Published:Updated:

விகடன் பிரஸ்மீட்டில் ஜெயம் ரவி! - Promo

'ஜெயம்' தொடங்கி 'பொன்னியின் செல்வன்' வரை... 20 ஆண்டு திரைத்துறை அனுபவங்களை நம்முடன் பகிர்ந்துகொள்ளும் நடிகர் 'ஜெயம்' ரவி!

பர்சனல் தொடங்கி ப்ராஃபஷனல் வரை, விகடன் பத்திரிகையாளர்களின் பலதரப்பட்ட கேள்விகளுக்கு சளைக்காமல் பிரபலங்கள் பதிலளிக்கும் நிகழ்ச்சி 'விகடன் பிரஸ்மீட்'. 2018-ல் விஜய் சேதுபதியுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன், விஷால், அரவிந்தசாமி, சிம்பு, கமல், யுவன் ஷங்கர் ராஜா என பல முன்னணி பிரபலங்கள் இதுவரை பங்குகொண்டிருக்கிறார்கள்.

தனது முதல் படமான 'ஜெயம்' தொடங்கி மணிரத்னம் இயக்கத்தில் அவர் இப்போது நடித்திருக்கும் 'பொன்னியின் செல்வன்' வரை திரைத்துறையில் அவரது பல தரப்பட்ட அனுபவங்கள் அனைத்தையும் நம்முடன் பகிர்ந்துகொண்டார் ஜெயம் ரவி.

அந்த வீடியோவின் முன்னோட்டத்தை இங்கு காணலாம்!