Published:Updated:

விகடன் பொக்கிஷம்: “ஐயோ... கத்தி!” - அர்ச்சனாவின் ஜாலி அலறல்!

அர்ச்சனா
பிரீமியம் ஸ்டோரி
அர்ச்சனா

இது நெக் இன் டு தி சோல் மேஜிக். இப்போ இந்தக் கத்தியால உங்க கழுத்தில் குத்தப்போறேன்

விகடன் பொக்கிஷம்: “ஐயோ... கத்தி!” - அர்ச்சனாவின் ஜாலி அலறல்!

இது நெக் இன் டு தி சோல் மேஜிக். இப்போ இந்தக் கத்தியால உங்க கழுத்தில் குத்தப்போறேன்

Published:Updated:
அர்ச்சனா
பிரீமியம் ஸ்டோரி
அர்ச்சனா
24.10.04 ஆனந்த விகடன் இதழில்...

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

நெற்றி மேட்டில் குங்குமத் தீற்றல், பூசிய கன்னம் என கல்யாண குஷி இன்னமும் மினுமினுக்கிறது அர்ச்சனா முகத்தில்.

“வாங்களேன்... ஜாலியா ஒரு ரவுண்ட் போகலாம்” என்றோம். ‘‘எங்கே?’’ என ஆர்வமானவரை அள்ளிக்கொண்டு காமராஜர் அரங்கத்தில் நடக்கும் ஜாதுகர் ஆனந்தின் மேஜிக் ஷோவில் இறக்கினோம்.

‘`ஹையோ... மேஜிக் பார்க்க எனக்கு ரொம்பப் பிடிக்கும்!” என்று துள்ளிக் குதித்த அச்சுவிடம், ‘‘பார்க்கறதாவது! உங்களை வெச்சுதான் மேஜிக்கே பண்ணப்போறாரு ஜாதுகர், என்ன சொல்றீங்க?” என்றோம்.

“எ... என்ன சொல்றீங்க?” என்று பதறிவிட்டார் அர்ச்சனா. அதற்குள் பளபள மேஜிக் காஸ்டியூம் மேக்கப்பில் ஜொலிஜொலித்தபடி வந்து வரவேற்றார் ஜாதுகர் ஆனந்த். “வெல்கம்” என்றவர், தன் கையை விஷ்க்கென காற்றில் வீசி, ஒரு ரோஜாப்பூவை வரவழைத்துக் கொடுக்க, அர்ச்சனா முகத்தில் புன்னகைப் பூ!

ஜாதுகருடன் அர்ச்சனாவையும் மேடையில் ஏற்றினோம். ஆரம்பமானது ஸ்பெஷல் ஷோ. “இது நெக் இன் டு தி சோல் மேஜிக். இப்போ இந்தக் கத்தியால உங்க கழுத்தில் குத்தப்போறேன்!” என்றபடி ஒரு பெரிய கத்தியை ஜாதுகர் உருவ, ஐயோ என்று அலறிவிட்டார் அர்ச்சனா.

அர்ச்சனா
அர்ச்சனா

“பயப்படாதீங்க துளி ரத்தம்கூட சிந்தாது” என ஜாதுகர் தைரியம் கொடுத்தாலும் அர்ச்சனாவுக்கு செம நடுக்கம்! ஜாதுகர் ஹிப்னாடிஸம் செய்து அர்ச்சனாவை மயக்கத்தில் ஆழ்த்தினார். பின் அவரது கழுத்தில் கத்தியை வைத்து அழுத்த, அது சரக்கென அர்ச்சனாவின் கழுத்தைத் துளைத்துக்கொண்டு பின்பக்கம் எட்டிப் பார்த்ததும் நமக்கே கொஞ்சம் திகிலாகிவிட்டது. பின்பு கத்தியை உருவி மந்திரம்போல் ஏதோ முணுமுணுக்க விழிப்பு நிலைக்கு வந்தார் அர்ச்சனா. “ஹேய் என்ன நடந்தது, எனக்கு ஒண்ணுமே ஆகலையே! ஜாலியா இருக்குப்பா!” என்றார் நம்ப முடியாமல்.

“அப்போ அடுத்த அயிட்டத்துக்குப் போகலாமா?” என்று கேட்டார் ஜாதுகர். ``அதாவது இப்ப நீங்க தொலைந்து போகப் போறீங்க” என்றார் ஜாதுகர் கண்சிமிட்டி!

“அய்யய்யோ” என அலறிவிட்டார் அர்ச்சனா. அதற்குள் ஒரு பீரோ வர அர்ச்சனாவை அதனுள் நுழைந்துகொள்ளச் சொன்னார் ஜாதுகர். சகல தெய்வங்களையும் வேண்டிக்கொண்டு தாலியை எடுத்து கண்களில் ஒற்றிக்கொண்ட அர்ச்சனா “நான் காணாமல் போயிட்டேன்னா என் வினீத்துக்கு வேற நல்ல பொண்ணாப் பார்த்துக் கல்யாணம் பண்ணி வைக்க வேண்டியது உங்க பொறுப்புதான்!” என நம்மிடம் செல்லமாக சிணுங்கியவாறே மூக்கை உறிஞ்சியபடி பீரோவுக்குள் நுழைந்தார்.

பீரோவில் செய்யப்பட்டிருந்த ஓட்டை வழியே முகம்காட்டிச் சிரித்த அர்ச்சனாவைப் பார்த்து ஜாதுகர் கையசைத்து ஏதோ மந்திரம் சொல்ல, அடுத்த நொடி அர்ச்சனாவைக் காணவில்லை. உதறல் எடுத்துவிட்டது நமக்கு.

“ஜாதுகர்ஜி... எங்க அர்ச்சனாவைத் திருப்பிக் கொடுத்துடுங்க. இல்லேன்னா சன் டிவி ரசிகர்கள் எங்களை உண்டு இல்லைன்னு ஆக்கிருவாங்க” என நாம் பதற, மெகா சிரிப்புடன் ஜாதுகர் மந்திரம் சொன்னார். அடுத்த கணம் அர்ச்சனா மீண்டும் பீரோவிலிருந்து சிரித்தார். அப்பாடா! என்றிருந்தது நமக்கு.

அடுத்தடுத்து பல மேஜிக்குகளைப் போட்டுத்தாக்கி அனைவரையும் அசத்திய ஜாதுகர் “ஏழு வயசுலேர்ந்தே எனக்கு மேஜிக்ல ஆர்வம். இதுவரைக்கும் 26,000 ஷோக்கள் நடத்தியாச்சு. ஒரு தடவை கர்நாடகா கவர்னரை மேடையில் வைத்து அவர் சொத்தை எல்லாம் என் பெயருக்கு எழுதி வைக்கும்படி பண்ணிட்டேன். மயக்கம் தெளிஞ்சு எழுந்து அவரிடம் விஷயத்தைச் சொன்னதும் அலறிவிட்டார். சும்மா தமாஷுக்குத்தான் என்று சொல்லி, அவர் எழுதித் தந்ததை அவர் முன்னாடியே கிழித்துப் போட்டுவிட்டேன். சென்னைக்கு நான் வர்றது இதுதான் முதல் தடவை’’ என்று தன் கதையை விவரிக்க,

“சார்... சார் எங்க தமிழ்நாட்டுக்குக் காவிரித் தண்ணீர் விடற மாதிரி ஒரு உத்தரவுல நைஸா அவங்க கையெழுத்தை வாங்கித் தரமுடியுமா” என்று கொக்கி போட்டார் அர்ச்சனா.

“யம்மா... பாலிடிக்ஸுங்கிறது பெரிய மேஜிக்காச்சே! ஆளை விடு!’’ என்று கையைத் தூக்கிவிட்டது அந்த மேஜிக் சிங்கம்.

- ராஜூமுருகன், படங்கள்: என்.விவேக்

29.06.1969 ஆனந்த விகடன் இதழில்...

விகடன் பொக்கிஷம்: “ஐயோ... கத்தி!” - அர்ச்சனாவின் ஜாலி அலறல்!

சுஜாதா எழுதிய ‘கற்றதும்... பெற்றதும்’ கட்டுரை ஒன்றில், ‘விகடனில் வந்த என் முதல் சிறுகதை - சில வித்தியாசங்கள்’ என்று குறிப்பிட்டிருந்தார். இந்தக் கதை 1969-ம் ஆண்டு வெளியானது. ஆனால், ஆனந்த விகடனில் 1968-ம் ஆண்டே ‘வீணா 1968’ என்னும் தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளார் சுஜாதா. இங்கே உங்களுக்காக, 29.06.1969 தேதியிட்ட விகடனில் சுஜாதா எழுதிய இரண்டாவது சிறுகதையான ‘சில வித்தியாசங்கள்’ கதையிலிருந்து சில வரிகள்.

விகடன் பொக்கிஷம்: “ஐயோ... கத்தி!” - அர்ச்சனாவின் ஜாலி அலறல்!

முழுக் கதையையும் படித்து ரசிக்க இங்கே சொடுக்குங்கள்.

https://bit.ly/AVPS2

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism