Published:Updated:

இளையராஜாவுக்கு எனத் தனி ஸ்டூடியோ... எங்கே, எப்போது திறப்புவிழா?! #VikatanExclusive #RajaStudio

அடுத்து இளையராஜா என்ன செய்யப்போகிறார், இனி எங்கிருந்து இயங்குவார் என்கிற கேள்விக்கு விடைதெரியாமல் இருந்தது. இந்நிலையில்தான் இளையராஜா ரசிகர்களுக்கான சந்தோஷ செய்தி விகடனுக்கு வந்து சேர்ந்திருக்கிறது.

இசைஞானி இளையராஜாவின் இசை வாழ்வில் 2019 சோதனைக்காலம். 40 ஆண்டுகளாக அவர் இயங்கிவந்த பிரசாத் ஸ்டூடியோவுக்குள் அவரால் நுழைய முடியாத மாதமாக நவம்பர் மாதம் மாறியது.

என்ன பிரச்னை?

ஏவிஎம் போலவே சென்னை வடபழனியில் அமைந்திருக்கும் மிகவும் முக்கியமான ஸ்டூடியோ பிரசாத் ஸ்டூடியோ. 40 ஆண்டுகளுக்கு முன்பு பிரசாத் ஸ்டூடியோவின் நிறுவனர் எல்.வி.பிரசாத், தான் பயன்படுத்தி வந்த அறையை இளையராஜாவுக்கு கொடுத்துவிட்டார். இளையராஜாவின் இசைப்பணிகள் பிரசாத் ஸ்டூடியோவில்தான் நடக்க வேண்டும் என்பது அவர் விருப்பம். அன்று முதல் இளையராஜாவின் முகவரி என்பது பிரசாத் ஸ்டூடியோவாக மாறியது. ஒருநாளில் பெரும்பான்மையான நேரம் இளையராஜா இங்கேதான் இருப்பார். அவரை சந்திக்க வருபவர்கள் அனைவருமே பிரசாத் ஸ்டூடியோவுக்குத்தான் வருவார்கள்.

எல்.வி.பிரசாத்தின் மகன் ரமேஷ் பிரசாத் நிர்வாகத்தைப் பார்க்கத் தொடங்கிய பின்பும் இளையராஜாவின் ரிக்கார்டிங் ஸ்டூடியோ பிரசாத் வளாகத்திலேயே தொடர்ந்தது.

கமல் ஹாசன் - இளையராஜா
கமல் ஹாசன் - இளையராஜா
"இளையராஜா சாரின் பாடல்கள் எங்கள் ஸ்டூடியோவில் இருந்துதான் பிறக்கின்றன என்பது எங்களுக்கான பெருமை. எங்கள் ஸ்டூடியோவை அவர் கோயிலாக மாற்றிவிட்டார்."
என்று பேசியிருக்கிறார் ரமேஷ் பிரசாத்.

ஆனால், கடந்த சில ஆண்டுகளாகக் கடும் நஷ்டத்தை சந்தித்து வந்த பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகம், நஷ்டத்தைக் குறைக்க பல நடவடிக்கைகள் எடுத்துவந்தது. அதில்தான் இளையராஜாவின் ஸ்டூடியோவுக்கும் சிக்கல் வந்தது. பல ஆண்டுகளாகவே மாத வாடகை என பிரசாத் ஸ்டூடியோவுக்கு இளையராஜா தரப்பில் இருந்து எந்தத் தொகையும் கொடுக்கப்பட்டதில்லை. ஆனால், அவ்வப்போது தயாரிப்பாளர்கள் தரப்பில் இருந்து பிரசாத் நிர்வாகத்துக்கு பணம் கொடுக்கப்படுமாம். பிறகு, எல்.வி.பிரசாத்தின் பேரன் சாய் பிரசாத் நிர்வாகத்தலைமைக்கு வந்ததும் இளையராஜா ஸ்டூடியோ குறித்து பல கேள்விகளை எழுப்பியிருக்கிறார்.

