Published:Updated:

Vikram 62: புனித் ராஜ்குமார் நடிக்க வேண்டிய கதை; பா.இரஞ்சித்துக்குப் பிறகு விக்ரமின் இயக்குநர் இவரா?

விக்ரம்

விக்ரமின் 61வது படத்தை இயக்கவிருக்கிறார் இயக்குநர் பா.ரஞ்சித். அதனைத் தொடர்ந்து விக்ரம் நடிக்கும் படத்தின் இயக்குநர் இவரா?

Published:Updated:

Vikram 62: புனித் ராஜ்குமார் நடிக்க வேண்டிய கதை; பா.இரஞ்சித்துக்குப் பிறகு விக்ரமின் இயக்குநர் இவரா?

விக்ரமின் 61வது படத்தை இயக்கவிருக்கிறார் இயக்குநர் பா.ரஞ்சித். அதனைத் தொடர்ந்து விக்ரம் நடிக்கும் படத்தின் இயக்குநர் இவரா?

விக்ரம்

தற்போது 'கோப்ரா' படத்தின் ப்ரொமோஷன் பணிகளில் செம பிஸியாக இருக்கிறார் விக்ரம். படம் ஆகஸ்ட் 31ம் தேதி வெளியாகி இருக்கிறது. செப்டம்பர் இரண்டாம் வாரத்திலிருந்து இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கும் படத்திற்குச் செல்லவிருக்கிறார். கோலார் தங்க சுரங்கத்தை மையமாக கொண்டு உருவாகும் இப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கிறது. இது விக்ரமின் 61வது படம்.

இயக்குநர் அஜய் ஞானமுத்து - விக்ரம்
இயக்குநர் அஜய் ஞானமுத்து - விக்ரம்

62வது படமாக 'கோப்ரா' இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் மீண்டும் ஒரு படம் நடிப்பதாகவும் அதனை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் தகவல் வெளியானது. இப்போது கன்னட இயக்குநர் பவன் குமார் இயக்கத்தில் விக்ரம் நடிக்கவிருக்கிறார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தப் படம் தமிழ் - கன்னடம் பைலிங்குவலாக உருவாக இருக்கிறது. பவன் இயக்கத்தில் வெளியான 'லூசியா', 'யூ டர்ன்' ஆகிய கன்னடப் படங்கள் மிகவும் பிரபலமடைந்தவை. இந்த இரு படங்களும் தமிழில் 'எனக்குள் ஒருவன்', 'யூ டர்ன்' என ரீமேக்காகி வெளியாகின. சமீபமாக, அமலா பாலை வைத்து தெலுங்கில் ஒரு வெப் சீரிஸும் சித்தார்த், ஹூமா குரேஷியை வைத்து இந்தியில் ஒரு வெப் சீரிஸும் இயக்கியிருந்தார் பவன்.

இதனைத் தொடர்ந்து, 'கே.ஜி.எஃப்' தயாரிப்பாளர் ஹோம்பேல் பிலிம்ஸ் தயாரிப்பில் புனித் ராஜ்குமார் - த்ரிஷாவை வைத்து 'த்வித்வா' என்றொரு படத்தை இயக்கத் திட்டமிட்டு அதற்கான பணிகள் நடந்துகொண்டிருந்தன. அந்தப் படத்தில் பகத் பாசில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதற்குள் புனித் ராஜ்குமார் மறைந்துவிட, அந்தப் படம் அப்படியே நிற்கிறது. இப்போது விக்ரமிற்குச் சொல்லியிருப்பது 'த்வித்வா' கதையா அல்லது வேறொரு புதியா கதையா என்பது தெரியவில்லை.

இயக்குநர் பவன் குமார்
இயக்குநர் பவன் குமார்
ஆக, விக்ரமின் 62வது படத்தை இயக்கப்போவது அஜய் ஞானமுத்துவா அல்லது பவன் குமாரா என்பதைப் பொருத்திருந்து பார்ப்போம்!