Published:Updated:

"தியேட்டர்கள் திறந்தாலும் இப்போது `மாஸ்டர்' வேண்டாம்!"- கேயார்... மக்கள் கருத்து என்ன? #VikatanPollResults

மாஸ்டர்
மாஸ்டர்

தியேட்டர்கள் திறக்கப்பட்டாலும் 'மாஸ்டர்' வெளியீட்டை தள்ளிவைக்க வேண்டும் என்று தயாரிப்பாளர் கேயார் கூறியிருப்பது பற்றி மக்கள் கருத்து என்ன? #VikatanPollResults

கொரோனா பாதிப்பால் கடந்த 2 மாதங்களாக திரையரங்குகள் செயல்படாமல் உள்ளன. இதனால் ஏப்ரல் மற்றும் மே ரிலீஸ் எனத் திட்டமிடப்பட்டிருந்த 'மாஸ்டர்', 'சூரரைப் போற்று', 'ஜகமே தந்திரம்' போன்ற படங்கள் ரிலீஸாகாமல் உள்ளன. இந்த நிலையில் தற்போது 5-ம் கட்ட தளர்த்தப்பட்ட ஊரடங்கில் பல்வேறு தடைகள் விலக்கிக்கொள்ளப்பட்டு மக்கள் இயல்பு வாழ்க்கையை நோக்கி நகர்ந்துகொண்டு இருக்கிறார்கள். அதேபோல் திரையரங்குகளையும் திறக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

கேயார்
கேயார்

அப்படி ஒருவேளை திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் விஜய்யின் 'மாஸ்டர்' படம் தற்போது வெளியாகக்கூடாது என இயக்குநர், தயாரிப்பாளர், விநியோகஸ்தர் மற்றும் திரையரங்கு உரிமையாளருமான கேயார் அறிக்கை வெளியிட்டுள்ளார். இதற்குக் காரணமாக அவர் குறிப்பிடுவது, விஜய் போன்ற பெரிய நடிகரின் படங்கள் வெளியானால் ரசிகர்களின் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் போய்விடும். சமூக இடைவெளி போன்ற விதிமுறைகளைப் பின்பற்ற முடியாத நிலை ஏற்படும் என்பதுதான். இது கொரோனா காலத்தில் ஆபத்தை விளைவிக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மக்களின் கருத்து என்ன? விகடன் தளம், ட்விட்டர் மற்றும் Helo பக்கங்களில் கிடைத்த முடிவுகள்.

விகடன் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்

Master | Vikatan Poll
Master | Vikatan Poll

விகடன் Helo பக்கத்தில் கிடைத்த முடிவுகள்

Master | Vikatan Poll
Master | Vikatan Poll

விகடன் தளத்தில் கிடைத்த முடிவுகள்

Master | Vikatan Poll
Master | Vikatan Poll

அனைத்து Poll-களையும் வைத்து கிடைத்த இறுதி முடிவுகள்

Master | Vikatan Poll
Master | Vikatan Poll

இந்தக் கேள்விக்கு வாசகர்கள் பகிர்ந்த சில கமென்ட்ஸ்

இது குறித்து உங்களின் கருத்துகளைக் கீழே பதிவு செய்யுங்கள்.
அடுத்த கட்டுரைக்கு