Published:Updated:

விகடன் பிரஸ்மீட்: ஜெயம் ரவி: “மணி சார் ‘பொன்னியின் செல்வ’னை சூப்பரா பிளான் பண்ணியிருக்கார்!”

ஜெயம் ரவி
பிரீமியம் ஸ்டோரி
ஜெயம் ரவி

- விகடன் நிருபர்களுக்கு மட்டுமேயான பிரத்யேக பிரஸ்மீட் இது.

விகடன் பிரஸ்மீட்: ஜெயம் ரவி: “மணி சார் ‘பொன்னியின் செல்வ’னை சூப்பரா பிளான் பண்ணியிருக்கார்!”

- விகடன் நிருபர்களுக்கு மட்டுமேயான பிரத்யேக பிரஸ்மீட் இது.

Published:Updated:
ஜெயம் ரவி
பிரீமியம் ஸ்டோரி
ஜெயம் ரவி

‘‘விபத்தில் மரணமடைந்த மதுரை ரசிகர் குடும்பத்தை நேரில் சந்தித்து ஆறுதல் சொன்னீங்க. ரசிகர்களை முன்னாடி அடிக்கடி சந்திப்பீங்க. இப்ப எப்படி சந்திக்கிறீங்க... ரசிகர்களுக்கும் உங்களுக்குமான உறவு பத்திச் சொல்லுங்க?’’
- சக்தி தமிழ்ச்செல்வன்

‘‘ரசிகர்கள் இல்லாம சினிமா இல்ல. சினிமா இல்லாம ரசிகர்கள் இல்ல. ரசிகர்கள் சினிமாவை விரும்புறாங்க. சினிமாக்காரங்க ரசிகர்களை மதிக்கணும். அதை நன்றிக்கடன்னு சொல்லலாம். ஃபர்ஸ்ட் நாமே ரசிகர்தான். நல்ல ரசிகரா இருந்தாதான் நல்ல சினிமா எடுக்க முடியும். எப்போதும் என்னை முதல்ல நல்ல ரசிகராதான் பார்ப்பேன். அதுக்கு அப்புறம்தான் நடிகர்னு நினைப்பேன். என் படத்தை முதல்ல நான் ரசிக்கணும். ரசிகனா இருந்தாதான் கலைஞனாக மாற முடியும். ஸோ, எப்போதும் ரசிக மனநிலையிலதான் நான் இருப்பேன். ஒரு கதை கேக்குறப்போ ரசிகனா இருந்து டிக் மார்க் பண்ணிட்டுதான் அடுத்து புரொபஷனல் நடிகரா மாறுவேன். இதுக்கு முன்னாடி வரைக்கும் ரசிகன் மட்டும்தான். அதனால, இப்போ வரைக்கும் சர்வைவல் ஆகிட்டிருக்கேன். அப்பதான் நல்ல படங்கள் பண்ண முடியும். எப்போ நடிகன்னு நினைச்சு மைண்ட் ஷிப்ட் ஆகுதோ அப்போ எல்லாமே போயிரும். ஸோ, ரசிகர்கள் மேல மிகப்பெரிய மரியாதை வெச்சிருக்கேன். லட்சக்கணக்கான ரசிகர்கள் எனக்கு இருக்காங்கன்னு சொல்ல மாட்டேன். இல்லன்னு எனக்குத் தெரியும். ஆனா, குறைவான ரசிகர்கள் இருந்தாலும் ‘ஜெயம்' படத்திலிருந்து இப்போ வரைக்கும் என்கூட இருக்காங்க. ரசிகர்கள்தான் கடவுள் கொடுத்த கிப்ட். இவங்களை யாராலும் என்கிட்ட இருந்து பிரிக்க முடியாது. சினிமாங்கிற ஒன்னுதான் எங்களைச் சேர்த்து வச்சிருக்கு. படம் இல்லாம மூணு வருஷம் இருந்திருக்கேன். அப்போகூட என் ரசிகர்கள் எங்கேயும் போகல. என்கூட இருந்தாங்க.’’

விகடன் பிரஸ்மீட்: ஜெயம் ரவி:  “மணி சார் ‘பொன்னியின் செல்வ’னை சூப்பரா பிளான் பண்ணியிருக்கார்!”

‘‘சமீபத்துல உங்க ரசிகர் மன்றத்துல இருக்குற உறுப்பினர்களுக்குக் காப்பீடு எடுத்துக் கொடுத்திருக்கீங்களே?’’ - சுதர்சன் காந்தி

‘‘வருத்தத்துக்குரிய விஷயம் என்னன்னா, ஏதாவது அசம்பாவிதம் நடக்குறப்போதான் காப்பீடு போடணும்னு தோணுது. இன்ஷூரன்ஸ் எல்லோருக்கும் தேவையான ஒண்ணு. குறைவான பணத்தில் அதைச் செய்ய முடியும்னு சொல்லிச் செஞ்சேன். எதிர்பாராத விதமா எது நடந்தாலும் இன்ஷூரன்ஸ் மூலமா வர்ற காசு, பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கும் பசங்களோட படிப்புக்கும் உதவும்னு சொன்னேன். கசப்பான மறக்க முடியாத சம்பவம், என்னுடைய மிகப்பெரிய ரசிகர் செந்தில் சமீபத்தில் இறந்துபோனது. ‘ஜெயம்' படத்துல இருந்து கூடவே இருக்கார். செந்தில் குடும்பத்துக்கு ஏதாவது பண்ணணும்னு நினைக்கிறப்போதான் எல்லாருடைய குடும்பத்துக்கும் பண்ணணும்னு தோணுச்சு. செய்யுறதை வெளிய சொல்றோமா இல்லையாங்கிறத தாண்டி, செய்யணும். எல்லாருக்கும் நல்லது பண்ணணும்.’’

விகடன் பிரஸ்மீட்: ஜெயம் ரவி:  “மணி சார் ‘பொன்னியின் செல்வ’னை சூப்பரா பிளான் பண்ணியிருக்கார்!”
விகடன் பிரஸ்மீட்: ஜெயம் ரவி:  “மணி சார் ‘பொன்னியின் செல்வ’னை சூப்பரா பிளான் பண்ணியிருக்கார்!”

‘‘இந்தக் கதையை ஏன் செலக்ட் பண்ணினோம்னு நினைச்சதுண்டா? படப்பெயர் சொல்ல வேண்டாம். ஏன்னு மட்டும் சொல்லுங்க!’’ - வித்யா காயத்ரி

‘‘நினைச்சிருக்கேன், இல்லன்னு சொல்ல முடியாது. நெகட்டிவா இல்ல; பாசிட்டிவா நினைப்பேன். ‘ஏன் இந்தக் கதையை எடுத்தோம். இதுல எது நம்மை ஏமாத்திருச்சு. கதை கேட்டப்போ எந்த மாதிரியான மனநிலையில இருந்தோம்’னு யோசிப்பேன். ஏன்னா, தப்புல இருந்துதான் கத்துக்க முடியும். இப்படிப் பண்ணக் கூடாதுன்னு தெரிஞ்சா, அப்படிப் பண்ணாம சரியானதைச் செஞ்சிருவோம். யாராவது முட்டாள்தனமா செய்யுறதைப் பார்த்தாதான் அப்படி நாம செய்யாம இருக்க முடியும். நான் பண்ணுன படங்களை ரீ விசிட் பண்ணும்போது இதெல்லாம் யோசிப்பேன். அதே மாதிரி, பண்ணுன தப்பைப் பண்ணக் கூடாது. புதுசாக்கூட ஏதாவது தப்பு பண்ணலாம்னு நினைப்பேன். அப்போதான் கத்துக்க முடியும். பண்ற தப்பைப் பண்ணாம இருக்குறதுக்கு என்னையே கேள்வி கேட்டு, சரி பண்ணிப்பேன். ஏன்னா, ஏற்கெனவே பண்ணுன தப்பைத் திரும்பவும் பண்றதுதான் பெரிய தப்பு.’’

விகடன் பிரஸ்மீட்: ஜெயம் ரவி:  “மணி சார் ‘பொன்னியின் செல்வ’னை சூப்பரா பிளான் பண்ணியிருக்கார்!”

‘‘நீங்க, விக்ரம், நிவின் பாலி மூணு பேரும் வெளியே போவீங்க. அப்போ நீங்கதான் செலவழிப்பீங்கன்னு விக்ரம் ஒரு முறை சொல்லியிருந்தார். மூணு பேரும் எப்போ, எப்படி ப்ரெண்டானீங்க?” - சனா

‘‘ `once in the blue moon’ மாதிரிதான் இதெல்லாம் நடக்கும். ஏதாவதொரு சினிமா நிகழ்வுலதான் நடக்கும். நாங்க மூணு பேரும் மீட் பண்றது அரிதுதான். சிலர்கூடதான் நமக்கு சிங்க் ஆகும். விக்ரம் அண்ணா மனசுல எதுவும் வெச்சுக்காம நல்லா பேசுவார். நிவினும் அப்படிதான். மலையாளத்தில் ‘பார்ட்டி உண்டோ’ன்னு கேட்பார். ‘கெனி அண்ணா, நிவின் கேட்குறான், என்ன பண்ணலாம்?’னு கேட்பேன். ‘பர்ஸ் எடுத்துட்டு வரலையே’ன்னு ரிப்ளை வரும். ‘நீங்க என்னைக்கு எடுத்துட்டு வந்திருக்கீங்க’ன்னு ஜாலியா சொல்லிட்டு வெளியே கூப்பிட்டுப் போவோம். எங்கேயாவது உட்கார்ந்து அரட்டையடிச்சிட்டு இருப்போம். சினிமா, நட்பு பற்றிப் பேசுவோம். இந்தச் சந்திப்பு நடக்கும்போதெல்லாம் நல்லா இருக்கும். அந்தத் தருணங்களை கிப்ட் மாதிரி பீல் பண்ணுவேன்.’’

‘‘உங்களை ஒரு கம்ப்ளீட் ஆக்டரா அப்பாவும் குடும்பமும் எந்தப் படத்தப்போ உணர்ந்தாங்க ?’’ - பிரபாகரன்

‘‘எப்போ உண்மையான நடிகன்னு என்னை ஒத்துக்கிட்டாங்கன்னு தெரியல. சுமாரா நடிச்சாக்கூட நல்லா நடிக்குறேன்னு அம்மா சொல்லுவாங்க. நல்லா நடிச்சாக்கூட, ‘இன்னும் கத்துக்கணும்’னு அப்பா சொல்லுவார். அண்ணே திருப்தியே அடைய மாட்டார். அக்கா எதுவா இருந்தாலும் பட்னு சொல்லிருவாங்க. என் மனைவியும் சரியான விமர்சனம் கொடுப்பாங்க. ஆனா, என்னுடைய மனநிலை பார்த்து சொல்லுவாங்க. நான் பெரிய ஆளா வருவேன்னு நம்பிக்கையா இருக்குறது ஆடியன்ஸ்தான். நிறைய எஃபெர்ட் எடுத்துதான் சினிமாவுக்கு வந்தேன். என்னுடைய முதல் நாளுல இருந்து ஆடியன்ஸ் என்னை நடிகனா எடுத்துக்கிட்டாங்க. ஆடியன்ஸ்தான் சரியா சொல்லணும்.’’

விகடன் பிரஸ்மீட்: ஜெயம் ரவி:  “மணி சார் ‘பொன்னியின் செல்வ’னை சூப்பரா பிளான் பண்ணியிருக்கார்!”

‘‘இப்ப ஹீரோக்கள் வில்லனா நடிக்கிறது ஃபேஷனா இருக்கு. நீங்க வில்லனா நடிக்க ஓகே சொல்வீங்களா? அப்படி நடிச்சா எந்தக் கேரக்டர் எந்த மாதிரி இருக்கணும்?’’ - அருண் பிரசாத்

‘‘நானே ஹீரோவா இருந்தா வில்லனா நடிப்பேன். எனக்கு அப்படித்தான். ஹீரோவா இருக்கணும்னுதான் ஆசைப்பட்டு வந்தேன். அதனால, ஹீரோவா இருக்கணும்னுதான் நினைக்கிறேன். ஒரு படத்தைப் பார்க்கிற ஆடியன்ஸ் ஹீரோவதான் பாலோ பண்ணுவாங்க. ஸோ, ஹீரோவா இருக்கவே ஆசைப்படுறேன்.’’

