Published:Updated:

`ஜீவி' இயக்குநரின் அடுத்த படத்தில் விஷ்ணு விஷால்!

'ஜீவி' படத்திற்குப் பிறகு, இயக்குநர் வி.ஜே.கோபிநாத் விஷ்ணு விஷாலை இயக்கவிருக்கிறார்!

விஷ்ணு விஷால்
விஷ்ணு விஷால்

அறிமுக இயக்குநர் வி.ஜே.கோபிநாத் இயக்கத்தில் பாபு தமிழ் கதை - வசனத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற படம், 'ஜீவி'. '8 தோட்டாக்கள்' படத்திற்குப் பிறகு, வெற்றி இதில் நடித்திருந்தார். மிகக் குறைவான பட்ஜெட்டில் த்ரில்லர் கதையை கொஞ்சம் அமானுஷ்யம் கலந்து சொல்லி அசரடித்திருப்பார்கள். இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, விஷ்ணு விஷாலை இயக்கவிருக்கிறார், வி.ஜே.கோபிநாத். இந்தப் படத்திற்கும் பாபு தமிழ்தான் கதை வசனம் எழுதுகிறார்.

விஷ்ணு விஷால் ட்வீட்
விஷ்ணு விஷால் ட்வீட்

எழில் இயக்கத்தில் 'ஜகஜால கில்லாடி', பிரபு சாலமன் இயக்கத்தில் 'காடன்' ஆகிய படங்கள் விஷ்ணு விஷாலின் நடிப்பில் தயாராகி வெளிவர இருக்கிறது. தவிர, சஞ்சீவ் இயக்கத்தில் விஜய் சேதுபதி வசனத்தில் விக்ராந்த்துடன் நடிக்கும் படம் ஆகஸ்ட் மாதம் தொடங்க இருக்கிறது. லைகா தயாரிப்பில் இயக்குநர் வசந்தபாலன் இயக்கத்தில் ஒரு படம் ஒப்பந்தமாகி இருக்கிறார். இதைத் தொடர்ந்து, 'ஜீவி' இயக்குநரின் படத்தை தானே தயாரித்து நடிக்க உள்ளார். அதை, தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.