Published:Updated:

விருமன்: "இந்தப் பிரச்னையைச் சொன்னால் அரசியலாகிடும்!"- அதிர வைக்கும் இயக்குநர் முத்தையா

விருமன்

"நான் வளர்ந்த சூழல் அப்படி. சிலபேர்கிட்ட கதை சொல்லும்போது ’நீங்க அந்தக் காலத்துல இருக்கீங்களே... பழசா இல்லையா’ன்னு சொல்லியிருக்காங்க. அவங்ககிட்ட நான் சொல்ற ஒரு உதாரணம் என்னன்னா..." - இயக்குநர் முத்தையா

விருமன்: "இந்தப் பிரச்னையைச் சொன்னால் அரசியலாகிடும்!"- அதிர வைக்கும் இயக்குநர் முத்தையா

"நான் வளர்ந்த சூழல் அப்படி. சிலபேர்கிட்ட கதை சொல்லும்போது ’நீங்க அந்தக் காலத்துல இருக்கீங்களே... பழசா இல்லையா’ன்னு சொல்லியிருக்காங்க. அவங்ககிட்ட நான் சொல்ற ஒரு உதாரணம் என்னன்னா..." - இயக்குநர் முத்தையா

Published:Updated:
விருமன்
`விருமன்' ரிலீஸ் மகிழ்ச்சியில் இருக்கிறார் இயக்குநர் முத்தையா. "ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு. கார்த்தி சாரோட குரு மணிரத்னம் சார், அவரோட இயக்கத்தில் ரெண்டு படங்கள் பண்ணியிருக்கார். அதன்பிறகு எனக்கு அந்த வாய்ப்பைக் கொடுத்திருக்கார். `கொம்பன்' படத்துக்குப் பிறகு `விருமன்' படத்தை இயக்கியிருக்கேன்" பூரிக்கிறார் இயக்குநர் முத்தையா.

ஆறு படங்கள் பண்ணிட்டீங்க... வெற்றியைத் தக்க வச்சுக்கணுமேன்னு பயமிருக்கா?

விருமன் திரைப்படத்தின் ஆடியோ ரிலீஸ்
விருமன் திரைப்படத்தின் ஆடியோ ரிலீஸ்
என்.ஜி.மணிகண்டன்

"இல்லையே! நான் எப்பவுமே ஹிட்டுக்காக ஒர்க் பண்றதில்ல. அப்படி ஒர்க் பண்ண ஆரம்பிச்சா ஒவ்வொரு நேரமும் ஒவ்வொரு சூழல் ஏற்படும். 'கண்டிப்பா என் படம் தப்பு பண்ணாது'ன்னு கேரன்ட்டியா எண்ண வைக்கற மாதிரி படம் பண்ணிட்டிருக்கேன். ஸ்கிரிப்ட்ல கவனம் செலுத்துவேன். 'இந்த இடம் இருந்தால் படம் நிக்கும்... இது சரியா இருக்கும்'ன்னு நினைச்சுதான் எழுதுவேன். ஆனா, ஹிட்டை மட்டும் மனசுல வச்சு ஒர்க் பண்ண ஆரம்பிச்சா, நாம ஹிட்டுன்னு நினைப்போம், அது ஹிட் அடிக்காமல் போயிடும். அந்தந்த நேரத்துக்கேத்த மாதிரி ஹிட்டுக்கான விஷயங்கள் மாறிகிட்டே இருக்கும். எதிர்பார்க்காத டைம்ல ஹிட்டாகிடும்.

'கடைசி விவசாயி' ரொம்பப் பிடிச்ச படம். அதைப் பார்த்துட்டு, அந்த லொக்கேஷன்களைப் பார்க்கப் போயிருந்தேன். அப்பதான் ஒரு விஷயம் தெரிஞ்சது. நூறு நாள் வேலைவாய்ப்பு திட்டம் மூலமா விவசாயத்தை அழிச்சிட்டிருக்காங்கன்னு புரிஞ்சது. மக்கள் சும்மா உட்கார்ந்து சீட்டு விளையாடிட்டு இருக்கறதைப் பார்த்தேன். இன்னொரு விஷயமும் சொன்னாங்க. ஆனா, அதைச் சொன்னால் அரசியலாகிடும். ஏன்னா, அதைச் சொன்னால் இப்படியெல்லாம் செக் வச்சு மக்களைச் சோம்பேறி ஆக்குறாங்களான்னு நினைக்கத் தோணும்."

'விருமன்' படத்தில்...
'விருமன்' படத்தில்...

ஃபேமிலி ஆடியன்ஸை எப்பவும் டார்கெட் பண்றீங்களே?

"நான் வளர்ந்த சூழல் அப்படி. சிலபேர்கிட்ட கதை சொல்லும் போது ’நீங்க அந்தக் காலத்துல இருக்கீங்களே... பழசா இல்லையா’ன்னு சொல்லியிருக்காங்க. அவங்ககிட்ட நான் சொல்ற ஒரு உதாரணம்... கூழ் பழசுதான். ஆனா, என்னிக்குமே அது ஆரோக்கியம். இன்னிக்கு நாம கூழ், கத்தாழை ஜூஸ்னு குடிக்கிறோம். கருப்பட்டிக் காப்பின்னு ஆச்சரியமா கேட்டுக் குடிக்கிறாங்க. நான் வெல்லத்தைப் போட்டு டீ போட்டுக் குடுக்கறப்ப, 'என்னங்க நீங்க, வெல்லதைப் போட்டுக் குடுக்குறீங்க... சீனி போட்டுக் குடுங்க. ஊருக்கேத்த மாதிரி மாறலையா?'ன்னு கேட்டிருக்காங்க. நல்ல விஷயங்கள் எல்லாமே நமக்குத் தாமதமாகத்தான் தெரியுது. அதுக்காக உறவுகள் பத்திச் சொல்றப்ப ஓ...ன்னு ஒப்பாரி வச்சு அழுற டிராமாவா பண்ணிடக்கூடாது. கண்ணு மைல்டா கலங்குற மாதிரி எமோஷனைச் சொன்னாப் போதும்."

யுவனோடு ஒர்க் பண்ணியாச்சு. இளையராஜாவோடு எப்போ எதிர்பார்க்கலாம்?

முத்தையா
முத்தையா

"இளையராஜாவோடு படம் பண்ணணும்னுதான் சென்னைக்கு வர்றோம். நான் உதவி இயக்குநரா வரும்போது 'அரவிந்தன்' படம் மூலமா யுவன் வெளியே வர்றார். அடுத்தடுத்து டிரெண்டிங்கா பண்ணிட்டிருக்கார். இளையராஜா சாரோடு ஒர்க் பண்ற கனவு இன்னமும் இருக்கு. விரைவில் நடக்கும். அவருக்கான விதத்தில் கதையும், அதன் களத்தையும் வலுவாக் கொடுக்கணும்னு நினைக்கறேன். இசையில் அவர் எப்படித் தடம் மாற மாட்டாரோ அப்படி ஒரு தடம் மாறாத படத்தை அவர்கிட்ட கொண்டு போக நினைக்கறேன்."