாஸ்டர்’ படத்தின் ஓப்பனிங் பாடலையும் விஜய்யே பாடியிருக்கிறார். `ஒரு குட்டிக் கதை’ பாடல், சிறைக் காவலர் விஜய்க்கு ஓப்பனிங் பாடலாக இருப்பதைப் போல, ப்ளாஷ் பேக் காட்சிகள் ஆரம்பிக்கும்போது கல்லூரிப் பேராசிரியர் விஜய்க்கும் ஒரு ஓப்பனிங் பாடல் இருக்கிறதாம். இதுபோக, படத்தில் ஒரு காதல் பாடலும் இருக்கிறதாம். அதை விக்னேஷ் சிவன் எழுதியிருக்கிறார்.

vijay and anirudh
vijay and anirudh

`மாஸ்டர்’ படம் ஆரம்பிக்கும் போதே ரிலீஸ் மாதத்தை முடிவு செய்துவிட்டதால், இசை வெளியீட்டு விழா நடத்தாமல் சீக்கிரம் வேலைகளை முடிக்கவேண்டும் என நினைத்திருக்கிறார்கள். ஆனால், சமீபத்தில் நடந்த ஐடி ரெய்டு விஷயத்திற்குப் பிறகு இசை வெளியீட்டு விழா நடத்தலாம் எனப் பேசி வருகிறார்களாம். ஐடி ரெய்டு பற்றி இதுவரை எதுவும் பேசாத விஜய், இசை வெளியீட்டு விழாவில் அதைப் பற்றிப் பேச வாய்ப்பு இருக்கிறது என்றும் சொல்கிறார்கள்.

போராட்டம், ஆதரவு, தடியடி... `மாஸ்டர்' படப்பிடிப்பில் என்ன நடந்தது?

`மாஸ்டர்’ படத்தின் நடிகர், நடிகைகளின் தேர்விலிருந்து ஒவ்வொரு லுக்கின் போஸ்டர்கள் வரை, மற்ற விஜய் படங்களிலிருந்து இது தனித்து தெரிவதை விஜய் ரசிகர்கள் மட்டுமல்லாது விஜய்யும் ரொம்பவே லைக் செய்கிறாராம். வேகமாகப் படப்பிடிப்பை முடிப்பதாலும் தயாரிப்பாளருக்கு அதிக செலவு வைக்காமல் இருப்பதாலும் தன்னை கம்ஃபோர்ட் ஸோனில் வைத்திருப்பதாலும், லோகேஷின் மீது விஜய்க்கு நல்ல மரியாதை ஏற்பட்டிருக்கிறது. அதனால், விஜய் - லோகேஷ் காம்போ கண்டிப்பாக மறுபடியும் இணையும் என்கிறார்கள். `மாஸ்டர்’ ரிட்டன்ஸ்.

அடுத்த கட்டுரைக்கு