Published:Updated:

``சொந்த மாமாதான்... ஆனா, அவர் மூலமா வந்தா நெப்போட்டிஸம்!'' - விக்ரம் வீட்டிலிருந்து புது ஹீரோ

விக்ரமின் தங்கை மகன் அர்ஜுமன்
விக்ரமின் தங்கை மகன் அர்ஜுமன்

ஹீரோவாகும் விக்ரமின் தங்கை மகன் அர்ஜுமன்!

ஒவ்வொரு படத்துக்கும் தான் நடிக்கும் கதாபாத்திரத்தில் பயங்கர சேஞ்ச் ஓவர் காட்டுவது நடிகர் விக்ரமின் வழக்கம். தற்போது இவரது நடிப்பில் `கோப்ரா' தயாராக இருக்கிறது. படத்தின் க்ளைமாக்ஸ் காட்சிகள் மட்டும் படமாக்கப்பட வேண்டிய சூழலில் லாக் டெளன் வந்துவிட்டது. தவிர, `துருவநட்சத்திரம்' படமும் நிலுவையில் இருக்கிறது. இவ்விரண்டு போக, `பொன்னியின் செல்வன்', `மகாவீர் கர்ணன்', கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் படம் என விக்ரம் பிஸியோ பிஸி!

அவரின் மகன் துருவ், `ஆதித்யா வர்மா'வில் அறிமுகமாகி அனைவராலும் கவனிக்கப்பட்டார். தற்போது கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் படத்தில் தன் அப்பாவோடு சேர்ந்து நடிக்கவிருக்கிறார். தவிர, தமிழ் சினிமாவில் ரொமான்டிக் ஹீரோவுக்கான இடம் காலியாக இருப்பதால் துருவ்வை அதில் பொருத்திப் பார்க்க பல இயக்குநர்கள் கதை சொல்லி வருகின்றனர். இந்நிலையில், நடிகர் விக்ரமின் தங்கை அனிதாவின் மகன் அர்ஜுமனும் ஹீரோவாக அறிமுகமாக இருக்கிறார். ஆம்! `தாதா 87' படத்தை இயக்கிய விஜய் ஶ்ரீ இயக்கத்தில் உருவாகும் `பொல்லாத உலகில் பயங்கர கேம்' படத்தில் அர்ஜுமன்தான் ஹீரோ. இதில் ஐஸ்வர்யா தத்தா உட்பட ஐந்து நாயகிகள் நடிக்கின்றனர். அர்ஜுமனைப் பற்றி அர்ஜுமனிடமே கேட்கலாம் என்று அவருக்கு போன் அடித்தேன்!

விக்ரமின் தங்கை மகன் அர்ஜுமன்
விக்ரமின் தங்கை மகன் அர்ஜுமன்

``நான் விக்ரம் சாரோட தங்கச்சி பையன். சினிமா பின்னணி இருக்கிற குடும்பத்துல இருந்து வந்ததுனால எனக்கு சினிமா மேல பெரிய ஆசையும் ஆர்வமும் இருந்தது. என் தாத்தாதான் சின்ன வயசுல இருந்தே `நீ நடிகன் நீ நடிகன்'னு சொல்லிட்டே இருப்பார். அங்கதான் எனக்கான கனவு ஆரம்பிச்சது. நிறைய விளம்பர படங்கள்ல நடிச்சிருக்கேன். `மதராசி', `வேதம்' இந்த ரெண்டு படங்கள்லயும் அர்ஜுன் சாரோட சின்ன வயசு கேரக்டர்ல நடிச்சிருக்கேன். என் அப்பா கத்தார்ல ரியல் எஸ்டேட் பிஸினஸ் பண்றார்.

சினிமா எனக்கு பேஷன்னு அப்பாவுக்கு நல்லா தெரியும். இருந்தாலும் `டிகிரி படிச்சி முடிச்சுட்டு சினிமாவுக்கு போ. ஒரு பேக்அப் வேணும்'னு என்னை வழிநடத்தினது அப்பாதான். சிங்கப்பூர் போய் அங்க பிஸினஸ் படிச்சேன். படிச்சு முடிச்சுட்டு சென்னை வந்தவுடன், சினிமால நடிக்க ஆரம்பிக்கலாம்னு முடிவு பண்ணி நிறைய கதைகள் கேட்க ஆரம்பிச்சேன். அப்படி பாரதிராஜா சார் இயக்கத்துல ஒரு படத்துல நடிக்க கமிட்டானேன். ஷூட்டிங் ஆரம்பிச்சு ரெண்டு ஷெட்யூல் முடிஞ்சிருந்த நிலையில், சில காரணங்களால அந்தப் படம் டிராப் ஆகிடுச்சு.

விக்ரமின் தங்கை மகன் அர்ஜுமன்
விக்ரமின் தங்கை மகன் அர்ஜுமன்

அப்புறம், நிறைய கதைகள் கேட்டுட்டு இருந்தேன். அப்படித்தான், `பொல்லாத உலகில் பயங்கர கேம்' பட வாய்ப்பு கிடைச்சது. இந்தப் படத்துல நடிக்க என்னை டைரக்டர் விஜய் ஶ்ரீ சார் நம்பினார். நிறைய சவாலான காட்சிகள் இருந்தது. எல்லா இடங்கள்லயும் எனக்கு உறுதுணையா இருந்தார். இதுல எனக்கு நாலஞ்சு கெட்டப்பும் இருக்கு. முதல் படத்திலேயே நிறைய எமோஷன்களைக் கடத்துறது ரொம்ப சவாலா இருந்தது. நிறைய கத்துக்கிட்டேன். விக்ரம் மாமா பத்தியும் சொல்லியே ஆகணும். விக்ரம் மாமா இந்தத் துறையில பெரிய லெஜண்ட். சின்ன வயசுல இருந்தே அவர் கூடவே இருந்து அவரைப் பார்த்து நிறைய பிரமிச்சிருக்கேன்.

`தில்', `தூள்', `சாமி' இந்தப் படங்கள்ல வர்ற வசனங்கள் எல்லாம் அப்படியே மனப்பாடமா தெரியும். அவரை அவ்ளோ ரசிச்சிருக்கேன். எனக்கு மட்டுமல்ல சினிமாவுக்கு வரணும்னு நினைக்கிற எல்லோருக்கும் அவர் இன்ஸ்பிரேஷன்தான். மாமா மூலமா சினிமாவுக்கு வரணும்னு நான் நினைக்கலை. எனக்கு என் அம்மாதான் ரொம்ப சப்போர்ட். முதல் படம் பண்ணும்போது, விக்ரம் மாமாகிட்ட சொன்னேன். ரொம்ப சந்தோஷப்பட்டார். வாழ்த்தினார். தனியா சினிமாக்குள்ள போய் நமக்குனு ஒரு அடையாளத்தை உருவாக்கணும்னு நினைச்சிருக்கேன். நெப்போட்டிஸம் வட்டத்துக்குள்ள நான் வரல. நிறைய வித்தியாசமான கேரக்டர்கள்ல நடிச்சு நல்ல நடிகன்னு பெயர் வாங்கணும்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு