Published:Updated:

Vikatan Exclusive: தனுஷ், மாரி செல்வராஜின் `கர்ணன்' ரெடி... ரிலீஸ் தேதி என்ன?! #Karnan #Dhanush

தனுஷ் #Karnan
தனுஷ் #Karnan

கொடியன்குளம் கலவரம் பற்றிய படம் எனத் தகவல்கள் பரவியநிலையில் இதை முழுவதுமாக மறுத்திருக்கிறார் மாரி செல்வராஜ்.

`பரியேறும் பெருமாள்' படத்தை இயக்கிய மாரி செல்வராஜின் இரண்டாவது படம் `கர்ணன்'. தனுஷ் ஹீரோவாக நடித்திருக்கும் இப்படத்தில், மலையாள நடிகர் லால், கேமராமேன் நட்டி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.

படத்தில் தனுஷின் பெயர் 'கர்ணன்'. "மகாபாரதக் கர்ணன் எல்லாவற்றையும் தானம் கொடுக்கிற கர்ணனாக இருப்பார். ஆனால், இந்தக் கர்ணணிடம் கொடுப்பதற்கு எதுவுமே கிடையாது. இவன் எனக்குக் கொடு, எனக்குத் தா என எனத் தனக்கான விஷயங்களை, தனக்கான உரிமைகளைக் கேட்பவனாக இருப்பான்'' என்று ஏற்கெனவே `கர்ணன்' படத்துக்கான பெயர் காரணத்தைச் சொல்லியிருப்பார் இயக்குநர் மாரி செல்வராஜ்.

மாரி செல்வராஜ்
மாரி செல்வராஜ்

கொடியன்குளம் கலவரம் பற்றியப் படம் எனத் தகவல்கள் பரவியநிலையில் இதை முழுவதுமாக மறுத்திருக்கிறார் மாரி செல்வராஜ். "கொடியன்குளமோ, தென் மாவட்ட கலவரங்கள் பற்றிய படமோ இது இல்லை. இது ஒரு புனைவு. இதற்குள் சில உண்மைச் சம்பவங்களும் இருக்கும். அதையொட்டிய புனைவும் இருக்கும்" என்றும் முன்னரே ஆனந்த விகடன் பேட்டியில் தெளிவுபடுத்தியிருக்கிறார்.

தற்போது `கர்ணன்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளும் கிட்டத்தட்ட நிறைவடைந்துவிட்டன. படத்தைத் தமிழ் வருடப்பிறப்புக்கு ரிலீஸ் செய்யும் திட்டத்தில் இருக்கிறார்கள். அதாவது ஏப்ரல் 9-ம் தேதி படம் தியேட்டர்களில் ரிலீஸ் ஆகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
அடுத்த கட்டுரைக்கு