Published:Updated:

`ஒரு கதை சொல்லட்டுமா சார்?’ - பாலிவுட் ரீமேக்கில் விக்ரம் யார்.. வேதா யார்?

விக்ரம் வேதா
News
விக்ரம் வேதா

மாதவன் -விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 'விக்ரம் வேதா', 2017-ன் ப்ளாக்பஸ்டர் லிஸ்டில் இடம்பெற்றது.

மாதவன் - விஜய் சேதுபதி நடிப்பில் புஷ்கர் - காயத்ரி இயக்கத்தில் 2017-ல் வெளிவந்த படம், 'விக்ரம் வேதா'. சசிகாந்த் தயாரிப்பில் உருவான இப்படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்நிலையில், பாலிவுட்டில் இப்படம் ரீமேக் ஆக இருக்கிறது.

Saif Ali Khan - Aamir Khan
Saif Ali Khan - Aamir Khan

'சூது கவ்வும்', 'சேதுபதி' போன்ற படங்கள்தான் விஜய் சேதுபதிக்கு மாஸ் ஹீரோ என்ற இமேஜை உருவாக்கிக் கொடுத்தது. அதைத் தொடர்ந்து வெளிவந்த 'விக்ரம் வேதா' விஜய் சேதுபதி கரியரில் முக்கியமான படமாக அமைந்தது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

மாதவன் - விஜய் சேதுபதி காம்போவில் வெளியான இப்படம், மக்களிடைய வேற லெவல் ரீச்சைப் பெற்றது. சாம் சி.எஸ் இசையமைக்க, பி.எஸ்.வினோத் இப்படத்தை ஒளிப்பதிவு செய்திருந்தார். 'நியோ நாயர் ஆக்‌ஷன் த்ரில்லர்' ஜானரில் வெளியான இப்படம், தற்போது பாலிவுட்டில் ரீமேக் ஆக இருக்கிறது.

விக்ரம் - வேதா
விக்ரம் - வேதா

மாதவனாக சைஃப் அலி கானும், விஜய் சேதுபதியாக அமீர் கானும் நடிக்கின்றனர். தமிழில் இயக்கிய புஷ்கர் காயத்ரியே இதை பாலிவுட்டிலும் இயக்க அதிக வாய்ப்பு உள்ளது. மார்ச் 2020-ல் ஷூட்டிங்கை ஆரம்பித்து அந்த ஆண்டின் இறுதியிலேயே ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.