இளையராஜாவை சந்தித்து, "எங்களுடைய பிசினஸ் எல்லாம் முன்பு போல் இல்லை. எல்லாம் நஷ்டத்தில் போய்க்கொண்டிருக்கிறது. அதனால் நீங்கள் பயன்படுத்தும் ஸ்டூடியோவை காலி செய்ய வேண்டும்" எனச் சொல்லியிருக்கிறார். ஆனால், இளையராஜாவோ ''நான் 40 வருஷமா இங்கதான் இருக்கேன். என் குடும்பத்தோடிருந்த நேரத்தைவிட இந்த ஸ்டூடியோவில் இருந்த நேரம்தான் அதிகம். திடீரென சொன்னால் காலி செய்ய முடியாது'' எனச் சொல்லியிருக்கிறார்.

ஆனால், இளையராஜா வெளியேறியே ஆக வேண்டும் என்பதில் மிகவும் உறுதியாக இருந்த பிரசாத் ஸ்டூடியோ இளையராஜாவின் ரிக்கார்டிங் ஸ்டூடியோவுக்கு பூட்டுபோட்டது. பிரசாத் ஸ்டூடியோவில் தமிழகத்தின் மிக முக்கியமான அமைச்சர் ஒருவர் பல கோடிகளை முதலீடு செய்திருப்பதாகவும், அதனால்தான் இளையராஜாவுக்கு நெருக்கடி கொடுக்கப்படுகிறது என்றும் அப்போது செய்திகள் வெளியே கசிந்தன.

கமல்ஹாசன் - ஏ.ஆர்.ரஹ்மான் - இளையராஜா
கமல்ஹாசன் - ஏ.ஆர்.ரஹ்மான் - இளையராஜா

ரிக்கார்டிங் ஸ்டூடியோவுக்குப் பூட்டுபோட்ட நவம்பரில்தான் பெங்களூருவில் ஓர் இசை நிகழ்ச்சி, 'கமல்-60' விழா என்று இரண்டு பெரிய இசை நிகழ்சிகளை நடத்த ஒப்புக்கொண்டிருந்தார் இளையராஜா. இந்த நேரத்தில் ஸ்டூடியோ பூட்டப்பட்டதில் கடும் மன உளைச்சலுக்கு ஆளானார் இளையராஜா. வாடகைக்கு இசைக்கருவிகள் எடுத்துதான் இரண்டு இசை நிகழ்ச்சிகளையும் சமாளித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆனால், அடுத்து இளையராஜா என்ன செய்யப்போகிறார், இனி எங்கிருந்து இயங்குவார் என்கிற கேள்விக்கு விடைதெரியாமல் இருந்தது. இந்நிலையில்தான் இளையராஜா ரசிகர்களுக்கான சந்தோஷ செய்தி விகடனுக்கு வந்து சேர்ந்திருக்கிறது.

விஜி, சீனு, சுப்பிரமணி, ஊட்டி.. வளர்ந்த குழந்தைக்குத் தாயுமானவனின் கதை! `மூன்றாம் பிறை' நெகிழ்வலைகள்

கோடம்பாக்கத்தில் உள்ள எம்.எம்.பிரிவியூ தியேட்டரை வாங்கிவிட்டார் இளையராஜா. இங்கே இப்போது ரிக்கார்டிங் ஸ்டூடியோ அமைப்பதற்கான வேலைகள் தொடங்கப்பட்டுவிட்டன. இந்த இடத்துக்கு 'ராஜா ஸ்டூடியோ' எனப் பெயரிடப்பட்டிருக்கிறது. இந்த வளாகத்துக்கு முன்பாக இருந்த கடைகளை எல்லாம் காலி செய்யச் சொல்லியிருக்கிறார்கள். செப்டம்பருக்குள் அங்கே ஸ்டூடியோ பணிகள் முடிக்கப்பட்டு ரிக்கார்டிங் பணிகள் தொடங்கிவிடும் என்கிறார்கள், இளையராஜாவுக்கு நெருக்கமானவர்கள்.

ராஜா ஸ்டூடியோ... பேரைச் சொன்னதுமே மனசுக்குள்ள ஒரு பிஜிஎம் ஓடுதுல்ல!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு