Published:Updated:

கதையைக் கேட்டு `சபாஷ்' போட்ட விஷால்; ஆனந்த் சங்கர் இயக்கும் அடுத்த படம்!

Vishal
Vishal

பிரபு, குஷ்பு நடிப்பில் பி.வாசு இயக்கிய 'சின்னதம்பி' திரைப்படம் சில்வர் ஜூப்ளியைக் கொண்டாடியது. இந்தப் படத்தைத் தயாரித்தவர் கே.பாலு.

22 வருடங்களுக்கு முன்பு தனது தயாரிப்பில் நடிப்பதற்காக நடிகர் கார்த்திக்கிடம் 22 லட்ச ரூபாயைக் கொடுத்துவிட்டு அந்தப் பணத்தைக் கேட்டு தமிழ்த் தயாரிப்பாளர் சங்கத்துக்கு அலைந்தவர் கே.பாலு. நீண்ட இடைவெளிக்குப் பிறகு, தற்போது புதுப்படத் தயாரிப்பில் இறங்கியிருக்கிறார்.

விஷால் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தைத் தயாரிக்கத் திட்டமிட்டு அவருக்கு அட்வான்ஸ் தொகையையும் கொடுத்துவிட்டார். விஷால் நடிக்கப்போகும் இந்தப் படத்தை ஆனந்த் சங்கர் இயக்குகிறார். இவர் கே.பாலசந்தர் இயக்கிய 'தண்ணீர் தண்ணீர்' படத்துக்குக் கதை எழுதிய கோமல் சுவாமிநாதனின் பேரன். ஆரம்பத்தில் பாலிவுட் டைரக்டர் சித்தார்த் ஆனந்த்திடம் ஆனந்த் சங்கர் உதவி டைரக்டராக வேலைக்குச் சேர்ந்தார்.

Anand Shankar
Anand Shankar

அதன் பிறகு, ஏ.ஆர்.முருகதாஸ் 'ஏழாம் அறிவு' இயக்கியபோது அவரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். அடுத்து 'துப்பாக்கி'யில் இணை இயக்குநரானார். அதன்பின்னர் விக்ரம் பிரபு நடித்த 'அரிமா நம்பி', விக்ரம் இரட்டை வேடங்களில் நடித்த 'இருமுகன்' ஆகிய படங்களை இயக்கினார். ஆனந்த் சங்கர் இயக்கிய இரண்டு படங்களும் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தன. விஷாலிடம் புதுப் படத்துக்கான கதையைச் சொல்ல, முழுக் கதையும் கேட்டபிறகு 'சபாஷ்' என்று துள்ளிக்குதித்து ஆனந்த்தைக் கட்டிப்பிடித்து பாராட்டி இருக்கிறார்.

தற்போது சுந்தர்.சி இயக்கிவரும் 'ஆக்‌ஷன்' படத்தில் பிஸியாக நடித்துவரும் விஷால், விரைவில் கே.பாலு தயாரிப்பில், ஆனந்த் சங்கர் இயக்கும் புதுப்படத்தில் நடிக்கவிருக்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு