Published:Updated:

விக்ரம் செல்லப்பெயர், நிஜ ஸ்டன்ட்ஸ், பாரீஸில் ஷூட்டிங்! - `கோப்ரா' அப்டேட்ஸ்

கோப்ரா first look
News
கோப்ரா first look

விக்ரமின் 58-வது படமாக உருவாகிவரும் `கோப்ரா’ படத்தின் வெளிவராத தகவல்கள் இதோ...

பொதுவாகவே தமிழ் சினிமாவில் ஓர் இயக்குநர் கதை எழுதியபிறகு, அதில் கதாநாயகனாக நடிப்பதற்கு நடிகர் கமிட்டாவார். அதன்பிறகு, அந்த நடிகருக்கு ஏற்றமாதிரி கதையில் சில மாற்றங்கள் செய்வார்கள். ஆனால், சில முறை ஒரு நடிகருக்காகவே கதையும் எழுதப்படும். அப்படி `இமைக்கா நொடிகள்’ படத்தை முடித்தபிறகு, விக்ரமுக்காக இயக்குநர் அஜய் ஞானமுத்து இரண்டு கதைகளை எழுதியிருக்கிறார். அதில் ஒரு கதை அனைவருக்கும் பிடித்துப்போக, அதுதான் தற்போது `கோப்ரா’ எனும் படமாக தயாராகிவருகிறது.

Vikram
Vikram

இந்தப் படத்தின் பெயர் மட்டுமல்ல; படத்தில் விக்ரமின் செல்லப்பெயரும் `கோப்ரா’தானாம். அதுமட்டுமல்லாமல் இந்தப் படம் மூணு மொழிகளில் ரிலீஸ் செய்யப்படவிருப்பதால், மூன்று மொழிகளுக்கும் பொதுவான ஒரு பெயராக `கோப்ரா’ இருக்கும் என இதை வைத்திருக்கிறார்கள்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

`கோப்ரா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கிலேயே, விக்ரம் இந்தப் படத்தில் ஏழு கெட்டப்களில் நடிக்கிறார் என்பதைக் காட்டியிருந்தார்கள். அந்த ஏழு கெட்டப்களில் மூன்று கெட்டப்கள் வயதான கேரக்டர்களாகவும், இரண்டு கெட்டப்கள் விக்ரமின் இயல்பான தோற்றத்திலும் ஒரு கெட்டப் அரசியல்வாதி கேரக்டராகவும் இன்னொரு கெட்டப் சற்று குண்டாக இருக்கும் ஒரு வெளிநாட்டு இளைஞரைப் போலவும் இருந்தது.

இந்த ஃபர்ஸ்ட் லுக்கைப் பார்த்தப்பிறகு விக்ரம் ரசிகர்கள் அதைக்கொண்டாடினாலும், சிலர் `இதேபோல்தான் விக்ரம் ஏற்கெனவே நடித்த `கந்தசாமி’, `ராஜபாட்டை’ போன்ற படங்களிலும் இருந்தது. அப்போ அந்தப் படங்களின் நிலைமைதான் இந்தப் படத்துக்குமா’ எனக் கலாய்க்கவும் செய்தார்கள். `கோப்ரா’ படத்தைப் பொறுத்தவரைக்கும், இது கெட்டப்களுக்கான படமாக இருக்காதாம். கணக்குக்காக கெட்டப்களைப் போட்டுவிட்டு, படத்தில் அந்தக் கேரக்டரை கொஞ்சமாகப் பயன்படுத்துவதைப்போல் இல்லாமல், எல்லா கெட்டப்களுக்கும் இதில் முக்கியத்துவம் இருக்கும் என்கிறார்கள்.

Vikram
Vikram

`கோப்ரா’ படத்தில் ஏழு கெட்டப்களுக்காக விக்ரம் எப்படி கஷ்டப்பட்டாரோ, அதே அளவுக்கு சண்டைக் காட்சிகளுக்காகவும் மெனக்கெட்டிருக்கிறாராம். சில ரிஸ்க்கான சண்டைக்காட்சிகளைச் செய்ய, டூப் போடுபவர்களே தயங்கியபோது அதைத் துணிச்சலாக விக்ரம் செய்து முடித்திருக்கிறாராம். திலிப் சுப்பராயனின் ஸ்டன்ட் கோரியோவில் அனைத்து சண்டைக் காட்சிகளும் பெரிதாகப் பேசப்படும் என்கிறார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

`இமைக்கா நொடிகள்’ படத்தின் வில்லன் கேரக்டரில் வித்தியாசமான சாயிஸாக பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப்பை நடிக்க வைத்ததைப் போல், இந்தப் படத்திலும் வில்லன் கேரக்டருக்கு இந்திய கிரிக்கெட் அணியின் வீரரான இர்ஃபான் பதானை நடிக்க வைக்கிறார்கள். இர்ஃபான் பதான் கேரக்டரைப் போல், இந்தப் படத்தின் ஹீரோயினாக நடித்திருக்கும் `கே.ஜி.எஃப்’ ஹீரோயின் ஸ்ரீநிதி ஷெட்டி, மலையாள நடிகர் ரோஷன் மேத்யூ, `கென்னடி கிளப்’ படத்தில் நடித்திருந்த மீனாட்சி கோவிந்தராஜன், மிருணாளினி ரவி என இவர்களின் கேரக்டரும் வித்தியாசமாக இருக்குமாம்.

vikram 58
vikram 58

ஏப்ரல் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட `கோப்ரா’ திரைப்படம், மே மாதம் வெளியாகும் என சமீபத்தில் வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரிலேயே குறிப்பிட்டிருந்தார்கள். மே 1-ம் தேதி சூர்யா நடித்திருக்கும் `சூரரைப் போற்று’, தனுஷ் நடித்திருக்கும் `ஜகமே தந்திரம்’, `ஜெயம்’ ரவி நடித்திருக்கும் `பூமி’ என சில படங்கள் வருவதால், மே மாதத்தின் இறுதியில்தான் `கோப்ரா’ திரைப்படம் வெளியாவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன. இந்தியாவின் பல பகுதிகளில் `கோப்ரா’வின் படப்பிடிப்பை நடத்தியவர்கள், தற்போது பாரீஸ் நகரத்தில் படத்தின் க்ளைமேக்ஸ் காட்சிகளைப் படமாக்கி வருகிறார்களாம். விரைவில் சென்னைக்குத் திரும்பவிருக்கும் படக்குழு, அதன்பிறகே போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகளில் ஈடுபடவிருக்கிறது.