Published:Updated:

ஜெயகாந்தன் நாவலுக்கும் இந்தப் படத்துக்கும் தொடர்பு கிடையாது!

ரித்விகா
பிரீமியம் ஸ்டோரி
ரித்விகா

வெவ்வேறு சமூகச் சூழ்நிலைகளி லிருந்து வந்த நான்கு பேர், தெரிந்தோ தெரியாமலோ ஒரு சம்பவத்தில் சம்பந்தப்பட்டிருக்காங்க

ஜெயகாந்தன் நாவலுக்கும் இந்தப் படத்துக்கும் தொடர்பு கிடையாது!

வெவ்வேறு சமூகச் சூழ்நிலைகளி லிருந்து வந்த நான்கு பேர், தெரிந்தோ தெரியாமலோ ஒரு சம்பவத்தில் சம்பந்தப்பட்டிருக்காங்க

Published:Updated:
ரித்விகா
பிரீமியம் ஸ்டோரி
ரித்விகா

“இப்ப இருக்கிற தலைமுறைக்கு அழுத்தம் திருத்தமா ஒரு கதை சொல்ல விரும்பினேன். ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ தலைப்பு இந்தக் கதைக்கு ரொம்பவும் பொருத்தமாக இருந்தது. ஜெயகாந்தனின் புகழ்பெற்ற நாவலின் தலைப்பு. எமோஷனல் டிராமா. ஹீரோன்னு யாரையும் குறிப்பிட முடியாது. கதாபாத்திரங்களின் வழியே போகும் கதை. கேரக்டர்களின் வித்தியாசமான தன்மையில் கதை வேறு மாதிரியாகப் போகும். இவர்கள் யாரும் வானத்திலிருந்து குதித்தவர்கள் இல்லை. தினசரி வாழ்க்கையில் நாம் சந்திக்கிறவர்கள்; அல்லது உடன் இருக்கிற நண்பர்கள். அடுத்த வீட்டுக்காரராகக்கூட இருக்கலாம். நீங்கள் ஒரு தடவை சண்டை போட்டு மறந்திருக்கலாம். அதை விடுங்கள். சில சமயம் நம் முகத்தைக் கண்ணாடியில் பார்ப்பதுபோல இருப்பார்கள். இவர்களெல்லாம் சேர்ந்ததுதான் ‘சில நேரங்களில் சில மனிதர்கள்.’ ’’ நிதானமாகப் பேசுகிறார், அறிமுக இயக்குநர் விஷால் வெங்கட். இயக்குநர்கள் சந்துரு, மதுமிதாவிடம் பாடம் பயின்றவர்.

விஷால் வெங்கட்
விஷால் வெங்கட்

‘`வெவ்வேறு சமூகச் சூழ்நிலைகளி லிருந்து வந்த நான்கு பேர், தெரிந்தோ தெரியாமலோ ஒரு சம்பவத்தில் சம்பந்தப்பட்டிருக்காங்க. இந்தச் சம்பவம் அவர்கள் வாழ்க்கையில் என்ன மாற்றத்தைக் கொண்டு வருது, என்ன விதத்தில் பாதிக்குது என்பதுதான் கதை. அவர்கள் அந்தச் சம்பவத்தில் கிடைத்த அனுபவத்தைக் கொண்டு மாறுவார்களா, மாட்டார்களா, என்ன நடந்தது என்பதும் இந்தக் கதையில் வருகிறது.”

ஜெயகாந்தன் நாவலுக்கும் இந்தப் படத்துக்கும் தொடர்பு கிடையாது!
ஜெயகாந்தன் நாவலுக்கும் இந்தப் படத்துக்கும் தொடர்பு கிடையாது!

``அசோக் செல்வன், மணிகண்டன், கே.எஸ்.ரவிக்குமார், பானுப்ரியான்னு ஒரு பெரிய செட் படத்தில் இருக்கே?’’

‘`அசோக்செல்வன் இப்ப பொண்ணுங்களுக்குப் பிடிச்ச ஹீரோ. நாசர் பையன் அபிஹாசன் முக்கியமான ரோலில் வர்றார். இந்தப் படத்தில் இவங்களுக்கெல்லாம் ஒரு நல்ல இடம் இருக்கு. மணிகண்டன் ‘ஜெய்பீம்’ படத்திலிருந்து இன்னும் பளிச்சென்று வந்திருக்கார். ரெயா, ரித்விகா, அஞ்சு குரியன், இளவரசு, பானுப்ரியா என்று அனுபவத்தில் சிறந்தவர்கள் இருக்கிறார்கள். கனவுகள், உறவுகள், பிரிவுகள்னு வந்து சேர்கிற துயரம், தேடிக்கிட்ட பிரச்னைகள்னு டீல் பண்ணுகிற படத்துக்கு நல்ல நடிகர்கள் கிடைத்திருக்கிறார்கள்.

எங்களை மாதிரி படம் பண்றவங்களுக்கு ஒரு நல்ல டெக்னிக்கல் சப்போர்ட் வேணும். அதற்கு கேமராவுக்கு மெய்யேந்திரன், மியூசிக்கிற்கு ரதன்னு எனக்கு அமைஞ்சது. தயாரிப்பாளர்கள் அஜ்மல்கான், ரெயா, அக்பர், ரவீந்திரன் ஆகியோருக்கு நன்றி.

ஜெயகாந்தன் நாவலுக்கும் இந்தப் படத்துக்கும் தொடர்பு கிடையாது!
ஜெயகாந்தன் நாவலுக்கும் இந்தப் படத்துக்கும் தொடர்பு கிடையாது!

இந்தக் கதைக்களன், உறவு எல்லாம் நம்மிடையே ஏற்கெனவே இருப்பதுதான். இதை எனக்கான உணர்வாகக் காட்சிப்படுத்தியது மட்டும்தான் புதுசு. இந்த மனிதர்களின் உறவுகள், பிரச்னைகள், இடையறாத வியப்புகள், தொடர் ஆச்சரியங்கள், புதிய புதிய புரிதல்கள் இவற்றையெல்லாம் தொட்டுக் காட்டிவிட முடியாதா என்ற என் பிரியத்தின் முயற்சியே இந்தப் படம்.”

ஜெயகாந்தன் நாவலுக்கும் இந்தப் படத்துக்கும் தொடர்பு கிடையாது!
ஜெயகாந்தன் நாவலுக்கும் இந்தப் படத்துக்கும் தொடர்பு கிடையாது!

``எழுத்தாளர் ஜெயகாந்தனால் நாவலாக எழுதப்பட்டுத் திரைப்படமான ‘சிலநேரங்களில் சிலமனிதர்கள்’ தலைப்பை இந்தப் படத்துக்கு வைக்கக்கூடாது, மாற்றவேண்டும் என்று ஜெயகாந்தனின் வாரிசுகள் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்களே?’’

“இப்போதுதான் அந்த எதிர்ப்பு எங்கள் கவனத்திற்கு வந்திருக்கிறது. இதைப் பற்றி யோசிக்க இன்னும் நேரம் அவகாசம் தேவைப்படுகிறது. பார்க்கலாம். ஆனால் பெயர் தவிர அந்த நாவலுக்கும், படத்தின் கதைக்கும் துளியும் தொடர்பு கிடையாது.’’