Election bannerElection banner
Published:Updated:

`நடிப்பா... என் கதையே வேற!' - தன் கவிதைத் தொகுப்பை வெளியிடும் விஸ்மயா மோகன்லால்

Vismaya with Mohanlal
Vismaya with Mohanlal ( Photo: Instagram )

தன் கவிதைகள் மற்றும் ஓவியங்கள் அடங்கிய புத்தகத்தை பிப்ரவரி 14 அன்று வெளியிடுகிறார் விஸ்மயா மோகன்லால்.

நட்சத்திரங்களின் வாரிசுகள் பெரும்பாலும் தங்கள் பெற்றோர் ஜொலித்த அதே துறையைத் தேர்வு செய்வதே வழக்கம். சினிமா பிரபலங்களின் பிள்ளைகள் ஸ்பாட்-லைட்டிலேயே வளர்வதை அவர்கள் விரும்பவில்லை என்றாலும்கூட பல நேரங்களில் திரைத்துறைக்குள் தங்களை அறியாமலேயே நுழைந்துவிடுகிறார்கள். சிலர்தான் தனித்தன்மையால் இன்னாரென்று அடையாளம் கண்டுகொள்ளப்படுகிறார்கள்.

Vismaya mohanlal
Vismaya mohanlal
Photo: Instagram

அந்த வகையில் மோகன்லாலின் மகள் விஸ்மயா எழுத்தில் கவனம் செலுத்தி வருகிறார். இவர் எழுதிய புத்தகம் காதலர்கள் தினத்தன்று வெளிவரவிருக்கிறது. விஸ்மயாவின் பல வருட சிந்தனைகளின் தனித்தன்மையுள்ள தொகுப்பே இந்த`Grains of Stardust' புத்தகம்.

பொது நிகழ்ச்சிகள் எதிலும் கலந்துகொள்ளாமல் மீடியா வெளிச்சத்திலிருந்து ஒதுங்கியே இருந்து வந்த இவர் ஒரு திரைப்பட விழாவின்போது குடும்பத்தோடு பங்கேற்றிருந்தார். அதன் பின் அவர் திரைப்படங்களில் நடிக்க இருப்பதாகத் தொடர்ந்து செய்திகள் வெளியாகி வந்தன. ஆனால், அவற்றில் கவனம் செலுத்தாமல் அவர் தனக்குள் இருக்கும் கவிதை மற்றும் ஓவியத் திறமை பற்றி சமூக வலைதளங்களில் தெரியப்படுத்தியிருந்தார்.

`Grains of Stardust'
`Grains of Stardust'
22 கிலோ எடைகுறைத்த விஸ்மயா மோகன்லால்... வெயிட்லாஸ் சீக்ரெட் என்ன தெரியுமா?

இந்நிலையில்தான் தன் கவிதை மற்றும் ஓவியங்கள் அடங்கிய புத்தகத்தை வெளியிடுகிறார் விஸ்மயா. தன் மகளின் முதல் புத்தகமான `Grains of Stardust' பிப்ரவரி 14 அன்று வெளியாகிறது என நடிகர் மோகன்லால் பெருமையுடன் சமூக வலைதளங்களில் பகிர்ந்திருக்கிறார்.

``வாழ்க்கையின் வெவ்வேறு காலகட்டங்களில் நான் எழுதிய என் எண்ணங்களின் வெளிப்பாடே `Grains of Stardust' புத்தகம். சப்வேயில் காத்திருக்கும் வேளையில் ஃபேவரைட் பாடலின் பீட்டை கேட்கும்போது திடீரென தோன்றுவதையெல்லாம் மொபைல் போனில் குறித்து வைத்துவிடுவேன். அப்படித்தான் `Grains of Stardust' எதிர்பாராத ஒன்றாக என் கைகளில் வந்து சேர்ந்தது" என விஸ்மயா இயல்பாகக் கூறியிருப்பதும்கூட கவிதையைப் போலவே படிக்கத் தோன்றுகிறது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு