Published:Updated:

`என் படத்துக்கு இவர்தான் சரியான ஆள்!'- விக்ரமின் தங்கை மகனை இயக்கும் `தாதா 87' இயக்குநர்

Arjuman - Vikram
Arjuman - Vikram

சாருஹாசன் நடிப்பில் விஜய் ஶ்ரீ இயக்கிய படம், `தாதா 87'. கீர்த்தி சுரேஷின் பாட்டியான சரோஜா, இப்படத்தில் நடித்திருந்தார். அதைத் தொடர்ந்து, தற்போது விஜய் ஶ்ரீ இயக்கும் படம் `பொல்லாத உலகில் பயங்கர கேம்'. காமெடி - த்ரில்லர் ஜானரில் இப்படம் உருவாகி வருகிறது.

ஐஸ்வர்யா தத்தா, ஜூலி, `நான் கடவுள்' ராஜேந்திரன் போன்றவர்களும் இப்படத்தில் நடிக்கின்றனர். விக்ரமின் தங்கை அனிதாவின் மகனான அர்ஜூமன், இப்படத்தின்மூலம் தமிழ் சினிமாவுக்கு கதாநாயகனாக அறிமுகமாகிறார். இதுகுறித்து பேசிய இயக்குநர், ``விக்ரமின் தங்கை மகனான அர்ஜூமன், ஒரு ஆர்வமுள்ள நடிகர். சினிமாவில் நடிப்பதற்காக நடிப்பு, நடனம், சண்டை ஆகியவற்றை முறைப்படி கற்றுக்கொண்டுள்ளார். மேலும், இந்தப் படத்திற்கு இவர்தான் சரியான தேர்வாக இருக்கும் என்று நானும் நினைத்தேன். கதாநாயகனாக இவரை அறிமுகப்படுத்துவதில் சந்தோஷம்'' என்றார்.

அர்ஜூமன்
அர்ஜூமன்

படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், இதன் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் திருச்சியிலும் கோவாவிலும் படமாக்கப்பட இருக்கிறது. அர்ஜூமன், ஐஸ்வர்யா தத்தா, `நான் கடவுள்' ராஜேந்திரன் ஆகியோரின் போர்ஷன்கள் அங்கு படமாக்கப்பட இருக்கின்றன.

அடுத்த கட்டுரைக்கு