Published:Updated:

`` `மிஸ்டர் தனுஷ்... உங்க மாமாகிட்ட கேளுங்க'ன்னு சொல்ற விசு இதை யோசிக்கணும்!'' - `தில்லு முல்லு' விவகாரம்

ரஜினி, கமல்
ரஜினி, கமல்

`நெற்றிக்கண்' படத்தின் ரீமேக் தொடர்பாக இயக்குநர் விசு, தனுஷிடம் சில கேள்விகளை எழுப்ப, அது அவருக்கு எதிராகவே திரும்பியிருக்கிறது.

"ரஜினி நடிச்ச `நெற்றிக்கண்' படத்தை ரீமேக் பண்றதாகவும், தனுஷும் கீர்த்தி சுரேஷும் அதில் நடிக்கப்போறாங்கன்னும் கேள்விப்பட்டேன். அதுக்கான ரீமேக் ரைட்ஸை, மறைந்த இயக்குநர் பாலசந்தரின் மகள் புஷ்பா கந்தசாமிகிட்ட இருந்து வாங்கியிருக்கிறதாகவும் எனக்கு தகவல் வந்தது. அப்படி எதுவும் நடந்தா, அது எனக்கும் தெரிஞ்சே நடக்கணும். ஏன்னா, அந்தப் படத்தின் கதாசிரியர் நான். என்னைக் கேட்காம ரீமேக் பண்ணா வழக்குப் போடுவேன்.''

விசு
விசு
சீனாவில் கொரோனா... இத்தாலிக்குப் பறக்கும்  கமல்... `இந்தியன் - 2' அப்டேட்ஸ்!

இப்படிப் பேசி, நடிகர் விசு வெளியிட்டிருக்கும் வீடியோ குறித்துதான் கடந்த சில தினங்களாக கோலிவுட்டில் சலசலப்பு ஏற்பட்டிருக்கிறது. 20 நிமிடங்களுக்கும் மேலாக ஓடும் அந்த வீடியோவில், ஏற்கெனவே ரீ-மேக் செய்யப்பட்ட `தில்லு முல்லு' தொடர்பாக சில விஷயங்களையும் விசு பகிர்ந்திருந்தார்.

" 'தில்லு முல்லு' படத்துக்கு வசனம் எழுதினதும் நான்தான். சில வருஷங்களுக்கு முன்னாடி வேந்தர் மூவிஸ் அதை ரீ மேக் செய்து `தில்லுமுல்லு 2'னு எடுத்தப்பவும் எங்கிட்ட கேட்கலை. அதுக்காக நான் போட்ட வழக்கு இன்னும் நடந்திட்டிருக்கு'' என்று குறிப்பிட்டிருந்தார்.

" 'தில்லு முல்லு' படமே இந்தியில வெளியான `கோல் மால்' படத்தோட ரீமேக்தான். அந்த இந்தி தயாரிப்பாளர்கிட்ட இருந்து பாலசந்தருக்கு அதோட உரிமையை வாங்கித்தந்தது, என் கணவர் ஏ.எல்.எஸ்.கண்ணப்பன்தான். இதனால அந்த விவகாரத்துல என்ன நடந்ததுனு எனக்குத் தெரியும்" என்கிறார் கண்ணப்பனின் மனைவி ஜெயந்தி கண்ணப்பன். அவரிடம் பேசினோம்.

ஜெயந்தி கண்ணப்பன்
ஜெயந்தி கண்ணப்பன்

"இந்தியில அமோல் பலேகர் நடிச்சு ஹிட்டான `கோல் மால்' படத்தோட தமிழ் ரீமேக்ல நடிக்க ஆசைப்பட்டது கமல்தான். ஆனா, பாலசந்தர் அந்தப் படத்தோட உரிமையை வாங்க விரும்பினார். `கோல் மால்' படத்தோட தயாரிப்பாளர் குடும்பத்துக்கு ஏ.எல்.எஸ் ஃபேமிலி நல்ல அறிமுகம்கிறதால எங்ககிட்ட வந்தார் பாலசந்தர். அவருக்காக அந்தத் தயாரிப்பாளர்கிட்ட பேசி அதோட உரிமையை வாங்கிக் கொடுத்தவர் என்னோட கணவர் கண்ணப்பன்.

பாலசந்தருக்கு உரிமை கிடைச்சிடுச்சு. ஆனா, அவர் கமலை ஹீரோவா நடிக்க வைக்காம ரஜினியை வெச்சு பண்ணதுக்குப் பின்னாடி ஒரு கதை இருந்ததா சொல்றாங்க. `மரோ சரித்ரா' படம் தொடர்பா ஒரு வாரப் பத்திரிகையில பேசியிருந்த கமல், `என்னோட ரியல் லைஃபே `மரோ சரித்ரா'வுல கதையாகிடுச்சி'ங்கிற அர்த்தத்துல பேசிட்டார்னும், அப்படின்னா எனக்கு என்ன கதை வறட்சியான்னு பாலசந்தர் கொந்தளிச்சிட்டாருன்னும் அப்போ பேசிக்கிட்டாங்க. இந்த வருத்தமே `தில்லு முல்லு' படத்துல ரஜினி நடிக்கக் காரணமாகியிருக்கு.

``ஒருமுறை ஜெயிச்சிட்டா ஒத்துக்கமாட்டாய்ங்க... ஒவ்வொருமுறையும் ஜெயிக்கணும்!'' - சிவகா  பிறந்தநாள் ஸ்பெஷல்

இப்போ, விசு விவகாரத்துக்கு வர்றேன். ஏற்கெனவே இந்தப் படம் இந்தியில வெளிவந்திருக்கிற கதையா இருக்கும்போது, அவர் எப்படி அந்தக் கதைக்கு உரிமை கோர முடியும்? இவர்தான் கதாசிரியர்னா, அந்த மூலக் கதையை எழுதினவர் யார்? கதை மேல உரிமை கொண்டாடவேண்டியவர் அவர் இல்லையா?!

`தில்லு முல்லு 2' வெளியாகும் சமயம் படத்துக்குத் தடை கேட்டு விசு வழக்குப் போட்டார். கோர்ட்டும் `ஏற்கெனவே இந்தியில வெளியான படம்'னு சொல்லிதான் விசுவோட மனுவைத் தள்ளுபடி பண்ணாங்க. புஷ்பா கந்தசாமி உரிமையை விற்றது சம்பந்தமா நான் எதுவும் பேச விரும்பலை.

தில்லு முல்லு
தில்லு முல்லு

அதே நேரம் `மிஸ்டர் தனுஷ், உங்க மாமனார்கிட்ட என்னைப் பத்தி கேளுங்க'ன்னு ஆவேசமா பேசுற விசு, ஏற்கெனவே வெளியான ஒரு படத்தோட கதைக்கு ஏன் உரிமை கேட்கிறார்ங்கிறதுதான் என்னோட கேள்வி!" என்கிறார் ஜெயந்தி கண்ணப்பன்.

இந்த விவகாரம் தொடர்பாக விசுவிடமும் பேசலாம் எனத் தொடர்பு கொண்டபோது, "'தில்லு முல்லு 2' தொடர்பா நான் போட்டிருந்த மேல் முறையீடுல அடுத்த சில நாள்கள்ல தீர்ப்பு கிடைச்சிடும்னு தெரியுது. அது வந்தவுடனே பேசறேனே!" என முடித்துக்கொண்டார்.

அடுத்த கட்டுரைக்கு