Published:Updated:

விகடன் பைட்ஸ்: `புதிய பாதை' சிக்கல்கள்... `காதல்' உருவான கதை!

விகடன் பைட்ஸ்
விகடன் பைட்ஸ்

ட்ரெயின்ல மதுரை டூ சென்னை வந்துக்கிட்டு இருந்தப்போ நான் சந்திச்ச ஒரு தம்பதி சொன்ன நிஜக் கதையுடன் டீக்கடையில் நான் பார்த்த ஜோடியை இணைச்சு ஒரு கதையை உருவாக்கினேன்

"நிறைய நடிகர்கள்கிட்ட 'புதிய பாதை' கதையை சொன்னேன். சிலருக்குக் கதை பிடிக்கல. கதை பிடிச்சிருந்தா தயாரிப்பாளர் கிடைக்கலன்னு நிறைய பிரச்னைகள். அப்போ, 'நானே நடிச்சிதான் பண்ணணும்'னு கட்டாயம். 'நீங்க நடிச்சாதான் படம் ஓடும்'னு சுந்தரம் சாரும் சொல்லிட்டார்.

படம் எடுத்து முடிச்சதுக்கு அப்புறம் ரிலீஸாகுறதுல பிரச்னை வர ஆரம்பிச்சிருச்சு. ஏப்ரல் 14 ரிலீஸ் தேதி குறிச்சிருந்தோம். மார்ச் மாசத்துல, திடீர்னு 'இந்தப் படம் ரிலீஸ் ஆகாது'ன்னு சுந்தரம் சார் சொல்றார். ஏன்னா, வெங்கட்ராமன்கிறவர் பேர்லதான் சுந்தரம் சார் இந்தப் படத்தை எடுத்திருந்தார். படத்தோட தயாரிப்பாளர்னு வெங்கட்ராமன் பெயர்தான் போஸ்டர்கள்ல இருக்கும். இந்த வெங்கட்ராமன் ஆனந்த விகடன் எம்.டி.பாலசுப்ரமணியம் சார்கிட்ட ஒரு கோடி ரூபாய் அளவுக்குப் பெரிய கடன் வாங்கி யிருக்கார். அதைச் சரியா திருப்பிக்கொடுக்கல. அது சம்பந்தமா கோர்ட்ல கேஸ் நடந்துட்டு இருக்கு. அதனால படம் ரிலீஸ் செய்ய முடியாத சூழல்னு தெரிஞ்சிக் கிட்டேன்.

விகடன் பைட்ஸ்: `புதிய பாதை' சிக்கல்கள்... `காதல்' உருவான கதை!

'வேணும்னா, ஒரே ஒரு வாய்ப்பு இருக்கு. பாலசுப்ரமணியம் சாரைப் படம் பார்க்கவைக்கலாம். அவருக்குக் பிடிச்சிருந்தா, அவர் மனசு வெச்சா படம் ரிலீஸாகிடும்'னு சொன்னாங்க. சவேரா ஹோட்டல்ல அப்போ ப்ரிவியூ தியேட்டர் இருந்தது. பாலசுப்ரமணியம் சார் அவர் மனைவி சரோஜா அம்மாகூட சேர்ந்து படம் பார்த்தாங்க. அப்போ..."

- பார்த்திபனுக்கு சினிமாவில் பாதை அமைத்துக்கொடுத்த படம் அவரது முதல் படமான 'புதிய பாதை.' இயக்குநராகவும் நடிகராகவும் தமிழ் சினிமாவுக்குள் அறிமுகமான பார்த்திபனிடம் அவர் முதல் பட அனுபவம் குறித்து பகிர்ந்ததை முழுமையாக வாசிக்க > பல சிக்கல்களைத் தாண்டித்தான் பாதை அமைஞ்சது! Click Here https://bit.ly/2SGmB6L

பாலாஜி சக்திவேலின் முதல் இன்னிங்ஸ்!

'`முதல் படம் வெற்றிப்படமா அமையலைன்னாலும் உங்க ரெண்டாவது படமான 'காதல்' சூப்பர் ஹிட். அந்த வாய்ப்பு எப்படிக் கிடைச்சது?''

'`முதல் படம் சுமாராப் போனா ரெண்டாவது பட வாய்ப்பெல்லாம் கிடைக்கிறது ரொம்ப கஷ்டம். 'இவர் பெருசா பட்ஜெட் இழுத்து விட்டுருவார். இவரை நம்பிப் பணம் போட முடியாது'ன்னு வேற என்னைப்பத்தி ஒரு நெகட்டிவ் டாக்கும் பரவ ஆரம்பிச்சிடுச்சு. ஆனா, விக்ரம் சாருக்கு என்னோட உழைப்பு தெரியும். அவர் என்கூட சேர்ந்து அடுத்த படம் பண்ண ரெடியா இருந்தார். வளசரவாக்கத்துல எனக்கு ஒரு ஆபீஸ் ரெடி பண்ணிக்கொடுத்து அவருக்காக ஒரு கதை ரெடி பண்ணச் சொல்லியிருந்தார்.

விகடன் பைட்ஸ்: `புதிய பாதை' சிக்கல்கள்... `காதல்' உருவான கதை!

அந்த ஆபீஸுக்குள்ள உட்கார்ந்து தினமும் கதை எழுத யோசிப்பேன். ஆனா, ஒண்ணுமே தோணாது. ஏதேதோ எழுதிப்பார்த்தும் எதுவும் சரியா செட் ஆகல. "டீக்கடையில நின்னுட்டு இருந்தப்போ ஒரு ஸ்கூல் படிக்குற பொண்ணும், மெக்கானிக் பையனும் பேசிக்கிட்டு இருந்தாங்க. அப்போ, முன்னாடி நடந்த ஒரு சம்பவம் ஞாபகத்துக்கு வந்தது. அதாவது, ட்ரெயின்ல மதுரை டூ சென்னை வந்துக்கிட்டு இருந்தப்போ நான் சந்திச்ச ஒரு தம்பதி சொன்ன நிஜக் கதையுடன் டீக்கடையில் நான் பார்த்த ஜோடியை இணைச்சு ஒரு கதையை உருவாக்கினேன். அதான் 'காதல்' கதை! உடனே, விக்ரம் சார்கிட்ட ஓடினேன்..."

- சினிமாவில் முதல் இன்னிங்ஸ் அனுபவம் சொல்கிறார் இயக்குநர் பாலாஜி சக்திவேல். அதை முழுமையாக ஆனந்த விகடன் இதழில் வாசிக்க > "முதல் கதையைப் படமாக்கவே முடியலை!" https://bit.ly/3cd4FIF

சிறப்புச் சலுகை: விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ஆனந்த விகடன் தொடங்கி அவள் கிச்சன் வரை அனைத்து இதழ்களையும் 30 நாள்களுக்கு கட்டணமின்றி வாசிக்கலாம். குறிப்பாக, கடந்த 2006-ல் இருந்து வெளியான அனைத்து ப்ரைம் கன்டென்ட்டுகள், பொக்கிஷக் கட்டுரைகளிலும் வலம்வர முடியும். விகடன் ஆப் டவுன்லோடு லிங்க் இதோ https://bit.ly/2VRp3JV

அடுத்த கட்டுரைக்கு