‘‘ஓ.டி.டி வந்த பின் ரீமேக் இனி சாத்தியமா? அப்படி சாத்தியம்னா என்னென்ன மாற்றங்கள் செய்ய வேண்டியதிருக்கும்?’’ - சுதர்சன் காந்தி

‘‘இது நீண்டுக்கிட்டே இருக்கற கேள்விதான். அதுக்கு நாம அடாப்ட் ஆகிட்டே இருந்தோம். முதல்ல டாடா ஸ்கைன்னு ஒண்ணு வந்துச்சு. இவ்வளவு நாள்களுக்குப் பிறகு படங்கள் தியேட்டரைத் தாண்டி அதுல வரும்னு இருந்துச்சு. அப்படியே டெக்னாலஜியும் மாறிக்கிட்டே இருக்கு. இப்போ ரிலீஸுக்கு முன்னாடிகூட படங்கள் அதுல வருது. இந்த மாற்றத்தைத் தடுக்க முடியாது; தடுக்கவும் வாய்ப்பில்லை. எல்லாருமே இதைப் புரிஞ்சும் இருக்காங்க. எனக்குத் தெரிஞ்சு ஓ.டி.டி 15 சதவிகிதம்தான் பாப்புலர் ஆகியிருக்கறதா நினைக்கறேன். ஏன்னா, இந்தியாவில் 70 சதவிகிதம் கிராமங்கள்தான். ஸோ, அவங்க கையில போன் இருக்குதா? 5ஜி, 4ஜில எல்லாம் படங்கள் பார்க்க முடியுதான்னு பல கேள்விகள் இருக்கு. அவங்களுடைய மொழியில, கல்ச்சர்ல படங்கள் பண்ணும்போது அவங்களுக்குப் பிடிச்சிருக்கு. ஸோ, ரீமேக் பண்ணலாம், தப்பில்லை. ‘கோமாளி‘ இந்தி ரீமேக் ரெடியாகிட்டு இருக்கு. அர்ஜுன் கபூர் நடிக்கிறார். இன்னும் அஞ்சு வருஷம் கழிச்சுகூட ஓ.டி.டி 30 சதவிகிதம்தான் பாப்புலராகும்னு கணிக்கறேன்.’’

விகடன் பிரஸ்மீட்: ஜெயம் ரவி:  “மணி சார் ‘பொன்னியின் செல்வ’னை சூப்பரா பிளான் பண்ணியிருக்கார்!”

‘‘ ‘பொன்னியின் செல்வன்' படத்துடைய ஆஃப் கேமரா மெமரீஸ் பத்திச் சொல்லுங்க?’’ - கிருஷ்ணா

‘‘செம ஜாலியா இருக்கும். காலையில மூணு மணிக்கே எழுப்பிவிட்டிடுவாங்க. ஹோட்டல்ல இருந்து ஸ்பாட்டுக்கு ஒரு மணி நேரம் ட்ராவல் இருக்கும். அன்னைக்கு குதிரை ஏற்றத்திற்கான சீன் இருந்தால், அதுக்கான வார்ம் அப் இருக்கும், மேக்கப் போட ரொம்ப நேரமாகும். சூரியன் வரும்போது முதல் ஷாட் எடுத்திடுவார் மணி சார். நான், கார்த்தி, விக்ரம் பிரபு, ஜெயராம் சார், பிரகாஷ்ராஜ் சார், சரத் சார் எல்லோரும்தான் ஒன்னாவே இருப்போம். மணி சாரும் ஆஃப் கேமரா ரொம்ப ஜோவியலா இருப்பார். ரெண்டு பார்ட்டுக்கான வேலைகள் இருந்ததால செம டைட்டா போகும். மணி சார் சூப்பரா பிளான் பண்ணிப் பண்ணியிருக்கார். இந்த அனுபவம் மறுபடியும் கிடைக்காது.’’

அடுத்த வாரம்...

* `ஆதிபகவன்’ ரொம்ப மெனக்கெட்டு நடிச்ச படம். அதன் தோல்வி உங்களை பாதிச்சதா?

* உங்க படங்கள் பார்த்துட்டு, உங்கமேல உரிமை எடுத்துக்கிட்டு அடிக்கடி போன் பண்ணிப் பாராட்டுற, திட்டுற செலிபிரிட்டி யார்?

* இந்தச் சமூகத்தின்மீது கோபப்படும் இளைஞராகப் பல படங்களில் நடிச்சிருக்கீங்க. நிஜத்தில் அப்படிக் கோபம் வந்திருக்கா? எந்தச் சூழல்களில்?

* ஜெயம் ரவி யுனிவர்ஸ்ல எம்.குமரன் Vs பூலோகம் இவங்க ரெண்டு பேருக்கும் ஃபைட் வெச்சா, யார் ஜெயிப்பாங்கன்னு நினைக்கிறீங்க?